- முனைவர் கி.செம்பியன்
நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு (452)
(நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்---தான் சேர்ந்த நிலத்தினதியல்பானே நீர் தன்றன்மை திரிந்து அந்நிலத்தின்றன்மைத்தாம்; மாந்தர்க்கு இனத்தியல்பு அறிவு (திரிந்து) அதாகும்---அதுபோல மாந்தர்க்குத் தாஞ்சேர்ந்த இனத்தியல்பானே அறிவுந் தன்றன்மை திரிந்து அவ்;வினத்தின்றன்மைத்தாம். எடுத்துக்காட்டுவமை. விசும்பின்கட்டன்றன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிநிலைக்கட்டன்மைத்தாய அறிவு பிறவினத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியுமென இதனால் அதனது காரணங் கூறப்பட்டது---பரிமேலழகர்)
மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு (454)
(அறிவு--அவ்விசேடவுணர்வு ஒருவற்கு மனத்து உளதுபோலக் காட்டி--- ஒருவற்கு மனத்;தின்கண்ணேயுளதாவதுபோலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும்---அவன் சேர்ந்தவினத்தின் கண்ணேயுளதாம்
மெய்ம்மை நோக்காமுன் மனத்துளதுபோன்று காட்டியும் பின்னோக்கியவழிப் பயின்றவினத்துளதாயுமிருத்தலின், காட்டியென இறந்தகாலத்தாற் கூறினார்
விசேடவுணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றேயுளதாவதென்பாரை நோக்கி, ஆண்டுப் புலப்படுந்துணையேயுள்ளது; அதற்கு மூலம் இனமென்பது இதனாற் கூறப்பட்டது---பரிமெலழகர்)
வள்ளுவரே அறிவு எங்கே இருக்கிறது?
நீ பிறந்துள்ள இனத்தில்!
இனத்தில் என்றால் சாதியிலா?
தமிழினத்தில்! இந்திய இனத்தில்! உலக இனத்தில்!
புரியும்படியாக........
உடல் மட்டும் இருந்தால்--ஓர் அறிவு---புல், மரம்.
உடலுடன் வாய் சேர்ந்தால்--ஈரறிவு---சிப்பி--மீன்.
மூக்குச் சேர்ந்தால்---மூவறிவு---கறையான், எறும்பு.
கண் சேர்ந்தால்--நான்கறிவு---தும்பி, வண்டு.
செவி சேர்ந்தால்---ஐயறிவு--பறவை, விலங்கு
இவை ஐந்துடன் மனம் சேர்ந்தால்---ஆறறிவு--மனிதன்.
அறிவு எத்தனை வகைப்படும்? ஆறு வகைப்படும்! இதுதான் ஆறுமுகமோ?
நகராமல் நின்ற இடத்திலிருந்து உண்பது, சுவாசிப்பது, உறங்குவது, கழிப்பது, இனப்பெருக்கம் காண்பது, மடிவது!
நின்ற இடம் மலையானால் அதற்கேற்ற உடல்!
கடற்கரையானால், பனிப்பகுதியானால், சதுப்புநிலமானால், நீரானால் அவற்றிற்கேற்ற உடல்!
நீர், பால், தேன், பழம், கறி, மீன், காய், கீரை, அரிசி, கோதுமை, மலம், மண், மான், வைக்கோல், புல், பிணம், முட்டை என உண்டு அறிய வாய்!
காற்றின் குணமறிய மூக்கு!
உருவங்களின் வேறுபாட்டையும் ஒளியின் நுட்பத்தையும் அறியக் கண்!
ஓசைகளின் வேறுபாடறியச் செவி!
இவற்றைப் பகுத்துணர மனம்; நினைவில் வைக்க மனம்; எண்ணிப்பார்க்க மனம்!
மனிதனுக்கு மட்டும் இந்த ஆறும் உண்டு!
ஆறும் கொண்ட மனிதப்பிறவி உயர்ந்த்;துதானே!
வள்ளுவரே, இவற்றை உமக்குக் கறிபித்தவர் யார்?
முன்னோன்;
விளங்குமாறு!
தொல்காப்பியன்!
அவர் தமிழரா?
அவர் எழுதத் தேர்ந்தெடுத்தது தமிழை!
நல்லது. வள்ளுவரே, மேலே மேலே!
இப்பொழுது எதிர்மறையாகச் சிந்திப்போம்.
இந்த ஆறில் ஒன்று இல்லாதுபோனால், அது தொடர்பான அறிவு இல்லையாகும்!
புரியவில்லை.
உடல் இல்லையேல் உயிர்கள் இல்லை!
நா இல்லையேல் பாற்சுவை, தேன் சுவை, பாகற்காயின் சுவை, மலத்தின் சுவை........
ஏன் இப்படி அருவருப்பு உணர்ச்சியை ஊட்டுகிறீர்?
நீவிர்மட்டும்தான் இயற்கையின் படைப்பா? பன்றிக்குத் தெரியும், அதன் அருமை பெருமை!
போன்ற சுவைகளின் அறிவு இல்லையாகும்!
மூக்கில்லையேல் பூமணம் அறிவோமா?
கண்ணின்றி நிறம், உருவம்......?
குயில் கூவுவதைச் செவியின்றி......?
மனம் இல்லையேல் சிந்தனை பிறக்காது!
புலிக்கு மானைப் பிடிக்கத் தெரியும்; பறவையைப் பிடிக்;கத் தெரியுமா? முதலையைப் பிடிக்கத் தெரியுமா?
மனிதன் சுடுவான்; வலை விரிப்பான்; தூண்டில் போடுவான்!
எல்லாம் மனத்தின் விளைவு!
இப்பொழுது புரிந்துவிட்டது வள்ளுவரே!
அறிவு உடம்பில், நாவில், மூக்கில், கண்ணில், செவியில், மனத்தில் இருக்கின்றது!
எனவே, மனித உடலில் பிரிந்து கிடக்கின்றது!
அஃது இயற்கை அறிவு!
ஆமாம், ஆமாம்; ஆனால் அஃது ஒரு பாதிதான் உண்மை!
மறுபாதி?
முன்பு சொன்னோமே, இனத்தில்சார்ந்துள்ள
தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டோமா?
ஆம்! அறிவு என்பது தனிமனிதனிடம் இல்லை; அவன் சார்ந்துள்ள இனத்தில்!
சார்ந்துள்ள இனம் என்பது?
மனிதனுக்குக் கிடைத்த பெற்றோர், நண்பர், ஆசிரியர், தெருக்காரர், ஊர்க்காரர், நாட்டுக்காரர்---இவர்களைப் பொறுத்தது!
எப்படி?
மனிதனைப் பிறப்பித்த பெற்றோர்;; படித்தவர்களாக அமைந்துவிட்டால்.......
அவனுக்கு அமைந்த நண்பர்கள் திருடர்களாக இருந்துவிட்டால்........
அமைந்த ஆசிரியர்கள் திறமை மிக்கோரானால்.....
கணக்கே வராத ஆசிரியரிடத்தில் கணக்குப் பாடம் படித்தால், கணக்கில் காதல் வருமா, பிணக்கு வருமா?
பக்கத்து வீட்டுக்காரர் இசைஞானியானால்......நமக்கு ஓரளவு இசைஞானம் கிட்டியிருக்கும் அன்றோ?
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொன்னது சும்மாவா?
பூவுடன் சேர்ந்த நாறும் மணம்பெறும்!
பன்றியுடன் சேர்ந்த பசுங்கன்றும் .......தின்னும்!
மனிதன் வீட்டிற்குள்ளேயே வளர்க்கப்பட்டால்;, நீச்சல் தெரியுமா? மரம் ஏறத் தெரியுமா?
மனிதன் உலகைப் பார்த்துப் பார்;த்து, நோக்கி நோக்கிக், கண்டு கண்டு, ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறான்!
அறிவு யாரிடத்தில்.......பழகும் இடத்தில!
பெற்றோரும், நண்பரும், ஆசிரியரும், ஊராரும், நாட்டோரும் என்ன சொல்லிக்கொடுத்தார்களோ அல்லது அவர்களிடமிருந்து அந்த மனிதனால் என்ன கற்றுக்கொள்ள முடியுமோ அதுதான் அறிவு!
மெத்தப்படித்த, பஞ்சபூதங்களின் நுட்பங்பளைக் கண்டறிந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு குழந்தையைக் கொண்டுவந்து இங்கு வளர்த்த்hல், அக்குழந்தை எப்படி வளரும்?
இங்குப் பிறந்த குகழந்தையை அங்குப் படிக்கவைத்தால்; எப்படி உயரும்?
அறிவு எங்கிருக்கிறது?
குழந்தையிடமா, அது வளர்க்ப்பட்ட நாட்டிலா?
நாடு அறிவி;ல் தாழ்ந்திருந்தால் குழந்தையும் தாழும்!
நாடு அறிவில் உயர்ந்திருந்தால் குழந்தையும் உயரும்!
வள்ளுவரே, சுருக்கமாகச் சொன்னால் சிறப்பாக அமையும். சுருக்கிச் சொன்னேன், புரியவில்லை என்றீர்; பெருக்கினேன்!
சுருக்குவோமா!
நீர் மழையாகப் பெய்யும்போது அதற்கு நிறமில்லை; சுவையில்லை! அது போன்றதே மனிதனின் இயற்கை அறிவு!
இயற்கையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ;அறிவு உண்டு என்கிறீர்!
ஆம்; ஐம்புலன்களுடன் ஆறாவதாகிய மனமும் ஆரோக்கியத்துடன் பிறந்துவிட்டாலே அறிவுதான்!
பிறகு?
அந்த மழைநீர் எந்த மண்ணிலே விழுகிறதோ, அந்த மண்ணி;ற்கேற்ற நிறத்தையும், சுவையையும், குணங்களையும் பெறுவதைப்போல, மனிதன் எந்த இனத்திலே வளர்கிறானோ அதற்கேற்ப அறிவு மாறுபடும்!
அறிவு மாறுபடுவதா?
ஆம்; திரிபு அடையும்!
அந்த அந்த இனத்திற்கேற்பத் திரிபடையும்!
இயற்கை அறிவு அப்படியே இருந்துவிடக்கூடாது!
காட்டிலே பிறந்து, எந்த மனிதனுடனும் பழகாவிட்டால், அந்த மனிதன் இயற்கை அறிவுடன் அப்படியே காட்டு மனிதனாக வளர்ந்திருப்பான்!
இயற்கை அறிவைப் பட்டைத் தீட்டவேண்டும்! வைரக்கல்லுக்குச் சாணைக்கல்லில் பட்டைத் தீட்டுவதுபோலப் பெற்றோரால், நண்பரால், ஆசிரியரால் பட்டைத் தீட்டப்படவேண்டும்! அப்பொழுதுதான் அறிவு ஒளி வீசும்!
அறிவு மனத்து உளதுபோலக் காட்டும்! ஆனால், அது மனித மனத்தி;ல் இல்லை; இனத்தில்!
வள்ளுவரே நன்றி, வணக்கம்!
கடைசியாக உம்மிடம் ஒன்று அறிய ஆசை!
இவ்வளவையும் யாரிடம் கற்றீர்?
மேற்சொன்னவற்றைத் திரும்ப எண்ணிப்பாரும், புரியும்!
எனது இனம் அப்படி! தமிழினம்!
(தொடரும்....)
|