|
||||||||
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? |
||||||||
![]()
எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (355)
(எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்----யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு----அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது அப்பொருளின் கணின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யணர்வாவது
பொருடோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்றவுண்மையைக் காண்பதென்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்றவழி அரசனென்பதோர் சாதியும், சேரமானென்பதொருகுடியும், வேழநோக்கினையுடடையானென்பதோர் வடிவும், சேயென்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனையாகலின், அவ்வாறுணராது நிலமுதல் உயிரீறாகிய தத்துவங்களின்றொகுதியெனவுணர்ந்து, அவற்;றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுளொடுக்கிக் கொண்டு சென்றாற் காரணகாரியங்களி;ரண்டுமின்றி முடிவாய் நிற்பதனையுணர்தலும், எப்பொருளென்ற பொதுமையான் இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறேயுணரப்படும்---பரிமேலழகர்)
கடல்நீர் நம் கண்களுக்கு நீல நிறமாகக் காட்சியளிக்கின்;றது; அதன் சுவையோ உவர்ப்பாக உள்ளது.
ஆற்றுநீரோ வேறு நிறம்; அதன் சுவை வேறு. குளத்து நீரோ இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறம் மாறுபடுகின்றது; அதன் சுவை வேறு.
சென்னையில் ஓடும் புகழ்பெற்ற கூவம் ஆற்று நீரோ பலவண்ணம்; அதன் சுவையில் எல்லாம் கலந்துள்ளன!
நம்முடைய ழுடிளநசஎயவழைn முடிவடைந்தது.
முடிவுக்கு வந்தோம்.
எனவே, நீருக்கு நிறமுண்டு; சுவையும் உண்டு!
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
விஞ்ஞான ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
நீருக்கு நிறமில்லை; சுவையுமில்லை!
நீரின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு!
வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்கின்றது; பறந்து சென்று அதைத் தொட்டுவிட்டு வரலாம்போல் தெரிகிறது; எல்லையிருப்பதுபோல் தென்படுகின்றது; அவைகளா உண்மை?
அறிவியல் என்ன செப்புகின்றது?
வானத்திற்கு நிறமில்லை; எல்லையுமில்லை!
அறிவியல் என்றால் என்ன?
மணவை முஸ்தபா அவர்களின் விளக்கம்:
மனிதன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும், அவற்றின் மறைபொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும், தன் சொந்த முயற்சியால் அறிவின் துணைகொண்டு, சோதனைகளின் உதவியோடு தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே அறிவியலாகும். (மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பப்ளிகேஷன்ஸ், சென்னை--40, 1997, பக்.57-58)
இக்காலத்தார் அறிவியல் என்றனர்.
வள்ளுவரோ அறிவு என்றார்!
மீண்டும் படிப்போம்:

மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கரப்பான் பூச்சிக்கு மீசை உள்ளது; அது மீசையா?
அதிலிருந்து ஆண்டனா(யுவெநnயெ) கண்டறியப்;பட்டது!
வெளவால் சுவரின் எல்லைவரை முட்டிக்கொள்வதுபோல் பறக்கிறது; ஆனால், திடீரென, முட்டிக்கொள்ளாமல் இடுக்கின் வழியே வெளியேறுகிறது; அது எப்படி?
ஆராய்ந்தால் அதன் உடலில் ஓர் ஒலிபரப்பும், ஒலி வாங்கியும் (வசயளெஅவைவநச ரூ சநஉநiஎநச) !
வெளவாலிலிருந்து ரேடார் (சுயுனுயுசு) !
இயற்கை எல்லாவற்றையும் கொண்டுள்ளது; இயற்கையைப் புரிந்துகொண்டால், அதைப்போல் எல்லாவற்றையும் செயற்கையாகப் படைக்கலாம்!
இயற்கையிலிருந்தே செயற்கை!
மீனின் உடலில் மின்சாரம்! அஃது எதிரியிடமிருந்து தப்பிக்க மின்சாரத்தைத் தண்ணீரில் செலுத்துமாம் (நுடநஉவசiஉ குiளா) !
மனிதன் மின்னாற்றலைக்; கண்டுபிடிப்பதற்கு முன்னமே இயற்கை மின்சக்தியைப் படைத்துள்ளது!
அதைப் புரிந்துகொண்டால் அறிவியல்!
காற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை; அதனைப் பகுத்து ஆராய்ந்தால்!
அதைப் புரிந்துகொண்டால் வானொலி நிலையம் அமைத்து, ஓரிடத்திலிருந்து வெகுதொலைவிற்குச் செய்தியைப், பாடலை, ஒருவர் குரலை, ஒன்றின் குரலை, அப்படியே பிசகாமல் அனுப்பலாம்; அம்முனையில் உள்ளவர் அவற்றை அப்படியே பிடித்துக்கொள்ளலாம்! ஒலிபோல ஒளியையும் அனுப்பலாம்; அதன்வழியே உருவங்களையயும் அனுப்பலாம்!
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
உடல் சாத்திரத்தில் நன்;றாகத் தேர்ச்சியடைந்துவிட்டால், ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தையைத் தோற்றுவிக்கவேண்டும் என்னும் அவசியமில்லை!
அணுவைப் புரிந்துகொண்டால் பிளக்கலாம்!
அணுவின் சக்;தியைப் பெறலாம்
பட்டாணிக் கடலை அளவுள்ள அணுவைப் பிளந்து கிடைக்கும் ஆற்றலால் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கலாம்!
தமிழில் உள்ள பொருள் என்னும் சொல் அயவவநச என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரானது
என்றும் கருத்துரைப்பர். (காணவும்: ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்ப்;;கம், திருச்சிராப்பள்ளி, 2002, ப.75)
எப்பொருள் எத்தன்;மைத்து ஆயினும் அப்;பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இந்தக்; குறள்தான் அறிவியல் (ளுஉநைnஉந) என்பதற்கு மிகச் சரியான விளக்கம்!
சிந்தித்துப் பாருங்கள்!
உலக அறிவியலாளரிடம் சொல்;லிப்பாருங்கள்!
இதைவிடச் சுருக்கமாக யாரும் சொல்லமுடியுமா?
ஆனால், இந்த விளக்கம் கேவலமான தமிழில் அல்லவா இருக்கின்றது!
இதைச் சொன்னவன் தமிழன்!
தமிழன் என்று படிப்பது? என்று தமிழ் படிப்பது?
தமிழன் இப்படிக் கூறியிருக்;கிறான் என்பது தமிழனுக்கே தெரியாதே!
வள்ளுவரே, நீவிர் எத்தனை மொழி கற்றீரோ, யாமறியோம்!
குறள் பாடுவதற்குத் தமிழைத் தேர்ந்தெடுத்தீரே, அதற்கு வணக்கம்!
- முனைவர் கி.செம்பியன் எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (355) (எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்----யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு----அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது அப்பொருளின் கணின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யணர்வாவது
பொருடோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்றவுண்மையைக் காண்பதென்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்றவழி அரசனென்பதோர் சாதியும், சேரமானென்பதொருகுடியும், வேழநோக்கினையுடடையானென்பதோர் வடிவும், சேயென்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின்கட் கற்பனையாகலின், அவ்வாறுணராது நிலமுதல் உயிரீறாகிய தத்துவங்களின்றொகுதியெனவுணர்ந்து, அவற்;றை நிலமுதலாகத் தத்தங் காரணங்களுளொடுக்கிக் கொண்டு சென்றாற் காரணகாரியங்களி;ரண்டுமின்றி முடிவாய் நிற்பதனையுணர்தலும், எப்பொருளென்ற பொதுமையான் இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறேயுணரப்படும்---பரிமேலழகர்)
கடல்நீர் நம் கண்களுக்கு நீல நிறமாகக் காட்சியளிக்கின்;றது; அதன் சுவையோ உவர்ப்பாக உள்ளது.
ஆற்றுநீரோ வேறு நிறம்; அதன் சுவை வேறு. குளத்து நீரோ இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறம் மாறுபடுகின்றது; அதன் சுவை வேறு.
சென்னையில் ஓடும் புகழ்பெற்ற கூவம் ஆற்று நீரோ பலவண்ணம்; அதன் சுவையில் எல்லாம் கலந்துள்ளன!
நம்முடைய ழுடிளநசஎயவழைn முடிவடைந்தது.
முடிவுக்கு வந்தோம்.
எனவே, நீருக்கு நிறமுண்டு; சுவையும் உண்டு!
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
விஞ்ஞான ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
நீருக்கு நிறமில்லை; சுவையுமில்லை!
நீரின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு!
வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்கின்றது; பறந்து சென்று அதைத் தொட்டுவிட்டு வரலாம்போல் தெரிகிறது; எல்லையிருப்பதுபோல் தென்படுகின்றது; அவைகளா உண்மை?
அறிவியல் என்ன செப்புகின்றது?
வானத்திற்கு நிறமில்லை; எல்லையுமில்லை!
அறிவியல் என்றால் என்ன?
மணவை முஸ்தபா அவர்களின் விளக்கம்:
மனிதன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும், அவற்றின் மறைபொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும், தன் சொந்த முயற்சியால் அறிவின் துணைகொண்டு, சோதனைகளின் உதவியோடு தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே அறிவியலாகும். (மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை பப்ளிகேஷன்ஸ், சென்னை--40, 1997, பக்.57-58)
இக்காலத்தார் அறிவியல் என்றனர்.
வள்ளுவரோ அறிவு என்றார்!
மீண்டும் படிப்போம்:
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கரப்பான் பூச்சிக்கு மீசை உள்ளது; அது மீசையா?
அதிலிருந்து ஆண்டனா((Antenna)) கண்டறியப்;பட்டது!
வெளவால் சுவரின் எல்லைவரை முட்டிக்கொள்வதுபோல் பறக்கிறது; ஆனால், திடீரென, முட்டிக்கொள்ளாமல் இடுக்கின் வழியே வெளியேறுகிறது; அது எப்படி?
ஆராய்ந்தால் அதன் உடலில் ஓர் ஒலிபரப்பும், ஒலி வாங்கியும் (transmitter & receiver)
வெளவாலிலிருந்து ரேடார் (RADAR)!
இயற்கை எல்லாவற்றையும் கொண்டுள்ளது; இயற்கையைப் புரிந்துகொண்டால், அதைப்போல் எல்லாவற்றையும் செயற்கையாகப் படைக்கலாம்!
இயற்கையிலிருந்தே செயற்கை!
மீனின் உடலில் மின்சாரம்! அஃது எதிரியிடமிருந்து தப்பிக்க மின்சாரத்தைத் தண்ணீரில் செலுத்துமாம் (Electric Fish) !
மனிதன் மின்னாற்றலைக்; கண்டுபிடிப்பதற்கு முன்னமே இயற்கை மின்சக்தியைப் படைத்துள்ளது!
அதைப் புரிந்துகொண்டால் அறிவியல்!
காற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை; அதனைப் பகுத்து ஆராய்ந்தால்!
அதைப் புரிந்துகொண்டால் வானொலி நிலையம் அமைத்து, ஓரிடத்திலிருந்து வெகுதொலைவிற்குச் செய்தியைப், பாடலை, ஒருவர் குரலை, ஒன்றின் குரலை, அப்படியே பிசகாமல் அனுப்பலாம்; அம்முனையில் உள்ளவர் அவற்றை அப்படியே பிடித்துக்கொள்ளலாம்! ஒலிபோல ஒளியையும் அனுப்பலாம்; அதன்வழியே உருவங்களையயும் அனுப்பலாம்!
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
உடல் சாத்திரத்தில் நன்;றாகத் தேர்ச்சியடைந்துவிட்டால், ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் குழந்தையைத் தோற்றுவிக்கவேண்டும் என்னும் அவசியமில்லை!
அணுவைப் புரிந்துகொண்டால் பிளக்கலாம்!
அணுவின் சக்;தியைப் பெறலாம்
பட்டாணிக் கடலை அளவுள்ள அணுவைப் பிளந்து கிடைக்கும் ஆற்றலால் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கலாம்!
தமிழில் உள்ள பொருள் என்னும் சொல் அயவவநச என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நிகரானது
என்றும் கருத்துரைப்பர். (காணவும்: ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்ப்;;கம், திருச்சிராப்பள்ளி, 2002, ப.75)
எப்பொருள் எத்தன்;மைத்து ஆயினும் அப்;பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
இந்தக்; குறள்தான் அறிவியல் (Science) என்பதற்கு மிகச் சரியான விளக்கம்!
சிந்தித்துப் பாருங்கள்!
உலக அறிவியலாளரிடம் சொல்;லிப்பாருங்கள்!
இதைவிடச் சுருக்கமாக யாரும் சொல்லமுடியுமா?
ஆனால், இந்த விளக்கம் கேவலமான தமிழில் அல்லவா இருக்கின்றது!
இதைச் சொன்னவன் தமிழன்!
தமிழன் என்று படிப்பது? என்று தமிழ் படிப்பது?
தமிழன் இப்படிக் கூறியிருக்;கிறான் என்பது தமிழனுக்கே தெரியாதே!
வள்ளுவரே, நீவிர் எத்தனை மொழி கற்றீரோ, யாமறியோம்!
குறள் பாடுவதற்குத் தமிழைத் தேர்ந்தெடுத்தீரே, அதற்கு வணக்கம்!
(தொடரும்....) |
||||||||
by Swathi on 21 Mar 2016 0 Comments | ||||||||
Tags: அறிவியல் திருக்குறள் கட்டுரை Ariviyal Science | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|