LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF

ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்

முனைவர். அரங்கசாமி, தொழில்நுட்ப வல்லுநர்,
(ஒருங்கிணைந்த வேளாண்மை)


தமிழகத்தில் பெரும்பாலான உழவர் பெருமக்கள் இன்றும் பயிர்த்தொழிலை மட்டுமே தனித்தொழிலாகச் செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்க்கும் சீரான நிகர இலாபம் ஒவ்வொரு ஆண்டும் கிடைப்பதில்லை. பயிர்த்தொழிலை மேற்கொள்ளும்போது உபயோகிக்கும் இடுபொருள்களான இரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சாண மற்றும் களைக்கொல்லி மருந்துகள், பண்ணைத்தொழிலாளர் கூலி போன்றவை ஆண்டிற்காண்டு விஷம் போல ஏறிக் கொண்டேயிருக்கிறது. பயிர் சாகுபடிக்கு மிக மிக இன்றியமையாத இன்னொரு இடுபொருளான தண்ணீரும் சமீப காலமாகப் போதிய அளவு கிடைப்பதில்லை.

இவ்வாறு ஒவ்வொரு இடுபொருளையும் கஷ்டப்பட்டு சேர்த்து விளைச்சல் காணும் உழவன் தன்னுடைய விளைபொருள் சந்தையில் போதிய விலை போவதில்லை என்று உணரும்போது வேறு வழியில்லாமல் கஷ்ட ஜீவனத்திற்கு ஆளாகின்றான். ஒருபுறம் இடுபொருள்களின் விலையேற்றம். இன்னொருபுறம் உற்பத்தி செய்த பொருள்களுக்கு எதிர்பார்த்த விலை வெளிச்
சந்தையில் கிடைக்காத நிலை. இதனால் உழவன் சீரான நிகர இலாபத்தை ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்க முடிவதில்லை. அல்லது வேளாண் விற்பனையகங்களில் பொருள்களின் வரத்து பொருள்களின் ஏற்படும் ஆகியவை தேவை, பொறுத்தே விலை நிர்ணயம், வெளிச்சந்தையில விற்பனையகங்களுக்கு அமைகிறது.

குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட வேளாண் பொருள் அபரிமிதமாக சந்தைக்கு வரப்பெற்று அதே நேரத்தில் அதன் தேவை குறைந்தால் அந்த ஆண்டு உழவர்கள் மிகக் குறைந்த லாபத்தையோ அல்லது பல சமயங்களில் நஷ்டத்தையோ எதிர் நோக்க வேண்டியிருக்கிறது. குறைந்து மக்களின் பயிர்களை சாகுபடி அதிர்ச்சி தேவை சில சமயங்களில் அதிகரிக்கும் செய்த உழவர்கள் வைத்தியங்களில் உழவர்கள் ஒரு குறிப்பிட்ட பட்சத்தில் நல்ல எதிர்பாராத வருமானத்தைப் மிகுந்த விளைபொருளின் வரத்தும் வகையில குறிப்பிட்டபெறுகிறார்கள். இத்தகைய பீதிக்குள்ளாகி உழவுத் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு உந்தப்படுகிறார்கள். அதுவும் விளை பொருள்களை இருப்பில் வைத்துக் காலம் தாழ்த்தி விற்க இயலாத குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. எனவே மிக வேகமாக முன்னேறி வரும் இன்றைய உலகில் செலவிடும் ஒவ்வொரு ரூபாய் பணத்துக்கும் பன்மடங்கு இலாபம் தரும் தொழிலே சிறந்த தொழிலாக கருதப்படுகிறது.

இந்நிலையில் உழவியலின் புனிதத்தன்மைக்கும் யாரும் மதிப்பளிப்பதாகத் தெரியவில்லை. பொய்யாமொழிப்புலவர் அய்யன் திருவள்ளுவனார் இத்தகைய இடர்பாடுகளை எதிர்நோக்கியே உழவியலில் ஏதுமில்லை. ஈடுபட்டுள்ளோருக்குச் உழுகின்ற
சிறந்த நிலத்திலிருந்து அறிவுரையாக் போதிய வருமானம “நிலமங்கையிடம் இல்லையே இல்லாதது என்று சோம்பி வருந்துபவர்களைக் கண்டு அந்நில மங்கை நகுவாள் ” என்ற கருத்துப்பட “இலமென்று அசை இருப்பாரைக்காணின் நிலமென்னும் நகும் ” நல்லாள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையால் வேளாண் பெருமக்கள் பயிர்த் தொழிலைத் தனித்து மேற்கொண்டு நிரந்தரமற்ற வருமானம் பெற்று 1அல்லல் உறுவதைத் தவிர்த்து பல்வேறு தொழில்களை இணைத்து செயல்படும் நல்ல வளமிக்க திட்டமான ஒருங்கிணைந்த பண்ணை முறை என்ற திட்டத்தை செயலாக்க வேண்டும்.

பயிர்சாகுபடியில் ஏற்படும் ஏமாற்றத்தைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பண்ணைய முறை உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இத்திட்டத்தில் பயிர்சாகுபடியுடன் வேளாண் சார்புத்தொழில்களான பால் பண்ணை, கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, சாண எரிவாயுக் கலம் அமைத்தல், வேளாண் காடுகள் மற்றும் பழ மரங்கள் வளர்த்தல், தேனீ வளர்த்தல், வீட்டுத் தோட்டம் அமைத்தல் போன்றவற்றை இணைத்துச் செயல்படும்போது வெளிச்சந்தையில் ஒன்றிரண்டு விளைபொருள்களுக்கு ஏற்படும் விலைத்தட்டுப்பாட்டை நிச்சயம் சரிக்கட்டி நிலையான நிகரலாபம் பெற வாய்ப்பேற்படும்.

உழவர்களைப் பொறுத்தமட்டில் மேலே குறிப்பிட்ட எந்தவொரு தொழிலும் புதியதல்ல. பல்வேறு இடங்களில் ஆங்காங்கே சிற்சில உழவர்களால் இன்றும் செயல்படுத்தப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் வியாபார நோக்குடன் இணைத்து செயல்படுத்தப்படுவதில்லை. மேலும் ஒரு பிரிவில் கிடைக்கும் கழிவு மற்றும் விளைபொருள்களைப் பண்ணை அளவிலேயே சுழற்சி மூலம் மற்றொரு தொழிலுக்கு இடுபொருளாக்கி அதன் மூலம் இணைத்துள்ள தொழிலின் உள்ளீட்டுச் செலவைக் குறைத்து பண்ணையின் நிகர இலாபத்தைப் பெருக்க முயற்சிப்பதில்லை. இதில் எந்ததெந்த உபதொழில்களை வயல்வெளி, தோட்டக்கால் மற்றும் மானாவாரிப் பகுதிகளுக்கு இணைத்தால் அவ்வப்பகுதியில் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களை மிக நல்ல
முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல நிலையான நிகர இலாபத்துடன் இயங்க வாய்ப் புண்டு என்பதையும்
கண்டறிய திட்டமிடப்பட்டது.

விஞ்ஞான செயலாக்கத்திற்கு அடிப்படையில் தயாராக கண்டறியப்பட்ட உள்ளன. அவற்றை பல நுணுக்கங்கள் மேற்கொண்டு அவர்கள் தங்கள் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் பெருக்கி எந்தவொரு தனி மனிதனும் உணவின்றி வருந்தாத நிலையை ஏற்படுத்தித் தரவேண்டும்.

இத்தகைய சூழ்நிலை அமைய வெளியிடப்பட்டுள்ள பல்வேறு தொழில் நுணுக்கங்களில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையும்
ஒன்றாகும். மானாவாரிக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம் தமிழகத்தில் மானாவாரி நிலங்களில் பெறப்படும் மழையளவு மிகக் குறைவாகும், அதே சமயம் நேரங்கெட்ட நேரத்தில் பெய்யும் தன்மையுடையதாகவும் இருக்கிறது. பயிர் வளர்ச்சியின் முக்கிய பருவங்களில் தேவையான ஈரத்தன்மை கிடைக்காததும் மானாவாரி நிலங்களின் மிகக் குறைந்த பயிர் ஊட்டங்களின் நிலையும் குறுகிய கால பயிர்களின் விளைச்சலுக்கு ஏற்றதாக் இல்லை. எனவே இயற்கையின் இந்த இக்கட்டான நிலையை நல்ல முறையில் பயன்படுத்தி வறட்சியை தாக்குப்பிடித்து ஆண்டு முழுதும் கிடைக்கும் நிலையற்ற மழையை பயன்படுத்தி நல்ல முறையில் வளர்ந்து தரமான தீவன இலைகளை தரத்தக்க வகையில் மரம் வளர்க்கும் திட்டத்தை இணைத்து செயல்படுவதன் மூலம் நிலையான வருமானம் பெற ஏதுவாகின்றது. மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்புத் தொழில்களான ஆடு வளர்ப்பு, எருமை மாடு வளர்ப்பு, புறா வளர்ப்பு, முயல் வளர்ப்பு, போன்றவற்றை இணைப்பதன் மூலம் நிலையான வருமானத்தை குறைந்த மழையால் சிறந்த பயிர் திட்டத்தை மேற்கொள்ள வகையற்ற மானாவாரி பகுதியிலிருந்து பெற முடியும். மேலும் இவ்வாறு தொழில்களை இணைப்பதன் மூலம் மானாவாரி நிலங்களிலிருந்து கூட உணவு வகைகளில் தரமான புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின் சத்து ஆகியவை அடங்கிய பால், இறைச்சி, பழ வகைகள் கிடைக்க வழிசெய்ய முடியும் . வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நீண்டகால வயது கொண்ட பல்வேறு தரமான காட்டு மரங்களை வளர்ப்பதின் மூலம் 8 முதல் 10 ஆண்டுகளில் விறகுக்கு ஏற்ற மற்றும் தரமான மரச்சாமான் செய்ய ஏற்ற மரங்களைப் பெற்று பயன் அடையலாம். இதைப்போலவே வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை மானாவாரியில் கிடைக்கும் குறைந்த மழையளவைக் கொண்டே வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம். நாடு முழுவதும் உள்ள மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை முறையாக் செயல்படுத்துவதன் வாயிலாக, தற்போது மானாவாரி நிலப்பகுதி மொத்த சாகுபடி நிலத்தில் 2ஃ3 பகுதியாக இருந்தும் மொத்த விளைச்சலின் 42 சத விளைச்சலை மட்டுமே பெற்று வரும் நிலை மாறி மேற்கொண்டு அதிக சிரமம் ஏற்காமல் இரு மடங்காக உயர்த்த முடியும்.

ஆடு, எருமை, புறா, மற்றும் முயல் வளர்ப்பு ஆகிய பல்வேறு தொழில்களை இணைத்துச் செயல்படுவதன் ஊட்டச்சத்து மூலம்
நீண்ட இயற்கையாகக் நாட்களுக்கு நிலை கிடைக்கும் அங்ககச் நிறுத்தப்படுகிறது.

சத்துக்கள் மானாவாரி கூடி நிலங்கள் மண்ணின் தண்ணீர் பற்றாக் குறையுடன் மட்டுமின்றி பயிர் சத்துக் குறையாலும் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள மானாவாரி நிலங்களின் சத்து நிலையை மேம்படுத்துவதன் மூலம். தற்போது கிடைத்து வரும் இதே மழை அளவிற்கு பயிர் விளைச்சலை நிச்சயமாக அதிகரிக்க முடியும்.

மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்புத் தொழில்களான தீவனப் பயிர், தீவன மரங்கள், நீண்டகால புல் வகைகள் மற்றும் ஆடு வளர்ப்பு போன்றவற்றை இணைத்து ஒரு எக்டர் மானாவாரி நிலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 20 பெட்டை ஒரு கிடாய் கொண்ட ஆட்டுப் பண்ணைக்குத் தேவையான தரமான தீவனப்பயிர்கள் மற்றும் தீவன மரங்களுடன் இணைத்து செயல்படுவதன் மூலம், பண்ணையிலிருந்தே ஆண்டு முழுவதற்கான தீவனம் மற்றும் அடர் தீவனத்தை பெற இயலும். நீண்ட கால வயதுடைய தீவன மரங்கள் நட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் ஆடுகளுக்குத் தேவையான பயன் இலைதழைகளை வெட்டும் அதிர்ச்சியைத் தாங்கித் தொடர்ந்து தரும் நிலையைப் பெற்றுவிடுகின்றன. இவற்றிலிருந்து பெறப்படும் இலைதழைகளை 21 ஆடுகளுக்கு 3 தானியங்கள், பயறு வகைகள் மற்றும் ஊடு பயிராகப் பயிர் செய்யப்பட்டுள்ள நீண்ட கால வயதுள்ள புல் வகைகளுடன் கலந்து உணவாக அளிக்கலாம். தலைச்சேரி இன ஆடுகளை மானாவாரியில் வளர்க்கும் போது பல்வேறு தீவனங்களை உணவாக எடுத்துக்கொண்டு நல்ல முறையில் உடல் எடை கூட நிறைய வாய்ப்புள்ளது. தலைச்சேரி இன ஆடுகள் தன் குட்டிகளின் தேவைக்கு மேலும் நாளொன்றிற்கு 80 முதல் 100 மி.லி. வரை பால் கறக்கும் தன்மை கொண்டிருப்பதால் இவ்வினத்தை இரட்டைப் பலன் கொண்ட வகை என்று குறிப்பிடலாம். 20 பெட்டை ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 45 குட்டிகளை பெற முடியும் . ஒவ்வொரு குட்டியும் பால் ஊட்ட மறக்கும் போது சராசரியாக 12 கிலோ உயிர் எடை உடையதாகவும், ஆண்டொன்றுக்கு 540 கிலோ வரை உயிர் எடை தர வல்லதாகவும் இருப்பதால் இவற்றிலிருந்து ரூ.43,200 வரை வருமானமாகப் பெறலாம். உற்பத்திச் செலவை நீக்கி, நிகர லாபமாக ரூ.35,000 வரை ஈட்ட முடியும். இத்துடன், 21 உற்பத்தித் திறன் ஆடுகள் மற்றும் வௌ;வேறு வயதுடைய குட்டிகளை ஆண்டு முழுவதும் கொண்டுள்ள பட்டியை ஆழ்கூழ் முறையில் பராமரிப்பதன் மூலம் 11.2 டன் எடையுள்ள இயற்கை உரம் பெறமுடியும். இத்தகைய தரமிக்க ஆட்டுக் கழிவை மண்ணில் இடுவதால் தழை, மணி, சாம்பல் போன்ற முதன்மை சத்துக்களும், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலை சத்துக்களோடு மேலும் 7 வகை மூன்றாம் நிலை சத்துக்களும் பயிர்களுக்குக் கிடைப்பதுடன், அவற்றின் ஈரமேற்புத் தன்மையால் வளரும் பயிர்கள் கூடிய விளைச்சலைக் கொடுக்க வழி வகுக்கிறது.

எருமை வளர்ப்புத் திட்டத்தை மானாவாரி வேளாண்மையில் ஒரு அங்கமாக இணைப்பதன் மூலம் குறைந்த தரமுள்ள மானாவாரித் தீவனத்தைக் கொண்டே பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 3 எருமை மாடுகளை 1 எக்டர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் தானியங்களின் தட்டை, பயறு வகைக் கழிவுகள் மற்றும் நீண்ட கால புல் வகைகளை மட்டுமே தீவனமாகப் பயன்படுத்தி வளர்க்க முடியும். 3 எருமைகளில், 2 எருமைகள் வருடம் முழுவதும் தொடர்ந்து பால் கொடுக்கும்படி பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிக்கும் திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 9 லிட்டர் பாலும், ஆண்டுக்கு 3285 லிட்டரும் பெற ஏதுவாகின்றது. எருமைக் கன்றுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த் து மொத்த வருமானமாக ரூ.27,000 வரை எருமை மாடு வளர்ப்புத் திட்டை மானாவாரியில் இணைப்பதன் மூலம் பெறலாம்.

உற்பத்தி மற்றும் பாதுகாப்பு செலவினத்தைக் குறைத்து நிகர லாபமாக ஆண்டுக்கு ரூ.18,240 வரையும், நாளொன்றுக்கு உற்பத்தித் திறனாக ரூ.49.97 வரையும் பெறலாம். இத்துடன், 12 டன் அளவிற்கு சத்துமிக்க அங்கக உரத்தையும் பெற்று மானாவாரி மண்ணை வளப்படுத்தலாம்.

விவசாயி தன் குடும்பத்தை மானாவாரி பண்ணையிலேயே வைத்திருக்கும் பட்சத்தில், நாளொன்றுக்கு 2 கன மீட்டர் உற்பத்தித்திறன் கொண்ட சாண எரிவாயுகலனை அமைத்து எருமை மாட்டுச் சாணத்தை எரிவாயு தயாரிக்கவும் பயன்படுத்தலாம். வறட்சியைத் தாங்கி வளரும் இலந்தை, சீதாப்பழம், நெல்லி கொய்யா, மாதுளை போன்ற பழ மரங்களுடன் பயறு வகை சிறுதானியப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுவதின் மாடுகளுக்குத் தேவையான தீவனத்தை பெற இயலும். 4 வாயிலாக பண்ணை கறவைமானாவாரி வேளாண்மையில் பண்ணைக் குட்டை இணைப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதிக மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு நல்ல மேல்மண் அந்தப் பண்ணையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவும், வீணாகும் நீரை குறைக்கவும் பண்ணையின் தாழ்வான பகுதியில் மொத்த சாகுபடியில் பரப்பில் 1ஃ25 பாகத்தில் பண்ணைக் குட்டை அமைக்கலாம். ஒரு எக்டர் மாதிரி பண்ணைக்கு 40x10x1.5 மீட்டர்  அளவுள்ள பண்ணைக்குட்டை ஏற்றதாகும். இக்குட்டை 600க.மீ மழை நீரை தக்க வைத்துக் கொள்ளும் திறனுடையதாகும். இக் குட்டையில் தேங்கிய மழைநீர் கடைசியாக கிடைத்த மழைக்குப் பிறகு 30 முதல் 40 நாட்கள் வரைக் குட்டையில் தங்கியிருப்பதால், நீண்ட வயது தீவன மற்றும் மரங்களுக்கு ஓரிருமுறை குடங்களின் மூலம் நீர் விடப் பயன்படும். இத்துடன், மழை நீரோடு அடித்து வரப்பட்ட சத்தான பண்ணையின் மேல் மண் ஆண்டுக்கு 4 முதல் 6 டன் வரை சேகரிக்கவும் பயன்படுகிறது. இதனால் நல்ல மேல்மண் அரிப்பின் மூலம் அந்தப் பண்ணையை விட்டு வெளியேறுவதை வெகுவாகத் தடுக்க இயலும்.

இவ்வாறு பண்ணைக் குட்டையில் சேர்ந்த வளமிக்க வண்டல் மண்ணை நீண்ட கால பழ மரங்கள் ஃ வன மரங்கள் ஆகியவற்றிற்கு அங்கக் உரமாக இட்டுப் பயன் பெறலாம். நீண்ட பருவ மழை கொண்ட பகுதிகளின் குட்டையில் நீர் இருப்பு 31⁄2
முதல் 4 மாதங்கள் வரை நீடித்திருக்கும். இத்தகு நிலையில் “திலோப்பியா” போன்ற மீன் இனத்தை வளர்த்து 30 முதல்
40 கிலோ எடையுள்ள மீன் இறைச்சியைப் பெறலாம். இதன் மூலம் கூடுதலாக ரூ.750 முதல் 1000 வரை வருமானம் பெறமுடியும்.


இவ்வாறு பற்பல பயன்மிக்க ஒருங்கிணைந்த பண்ணை திட்ட மாதிரிகளை வெவ்வேறு பகுதிக்கேற்ப மேற்கொள்வதன்
மூலம் விவசாயிகளின் நிகர லாபத்தையும் நாட்டின் விளைச்சலை அதிகரிப்பதுடன் சிறு, குறு அதிகரிக்கலாம். மேலும் பண்ணைக் கழிவை இயற்கை எருவாக்கி பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தையும் நிலைப்படுத்தி நீண்ட காலத்திற்கு
நிலையான விளைச்சலையும் பெறலாம்.

ஒருங்கிணைந்த இறைச்சி, மற்றும் உணவுக் காளான் விற்பனை மூலம் வருமானம் கிடைக்கவும் வேலையாட்களுக்கு வாய்ப்பேற்படுகிறது. ஆண்டு முழுவதும் வேலை பண்ணையத்தில் பால், முட்டை, விவசாயிக்கு ஒவ்வொரு ஆண்டும் சீரான
ஒருங்கிணைப்பு கிடைக்க திட்டத்தால் வாய்ப்புள்ளது. ஆனால் குடும்ப பயிர் சாகுபடியை மட்டும் மேற்கொள்ளும் போது நடவு, களை எடுப்பு மற்றும் அறுவடை காலங்களில் மட்டுமே வேலையாட்களின் தேவை உள்ளது. மேலும் அத்தனை வேலைகளுக்கும்
ஒரே நேரத்தில் மிக அதிகமான ஆட்கள் தேவைப்படும் நிலையும் உள்ளது. இதை. ஒருங்கிணைந்த பண்ணைத் திட்ட முறையில்
தவிர்க்கலாம். குறிப்பாக மானாவாரி விவசாயியின் குடும்ப வருமானம் ஆண்டு முழுவதும் உள்ளது. இத்திட்டத்தில் சாண எரிவாயு தயாரித்தல், பண்ணை இல்லத்திற்கு தேவையான தரமான உணவுப்  பொருட்களை உபயோகித்தல் போன்றவற்றை இணைப்பதன் மூலம் உழவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது. இருப்பினும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் கீழ்கண்ட சில குறைகளும் உள்ளன.


அ. வேளாண் சார்புத் தொழில்களை இணைக்கும் பொழுது ஆரம்பத்தில் அதிக மூலதனம் தேவைப்படுகிறது.


ஆ. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, தோட்டக் கலை, வேளாண் காடுகள் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் இணைக்கப்படுவதால் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகி விடுகிறது. அந்த அளவிற்கு துறைகளின் ஈடுபாடு இன்னும் வளரவில்லை.


இ. வீரிய பயிர் இரகங்கள் ஃ விதைகள் ஃ ஒட்டு இரகங்கள் விவசாயிகளுக்குப் பண்ணை அளவில் கிடைப்பதில்லை. மேலும் பரிந்துரை செய்யப்படும் பயிர் சார்ந்த இணைப்புத் தொழிலின் துறைகள் கிராம அளவில் பொருள்கள் விநியோகிக்கத் தக்கவகையில விரிவாக்கம் பெறவில்லை.


ஈ. பண்ணை அளவில் கிடைக்கும் கழிவு மற்றும் விலை பொருட்களை சுழற்சி மூலம் மற்றொரு தொழிலுக்கு உள்ளீட்டுச்
இடுபொருளாக்கி செலவைக குறைத்து அதன் மூலம் பண்ணையின் நிகர இணைத்துள்ள இலாபத்தை தொழிலின் பெருக்கத்தக்க அளவிற்கு விவசாயிகள் இன்னும் போதிய பயிற்சி பெறவில்லை.


உ. கிராமங்கள்  அளவில், பல்வேறு சார்புத்தொழில்களின் மூலம் கிடைக்கும் விளைபொருட்களை விற்பனை செய்ய வசதியில்லை.


குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முழு ஒத்துழைப்பால் சரியான நேரத்தில் உழவர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் தீர்க்க முடியும். வெவ்வேறு வேறு துறையைச் சார்ந்த அலுவலர்களை இணைத்து செயல்படுத்துவதன் மூலம் புதிய பயிர் இரகங்கள் ஃ வீரிய ஒட்டு இரகங்கள் ஃ உயர் இன பறவைகள் ஃ மாடுகள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தேவைப்படும் நேரங்களில் பண்ணை அளவிலேயே கிடைக்கச் செய்யலாம். தேர்வு நிலைப் பஞ்சாயத்து அளவில், உழவர் சந்தைகள் அமைப்பதன் மூலம் உற்பத்தி செய்த விளைபொருட்களை மிக எளிதாக விற்பனை செய்ய முடியும். ஒருங்கிணைந்த பண்ணைய திட்ட முறையை அதிக அளவில் நிறைவேற்றும் போது உபரியான விளைபொருட்களை பதப்படுத்தி மாற்றுப் பொருளாக்க கிராம அளவிலான தொழிற்சாலைகளை நிறுவலாம்.

பொருட்களை பண்ணை சுழற்சி அளவில் கிடைக்கக முறையில் கூடிய ஒருங்கிணைந்த அனைத்து கழிவு மற்றும் பண்ணையத்தில் உற்பத்தி பயன்படுத்தினால் உழவர்களின் உற்பத்தி செலவைக் குறைத்து பண்ணையின் வருமானத்தைப் பெருக்கிடலாம்.
தற்பொழுது ஒருங்கிணைந்த கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பண்ணைய முறை 2020ம ஆண்டிற்குள் ஆங்காங்கே அனைத்து
உழவர் உழவர் பெருமக்களால் பெருமக்களும் கையாண்டு நமது நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை ஈடுகட்டத்தக்க வகையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு, உழவர்களின் நிகர வருமானத்தையும் நிச்சயம் பெருக்க முடியும்.

இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து என்றென்றும் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் ” என்ற நிலை வரும்.
முனைவர் அ. அரங்கசாமி
“உழவன் குடில் ”
13 ஃ 95-2 அரசன்காடு, அரங்கநாதபுரம்
நம்பியூர் - 638 458.
தொடர்பு: அ.பே.எண்: 94861 15816

by Swathi   on 20 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்! கிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்!
வெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....? வெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....?
அமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்! அமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்!
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா? ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா?
தற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு. தற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.
தற்சார்பு மரபு விவசாயம் – 2 தற்சார்பு மரபு விவசாயம் – 2
தற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும். தற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும்.
மாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் !! மாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.