|
||||||||
முத்தமிழில் இசையை கற்க ஆர்வமாகிவரும் வடஅமெரிக்கத் தமிழர்கள்.. |
||||||||
புலம்பெயர்ந்து வாழும் சூழலில், தங்கள் மரபை ஒவ்வொரு இனத்தவரும் பெருமையாக போற்றி பாதுகாக்கும் அமெரிக்க மண்ணில் தமிழர்கள் தங்கள் மரபைப் பற்றிய விழிப்புணர்வையும், அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் கடமையையும் செய்யத்துவங்கியுள்ளார்கள். இசை பின்புலம் இல்லாத வீட்டுக் குழந்தைகளும் தமிழிசையை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் இசை, நடனம் போன்றவற்றை முறைப்படி கற்றுக்கொண்டு மேடையை அலங்கரிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக இசைக்கு முறையான அனுபவமிக்க சரியான இசை ஆசிரியர்கள் வீட்டின் அருகே கிடைப்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத சூழல் உள்ளது. இந்தக் குறையை போக்க பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக திருபுவனம் குரு.ஆத்மநாதன், திரு.மம்முது போன்ற தமிழிசை அறிஞர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச்சங்கம், பேரவை, அல்லது பெற்றோர்களே இணைந்து நேரடியாக அழைத்து பல மாநிலங்களில் ஓரிரு வாரம் தங்கவைத்து குழந்தைகளுக்கு நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இவ்வாண்டு திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் வழிகாட்டுதலில் இணையம் வழியே வீட்டிலிருந்தபடியே தமிழிசை கற்கும் வாய்ப்பை சில பெற்றோர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல நாடுகளுக்கு பயணித்து தமிழிசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி ஆயிரக்கணக்கான மேடைகளில் பாடிய அனுபவத்தை அடுத்த தலைமுறையினரிடம் பகிர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் ஐயா திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் இதை பார்க்கிறார்கள். இவ்வாண்டு கோடையில் வலைத்தமிழ் அழைப்பின்பேரில் வட அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் பல்வேறு தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து இசை பயிற்சிப்பட்டறையை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவியருக்கு பல மேடை நுணுக்கங்களை, குரல்வளப் பயிற்சிகள் சொல்லிக்கொடுக்கப்பட்டது பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. பெற்றோர்கள் இதை தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொல்லிக்கொடுக்க முடியுமா என்றும் அவர்கள் முறையாக இசை பயின்று அரங்கேற்றம் செய்ய முடியுமா என்றும் கேட்டு கோரிக்கைவைத்தனர். இதை ஏற்று இணையம் வழியே (Skype) வலைத்தமிழ்.காம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ-மாணவிகள், பெரியவர்கள் இசையை ஒரு மணி நேரம் தனிப்பயிற்சியாக கற்றுவருகிறார்கள். இதில் தமிழிசை / கர்நாடக இசை அடிப்படையுடன் சேர்த்து பாரதியார், வள்ளலார், பாரதிதாசன், முத்துத்தாண்டவர், புறநானூறு, சிலப்பதிகாரம், தேவாரம் உள்ளிட்ட பல தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் இயங்கும் "நிகழ்கலைக் கழகம்" என்ற அமைப்பின் முறைப்படுத்தப்பட்ட மூன்று ஆண்டு இசை பாடத்திட்டத்தை பின்பற்றி வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளருடன் பேசியபோது பேசியபோது குழந்தைகள் மட்டுல்லாது, திருமுறை, திருப்புகழ், வள்ளலார் பாடல்கள் , திரையிசை உள்ளிட்ட பாடல்களை பாட விருப்பமுடைய பெரியவர்களும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன்பெறுகிறார்கள் என்றும், புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப ஆசிரியர்களின் நேரம் ஒதுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில் அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ச்சங்கங்கள் தமிழிசை விழாவை, போட்டிகளை, முத்தமிழ் விழாவை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இயல்-இசை-நாடகம் என்ற முத்தமிழில் தொய்வடைந்திருக்கும் இசையை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதில் தன் குழந்தையும் பாடி, இசை மேடைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை கல்வியுடன் சேர்த்து கற்றுத்தேர்ந்து வளரவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் சங்க இலக்கியங்களை இசைவழியே கற்க வாய்ப்பில்லாத சூழலில் தங்கள் குழந்தைகள் இதை கற்றுத்தேர்ந்து பாடுவதை பெருமையாக பார்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளில் முறையாக இசையின் அடிப்படையை கற்றுத் தேர்ந்து தமிழ்ப் பாடல்களை மேடைகளில் பாட விருப்பமானவர்கள் www.valaitamil.com/music பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார். மேலும் முதல் ஒரு மணி நேர வகுப்பு சோதனை வகுப்பு என்றும் அதைத்தொடர்ந்து விருப்பமிருந்தால் தொடரலாம் என்ற வாய்ப்பும் உள்ளதாக தெரிவித்தார். |
||||||||
by Swathi on 02 Jan 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|