LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரிலீசாகும் முன்பே ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒண்ணுமே புரியல !!

‘ஒண்ணுமே புரியல” என்னும் தமிழ் படம் வெளியாக முன்னரே ஹாலிவுட்டில் ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மன் மொழியில் தயாரிப்பதற்காக ஒரு பிரபல ஜெர்மன் சினிமா நிர்வாகம் “Fenchel & Janish Film productions GBR” உரிமம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அப்சரா இராம்குமார் இயக்கியுள்ளார்.

 

இப்படத்தை பற்றி அப்சரா இராம்குமார் அவர்களிடம் கேட்ட போது, ‘இது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி. எனக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய ஒரு விஷயமாக கருதுகிறேன்” என்று கூறினார். இந்த படத்தின் கதாநாயகனாக நடித்தது ஜாக் மைக்கேல் மற்றும் கதாநாயகிகள் வித்யா மற்றும் ஹரிணி. இந்த படத்தில் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர். ரைஹ்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் உயிர்நாடி ஏ.ஆர். ரைஹனாவின் இசை” என்று அப்சரா இராம்குமார் கூறியுள்ளார்.

 

‘ஒண்ணுமே புரியல” என்கிற திரைப்படம் உலக சினிமாவில் ஒரு புத்தம் புதிய படைப்பு என்றும், இது ஒரு ஸைக்காலஜிக்கல் திரிலர் என்றும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார். ‘ஒண்ணுமே புரியல” திரைப்படத்தை கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஹாலிவுட் திரைப்பட கம்பெனியுடன் இணைந்து உரிமை பெற்றுள்ள ஜெர்மன் நிறுவனம் இயக்கும் என்றும், இப்படத்தை மேற்கு கலாச்சாரத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்து, ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

‘ஒண்ணுமே புரியல” திரைப்படம் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 10 Dec 2014  0 Comments
Tags: Onnume Puriyala   Hollywood   ஹாலிவுட்   ஒண்ணுமே புரியல   ஏ.ஆர். ரைஹனா        
 தொடர்புடையவை-Related Articles
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !! அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !!
ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !! ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !!
ரிலீசாகும் முன்பே ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒண்ணுமே புரியல !! ரிலீசாகும் முன்பே ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒண்ணுமே புரியல !!
கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !! கோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை - சொல்கிறார் சிம்பு !!
ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !! ஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் !!
ஹாலிவுட்டை கலக்க போகும் பீட்சா !! ஹாலிவுட்டை கலக்க போகும் பீட்சா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.