LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

ஓடுகாலி என்னும் சொல்லின் பொருள் !!

கால் உடையவை காலிகள். நான்கு கால்களையுடைய ஆடு, மாடு, மான், குதிரைகள் யாவும் நாற்காலிகள். நான்கு கால்களால் தாங்கப்பெறும் மரப்பொருளும் நாற்காலிதான். மூன்று தாழ்வான கால்களையுடைய இருக்கை முக்காலி. காலிலி என்றால் கால்கள் இல்லாதவை. கால் இலி. முடமான நிலையில் உள்ளவர்கள்.

காளி, காழி போன்ற சொற்களுக்கும் பொருள்கள் பலவுள்ளன என்றாலும் இத்தொடருக்குப் பொருந்தி வரவில்லை.

‘ஆடு மாடுகளும் மான்களும் புலி சிங்கங்களும் ஓடுகாலிகள்தாம். ஓடும் கால்களையுடையவை என்ற பொருள்தானே வருகிறது... இதில் என்ன தவறு..?’ என்று கேட்கலாம். மேலோட்டமாகப் பார்த்தால் சரிதான். ஆனால், அகராதிப்படி ஓடுகாலி என்ற சொல்லுக்கு ‘வீட்டில் தங்காத பெண்’ என்பதே பொருளாகக் காணப்படுகிறது.

பெண்ணின் வீடு தங்காத நிலை அக்காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட கீழ்மையை நாம் அறிவோம். ஒருத்தி வீடு தங்கவில்லை என்றாலே உடனொட்டிய பொருளாக ‘அவள் ஒழுக்கங்குறித்த’ கடும் வசவாகிவிடுகிறது. ஒருத்தியை ‘விலைமகள்’ என்று வைகின்ற சொல் இது. தமிழில் இவ்வாறு தற்குறிப்பேற்ற சொற்கள் பல.

‘மூடு’ என்பதற்கு எளிமையான அழகிய பொருள்தான் உள்ளது. நமக்குப் பிடிக்காமல் பேசிக்கொண்டிருப்பவரைப் பார்த்து ‘மூடு’ என்று சொன்னால் அங்கே அது எவ்வளவு பெரிய வசவுச்சொல்லாக மாறிவிடுகிறது ! உலகிலுள்ள எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினால் என்ன விளைவு ஏற்படுத்துமோ, அவ்வளவு வசவுத்தன்மையை அந்த ஒரு சொல் ஏற்படுத்தக்கூடியது.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 -  பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்
உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை
தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.  1 தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்
என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?  என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்? 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.