LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

ஓர் அகதிக் கவிஞன் நிலாவைப் பார்த்து

நிலாவே! இன்று நான்
பாடல் எழுதமாட்டேன்
ஒரு தற்காலிக வீட்டில்
சொந்தமாய் வாசலில்லை
உரிமையோடு பூப்பறித்து முகர
ஒரு மரமில்லை.
நீகூட எனக்கு ஓர் அந்நிய நிலவுதான்.
எனது வாசலில் விழுகின்ற உன்னுடைய வௌிச்சமும்
இந்த அந்நிய வாசல் ஒளியும்
எனக்குள்ளே பேதத்தைக் கிளப்பி மனநிலையைக் கெடுக்கிறது.
நான் மூன்று தினங்களாய் அகதி.
இந்த உயிரையும், அதற்குள்ளே ஊறுகின்ற கவிதையையும்
காப்பாற்றி வெற்றிகண்ட ஒருவன். 
என் வீட்டைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்
அது மூக்குடைந்து விட்டதாய்.
நான் நேசித்து வளர்த்த பூமரங்கள் எல்லாம்
மாட்டின் மலக் குடலில்
தங்கிப் பின்னர் வௌியேறி விட்டதென்றும்
அறிகிறேன்.
இங்கே-
சொந்த வானமில்லை.
நான் சுவாசிக்கின்ற காற்றுக்கூட
இன்னொரு வீட்டாரின் உடைமைபோல் இருக்கிறது.
எப்படிப் பாடல் எழுதுவேன் நிலவே?
தொண்ணூறாயிரம் வெள்ளிகளையும், உன்னையும் வானத்தையும்
தொலைத்த நிலையில்,
என் வண்ணத்துப் பூச்சியையும்
கட்டிலின் இடவில் வாழ்ந்த பல்லியையும்
இழந்த நிலையில்?
நீ மேகத்தை எடுத்து முகத்தை மூடிக்கொள்
கவிஞன் பெருமூச்சு விட்டால்
குளிர் தென்றலும் கருகும். 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.