|
||||||||
ஓர் ஈர நாள் |
||||||||
வானம் வயிறூதித் தூங்கும்
கூன் கிழவி நாலுகாலில் நடந்து வீதியைக் கடப்பாள்
மழை,
மொட்டைத் தலைகள் உடையும்
கொட்டைப் பாக்குகள் விழும்
மழை.
மரங்கள் பூக்களை உதிர்த்தும் வாசலில்.
ஒரு மின்னல் சரிபிழை பார்த்துவிட்டுப் போகும்.
கடலின் மூலைக்குள் இருந்து
யாரோ வானத்தைப் பிளக்கின்ற சத்தம்
இடி.
நேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று
அதிர்ச்சியில் மரிக்க
துக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும்.
நான்-
கப்பல் விட்ட நாட்களை நினைத்திருப்பேன்.
நாய் நனைந்து என் முன்னால் ஓடும்
அதன் இடுப்புப் புறத்தில் இருந்த சாம்பல்
கரைந்து ஒழுக.
பைத்தியம்,
இந்த நேரத்தில் கற்பனையில் இருக்கின்ற
படுபேயன் என்றெண்ணி
காற்று இலைகுழையைப் பிய்த்து வீசும் என் முகத்தில்
உம்மா ஜன்னலைச் சாத்திவிட்டுப் போக...
இவை மழைநாளின் சம்பவங்கள்,
பிறகு வாசலைக் கோழி கிழைக்கின்ற தினமொன்றின்
புதினங்கள்.
வானம் சிறுபிள்ளை மாதிரிச் சிணுங்கும்.
கொண்டுவா அந்தக் கிலுக்கியையும் சூப்பியையும்
அழுகையை நிறுத்தென்று கொடுக்க.
வானம் வயிறூதித் தூங்கும் கூன் கிழவி நாலுகாலில் நடந்து வீதியைக் கடப்பாள் மழை, மொட்டைத் தலைகள் உடையும் கொட்டைப் பாக்குகள் விழும் மழை. மரங்கள் பூக்களை உதிர்த்தும் வாசலில்.
ஒரு மின்னல் சரிபிழை பார்த்துவிட்டுப் போகும். கடலின் மூலைக்குள் இருந்து யாரோ வானத்தைப் பிளக்கின்ற சத்தம் இடி. நேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று அதிர்ச்சியில் மரிக்க துக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும்.
நான்- கப்பல் விட்ட நாட்களை நினைத்திருப்பேன். நாய் நனைந்து என் முன்னால் ஓடும் அதன் இடுப்புப் புறத்தில் இருந்த சாம்பல் கரைந்து ஒழுக. பைத்தியம், இந்த நேரத்தில் கற்பனையில் இருக்கின்ற படுபேயன் என்றெண்ணி காற்று இலைகுழையைப் பிய்த்து வீசும் என் முகத்தில் உம்மா ஜன்னலைச் சாத்திவிட்டுப் போக...
இவை மழைநாளின் சம்பவங்கள், பிறகு வாசலைக் கோழி கிழைக்கின்ற தினமொன்றின் புதினங்கள். வானம் சிறுபிள்ளை மாதிரிச் சிணுங்கும். கொண்டுவா அந்தக் கிலுக்கியையும் சூப்பியையும் அழுகையை நிறுத்தென்று கொடுக்க.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|