LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்-திரை விமர்சனம்!!

இயக்கம் : சிம்புதேவன்

 

நடிகர் : அருள்நிதி

 

நடிகை : பிந்து மாதவி,

             அஸ்திரா ஷெட்டி

 

இசை : நடராஜன் சங்கரன்

 

எழுத்து : சிம்புதேவன்

 

திரைப்படவியல் : கதிர்

 

படத்தொகுப்பு : ராஜா முஹமது

 

தயாரிப்பு : மு.க.தமிழ்ழரசு

 

அருள்நிதி நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், மு.க.தமிழ்ழரசு தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'. மூன்று வெவ்வேறு நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயணத்தால் ஏற்படும் விளைவுகளைக் காமெடி கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் சிம்பு தேவன்.

 

இக்கதையை சிவபெருமான் நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக இயக்கி இருப்பதும், அதில் அருள்நிதி, பிந்துமாதவி, பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருப்பது தான் படத்தின் பெரும்பலம்.

 

திரைக்கதையின் பயணம் விறுவிறுவென இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் மிக மெதுவாக நகர்வதால் அலுப்பு ஏற்படுகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. காமெடிப் படம்தான், அதற்காக இப்படியா என எண்ணவைத்துவிடுகிறது. மேடை நாடகங்கள் போன்ற வசனங்கள் மட்டுமே அவ்வப்போது சிரிக்கவைக்கின்றன.

 

நடிகை அஸ்திரா ஷெட்டிக்கு எந்த வேலையும் இல்லை. சில கட்சிகளுக்கு தோன்றி மறைகிறார். பிந்து மாதவி படம் முழுவதும் வருகிறார். இவருக்குக் காதல் காட்சி எதுவும் இல்லை. அதிகம் பேசாமல் நடித்திருக்கிறார். சாலையில் ஓடுவது, பைக் ஓட்டுவது என்று துடிப்பாகத் திரையில் தோன்றுகிறார். பகவதி பெருமாள் வசனம் பேசும் விதமும் முகபாவங்களும் சிரிக்கவைக்கின்றன. நகைச்சுவையோடு நடத்தப்பட்ட நல்ல கடத்தல் நாடகம்.

 

மொத்தத்தில் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' காமெடி பிரியர்களுக்கு விருந்து...

இயக்கம் : சிம்புதேவன்
நடிகர் : அருள்நிதி
நடிகை : பிந்து மாதவி, அஸ்திரா ஷெட்டி
இசை : நடராஜன் சங்கரன்
எழுத்து : சிம்புதேவன்
திரைப்படவியல் : கதிர்
படத்தொகுப்பு : ராஜா முஹமது
தயாரிப்பு : மு.க.தமிழ்ழரசு
அருள்நிதி நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், மு.க.தமிழ்ழரசு தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'.
மூன்று வெவ்வேறு நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயணத்தால் ஏற்படும் விளைவுகளைக் காமெடி கலந்து கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் சிம்பு தேவன்.
இந்தகதையை சிவபெருமான் நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக இயக்கி இருப்பதும், அதில் அருள்நிதி, பிந்துமாதவி, பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருப்பது தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தின் பெரும்பலம்!
மூன்று விதமான சாத்தியக்கூறுகளிலும் திரைக்கதையின் பயணம் விறுவிறுவென இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் மிக மெதுவாக நகர்வதால் அலுப்பு ஏற்படுகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. காமெடிப் படம்தான், அதற்காக இப்படியா என எண்ணவைத்துவிடுகிறது. மேடை நாடகங்கள் போன்ற வசனங்கள் மட்டுமே அவ்வப்போது சிரிக்கவைக்கின்றன.
அஷ்ரிதா ஷெட்டிக்கு எந்த வேலையும் இல்லை. சில காட்சித் துணுக்குகளாகத் தோன்றி மறைகிறார். பிந்து மாதவி படம் முழுவதும் வருகிறார். இவருக்குக் காதல் காட்சி எதுவும் இல்லை. அதிகம் பேசாமல் நடித்திருக்கிறார். சாலையில் ஓடுவது, பைக் ஓட்டுவது என்று துடிப்பாகத் திரையில் தோன்றுகிறார். பகவதி பெருமாள் வசனம் பேசும் விதமும் முகபாவங்களும் சிரிக்கவைக்கின்றன. துணுக்குத் தோரணங்களினூடே கட்டப்பட்ட பலவீனமான கடத்தல் நாடகம்.
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - ஒரு டிக்கெட்டில் 3 காமெடி படம் பார்த்த திருப்தி!''மொத்தத்தில் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' காமெடி பிரியர்களுக்கு நல்ல விருந்துதான்...
by Swathi   on 07 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
பூமி பூமி
ஈஸ்வரன் ஈஸ்வரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.