LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு! - அத்தியாயம் 5

யோசிக்காதேஓடிக் கொண்டேயிரு!


சென்ற அத்தியாயத்தில் ஒரு ஆய்த்த ஆடையின் உருவாக்கத்திற்கான முதல் உழைப்பு எங்கிருந்து தொடங்குகின்றது? என்பதைப் பார்த்தோம். ஒரு ஆடை முழு உருவமாகி ஏற்றுமதி ஆகின்ற வரையில் இந்த துறையில் என்ன நடக்கின்றது? எவரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதனை இந்தத் துறையில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில கதாபாத்திரங்கள் மூலம் படிப்படியாக இந்த துறையைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்போமா? இதனுடன் தொழிலாளி மற்றும் முதலாளி என்ற வர்க்கபேதத்தில் உள்ள வினோத முரண்பாடுகளைப் பற்றியும் வரப் போகின்ற அத்தியாயத்தில் பேசுவோம். 


இத் துறையில் 22 வருடங்கள் அனுபவங்கள் உள்ள நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். நான் இத்துறையில் நிலையான பதவி அமையவே ஏழு வருடங்கள் போராட வேண்டியிருந்தது. அதன் பிறகு தான் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. காரணம் அதுவரையிலும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த காட்டாறு வெள்ளத்தில் சிறு துரும்பாக தத்தளித்துக் கொண்டிருந்தேன்.  எதையும் கவனிக்க நேரமில்லாமல் எவர் எவரோ இடும் கட்டளைகளை நேரம் மறந்து நிறைவேற்றிக் கொடுப்பவனாக இருந்துள்ளேன்.  20 மணி நேர பணியென்பது கடந்து போன என் வாழ்க்கையில் பல மாதங்கள் இயல்பானதாகவே இருந்தது.  உடலும் மனதும் அதற்கு தகுந்தாற்போலவே உருமாறத் தொடங்கியது.


வாழ்க்கையை ரசித்தே வாழ்ந்து பழகியவனுக்கு இது நரக வேதனையாக இருந்தது. உழைத்து விட்டு ஒதுங்கி விட அதன் பலன்கள் எல்லாம் எவர் எவருக்கோ கிடைத்துக் கொண்டிருந்தது. நான் தேடிக் கொண்டிருந்த ‘அங்கீகாரம்’ என்ற வார்த்தை அர்த்தமற்று சிரிக்கத் தொடங்கியது.


எனக்கான நேரம் வந்தது. வந்த நேரத்தை முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கை வழிநடத்தியது. இந்தத்துறையில் நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. உள்ளுற வைத்திருந்த வன்மத்தை வரி வரியாக பிரித்து வைத்திருந்தேன்.


அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.


தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது.

Oru Tholitchalaiyin Kurippugal

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர்.


ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே.  கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது.  இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் நான் தன்னிலை மறந்ததே இல்லை. எனக்கென்று ஒரு நோக்கம் இருந்தது.  அதற்கு மேலாக அந்த நோக்கத்திற்குள் ஒரு சிறப்பான வாழ்வியல் தத்துவம் இருந்தது.  ஒவ்வொரு காலகட்டத்திலும் மனதிற்குள் உருவாகும் காயங்கள் அதிகமாக இருந்தாலும் சீழ்பிடிக்காத அளவிற்கு நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு மருந்தாக இருந்து உதவியது.


வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறேதும் உலகில் உண்டா?


இங்கு எல்லோருமே தொடக்க நிலையில் கஷ்டப்படத்தான் செய்கின்றார்கள். தனது வளர்ச்சியை நோக்கி சிந்தித்து மேலே வரத் துடிக்கின்றனர். தன்னை வளர விடாமல் தடுக்கும் காரணிகளை நினைத்து புலம்புவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அதற்கான காரணங்களைப் பற்றி யோசிக்கும் போது மட்டும் தன் நிலை என்ன? தற்போதைய தன் தகுதி என்ன? என்ற கேள்வி பிறக்கும் என்பதை உணர மறுக்கின்றனர். எதை முதன்மையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்? எந்த சமயத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணராமல் தான் பெற்றுள்ள வன்மத்தை மட்டுமே மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பவனால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே வளர முடிவதில்லை. வாழ்க்கை முழுக்க புலம்புவனாகவே வாழ்ந்து பழகியவனுக்கு அவன் பார்க்கும் அத்தனை பேர்களும் எதிரியாகத் தான் தெரிவார்கள். 


கேவலமான எண்ணங்கள் தான் மேலோங்கும்.  அதன் பிறகே ஒருவனின் சுய புத்தி மழுங்கிப் போய்விடத் தொடங்கின்றது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தவறான பாதையில் சென்று கடைசியில் வாழ்க்கை அலங்கோலத்தில் முடிகின்றது.


கிராமத்து வாழ்க்கை, கிராமம் சார்ந்த சிந்தனைகள் எதுவும் தொழில் நகர வாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து கொள்ளவே எனக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது. புதிய மாற்றங்கள் என்னை நோக்கி வரத் தொடங்கியது. நிலையான உயர் பதவியை நோக்கி என் வாழ்க்கை நகரத் தொடங்கியது.


அடுத்தடுத்து நிறுவனங்கள் மாறினாலும் மேலே உயர முடிந்தது. வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமானது. நிர்வாக அறிவு சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய போது தான் மனிதர்களின் உள் மன விகாரத்தைப் பற்றி ஆராய முடிந்தது. ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும் சொல்லுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாளிவர்க்கம் என் தனித்தன்மையாக இருக்கின்றார்கள். ஏன் எப்போதும் தொழிலாளிவர்க்கம் உழைப்பவர்களாகவே மட்டும் இருந்து விடுகின்றார்கள் போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது.


என்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மனவோட்டத்தை அறியத்துவங்கினேன். ஒவ்வொரு தனிமனிதர்களின் எண்ணங்கள், செயல்கள், வித்தியாசங்கள் என ஒவ்வொன்றும் எனக்குப் புரியத் தொடங்கியது.


உழைப்பு, திறமை என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே பல விசயங்கள் உள்ளது. ஆய்த்த ஆடை துறை மட்டுமல்ல. இந்தியாவில் நீங்கள் காண்கின்ற எந்தத்துறையிலும் நூறு சதவிகிதம் திறமைசாலிகள் இல்லை. அதே போல நூறு சதவிகித உழைப்பாளிகளும் இல்லை.  ஆனால் இங்கே குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றார்கள். ஏன்?பள்ளி, கல்லூரிகளில் படிப்பில் சுட்டியாய் இருந்தவர்கள் வாழ்க்கையில் முழுமையாக ஜெயித்து விடுகின்றார்களா என்ன? எந்த நாட்டில், எந்த இடங்களில் வாழ்பவராக இருந்தாலும் சமயோஜித புத்தியுள்ளவர்களால் மட்டுமே பல துறைகளில் உச்சத்தை தொட முடிகின்றது.


ஒரு ஆய்த்த ஆடைத் தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தால் ஆயிரக்கணக்கான பேர்கள் இருப்பார்கள். உச்சகட்ட பதவி என்பது ஏழெட்டு பேர்களுடன் முடிந்து விடும்.  அதற்கு கீழே வருகின்ற அத்தனை பேர்களும் அல்லக்கை, நொள்ளக்கை, நொந்தகை வகையினராக இருப்பர். அதிலும் குறிப்பாக உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவர்கள் போல தினசரி தன் வாழ்க்கையை நொந்தபடியே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?


இந்த வகை உழைப்பாளிகள்  திருப்பூரில் ஒவ்வொரு நிறுவனத்திலும் நூற்றுக்கணக்கான பேர்கள் உள்ளனர்.  ஆய்த்த ஆடைத்துறையில் உள்ளுற இருக்கும் துறைகள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால் இவர்களுக்கு வியர்வை என்ற பெயரில் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கும். இவர்களின் உழைப்பு நம்மை சிந்திக்க வைக்கும்.

Oru Tholitchalaiyin Kurippugal - Jothiji

இந்திய ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. எவர் வேண்டுமானாலும் என்ன தொழில் என்றாலும் தொடங்கலாம். ஆனால் தொழில் தொடங்கிய அத்தனை பேர்களும் ஜெயித்து விடுவதில்லை. ஜெயித்தவர்களும் நிலையாக நீண்ட காலம் நிலைத்திருப்பதும் இல்லை. தொடர்ச்சியாக ஜெயித்து நீண்ட காலம் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த அந்த நிறுவனத்தில் அவனை சந்தித்தேன்.


அவன் பெயர் மாடசாமி. பெயர் பொருத்தமோ? ராசிப் பொருத்தமோ தெரியவில்லை,  அந்த நிறுவனத்தில் அவன் மாடு போலத் தான் நேரம் காலம் தெரியாமல் உழைத்துக் கொண்டிருந்தான். யோசிப்பதை மறந்து காலை முதல் நள்ளிரவு வரைக்கும் வாரம் முழுக்க உழைத்தவனின் கதையைக் கேட்டால் அவலத்தின் உச்சமாக இருக்கும்.


காரணம் அவனின் சொந்த ஊரில் செயல்பட முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உயிருள்ள பிணமாக இருக்கின்றான்.

by Swathi   on 28 Aug 2014  8 Comments
Tags: Oru Tholitchalaiyin Kurippugal   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்...   ஜோதிஜி திருப்பூர்              
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் -  அத்தியாயம் 9 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் - அத்தியாயம் 9
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு -  அத்தியாயம் 8 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு - அத்தியாயம் 8
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : என் பெயர் மாடசாமி - அத்தியாயம் 6 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : என் பெயர் மாடசாமி - அத்தியாயம் 6
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : யோசிக்காதே?  ஓடிக் கொண்டேயிரு! - அத்தியாயம் 5 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு! - அத்தியாயம் 5
கருத்துகள்
20-Sep-2014 02:22:52 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
ஒவ்வொரு விஷயத்தையும் தீர்க்கமாக பதிவு செய்கிறீர்கள். மாடசாமியின் கதையைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அன்புடன், ரஞ்சனி
 
01-Sep-2014 07:01:48 கிருஷ்ணமூர்த்தி said : Report Abuse
வெகு நாளாய் யாராவது பேச மாட்டார்களா இந்த துறையின் வலிகளை என்ற என் எதிர்பார்த்து காத்து இருக்கும் என்னை போன்ற பலருக்கும் ஒரு ஆறுதல் பிரதிபலிப்பாய் உங்கள் பதிவை உணகிறேன் .
 
01-Sep-2014 00:44:11 RAVINDRAN said : Report Abuse
அருமை. அருமை. என்னுடைய வாழ்க்கை நிலை அப்படியே தங்களின் நிலையை போலவே 100 சதவீதம் ஒத்து போகிறது. நம்மை சுற்றி நடப்பவைகளை அப்படியே மனதில் பதிய வைத்திருக்கிறோம். வாழ்ந்தவன், வீழ்ந்தவன் அவ்வளவு பேரின் குணாதிசயங்களை அலசி ஆராய்ந்திருக்கிறோம். வாழ்கையின் அனுபவங்களை எழுத்தில் வடிக்க எத்தனை பேரால் முடிகிறது? தங்களுக்கு அந்த திறமை அப்படியே கை வரப்பெற்றிருக்கிறது. படிப்பதற்காக காத்திருக்கிறேன். என்றும் அன்புடன் ma.ரவீந்திரன் மதுரை
 
31-Aug-2014 19:12:06 ரத்னவேல் நடராஜன் said : Report Abuse
தொழில் சம்பந்தமான விளக்கமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.
 
29-Aug-2014 10:46:53 jayakumar said : Report Abuse
Arumai...arumai...Arumaiyanu eluthu nadai...
 
29-Aug-2014 09:42:42 drtv said : Report Abuse
ம்ம்ம்ம் எல்லாம் சரிதான்; ஆனா கதையை விட்டு எங்கயோ டைக்ரஸ் ஆயிட்டீங்க.......
 
29-Aug-2014 09:33:41 கவிப்ரியன் said : Report Abuse
இது தொழிற்சாலையின் குறிப்பு மட்டுமல்ல. அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைச் சரித்திரமும் கூட. மிகச்சிறந்த மனோ தத்துவரைப் போல மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் அத்தனை அவலங்களையும் உங்கள் எழுத்துக்களில் வடித்து விடுகிறீர்கள் ஜோதிஜி.
 
29-Aug-2014 04:39:38 karthik said : Report Abuse
நல்ல தொடர்.....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.