பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்குத் தேசிய விருது – மத்திய அரசு அறிவிப்பு
பார்த்திபன் நடித்துத் தயாரித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பார்த்திபன் மட்டுமே ஒரு முழு படத்திலும் நடித்திருந்த இந்த படம் வித்தியாசமான முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் திரைப்படங்களுக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்குத் தேசிய விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
|