|
||||||||
ஒன்றிப்பு |
||||||||
ஆனாலும் மழைதான்.
நீ கூப்பிட்டுக் கத்தியும் எழுந்துவர முடியாமல்
கவட்டுக்குள் பூனை மனிதச் சூட்டிற்காய்
எப்போதோ வந்து வாடி அடித்ததையும்
நீ கூப்பிட்ட சத்தத்தில் பதாலித்து முழித்துத்தான்
அறிந்தேன், ஆனாலும் எழுந்துவர முடியவில்லை
கவட்டுக்குள் கைவைத்துப் படுப்பேன்.
நீ வந்து திறந்த கதவின் இடுக்காலே
என் கண்பார்வை சென்று தலைவாசல் தங்குகையில்
தெரிகிறது அலரி தலை கவிழ்த்து நிற்பதுவும்
மல்லிகை சந்திறங்கி அடைமாரித் தாக்கத்தால்
கட்டுக்கோப்பே குலைந்து விரித்தவிரல்
போலத் தூங்குவதும்
அதன் கீழே சில கோழி
தோப்புக்கரணம் போட நிற்பதைப்போல்
நிற்பதுவும்,
இன்னும் மண்ணூறிக்கிடப்பதுவும் தெரிகிறது.
சிணுசிணுத்த மழைத்தூற்றல் கூடத்தான்.
காலைப் பொழுது
சூரியனோ வரவில்லை.
அண்ணாவி இல்லாமல் பொல்லடிக்கும் விதமாக
எல்லோரும் பகலென்று எழுந்து செயற்படுதல்
மாரிமழைக்கும் உற்சாகம் ஊட்டியதோ?
கொட்டைப் பாக்காய் துளியும் பெருக்கிறது.
என்றாலும் எனது கவட்டுக்குள் கையிருக்கும்,
கால்மாட்டில் படுக்கும் பூனைக்கும் எனக்கொரு
இணக்கத்தைக் கொண்டுவந்த அடைமழைக்கு எங்களது
நிலைப்பாடு தெரியாது.
அது அடிக்கும் பலத்த அடி
பாலம் உடையும்,
நடைபாதை துண்டிக்கும்.
உம்மா!
நீ மட்டும் கத்தாமல்
போ.
ஆனாலும் மழைதான். நீ கூப்பிட்டுக் கத்தியும் எழுந்துவர முடியாமல் கவட்டுக்குள் பூனை மனிதச் சூட்டிற்காய் எப்போதோ வந்து வாடி அடித்ததையும் நீ கூப்பிட்ட சத்தத்தில் பதாலித்து முழித்துத்தான் அறிந்தேன், ஆனாலும் எழுந்துவர முடியவில்லை கவட்டுக்குள் கைவைத்துப் படுப்பேன்.
நீ வந்து திறந்த கதவின் இடுக்காலே என் கண்பார்வை சென்று தலைவாசல் தங்குகையில் தெரிகிறது அலரி தலை கவிழ்த்து நிற்பதுவும் மல்லிகை சந்திறங்கி அடைமாரித் தாக்கத்தால் கட்டுக்கோப்பே குலைந்து விரித்தவிரல் போலத் தூங்குவதும் அதன் கீழே சில கோழி தோப்புக்கரணம் போட நிற்பதைப்போல் நிற்பதுவும், இன்னும் மண்ணூறிக்கிடப்பதுவும் தெரிகிறது. சிணுசிணுத்த மழைத்தூற்றல் கூடத்தான்.
காலைப் பொழுது சூரியனோ வரவில்லை. அண்ணாவி இல்லாமல் பொல்லடிக்கும் விதமாக எல்லோரும் பகலென்று எழுந்து செயற்படுதல் மாரிமழைக்கும் உற்சாகம் ஊட்டியதோ? கொட்டைப் பாக்காய் துளியும் பெருக்கிறது. என்றாலும் எனது கவட்டுக்குள் கையிருக்கும், கால்மாட்டில் படுக்கும் பூனைக்கும் எனக்கொரு இணக்கத்தைக் கொண்டுவந்த அடைமழைக்கு எங்களது நிலைப்பாடு தெரியாது. அது அடிக்கும் பலத்த அடி பாலம் உடையும், நடைபாதை துண்டிக்கும்.
உம்மா! நீ மட்டும் கத்தாமல் போ.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|