LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

ஒயிற்கும்மி

மும்மையில் விரையும் முடுகியல் தாங்கியும்
எதுகையும் இயைபும் இடையிடை மிடைந்தும்
ஒலிசிறந் திசைப்பது ஒயிற்கும்மி யாகும்.
கருத்து : விரைவு மும்மையில் நடக்கும்; முடுகியல் அடிகள் தாங்கியிருக்கும்; எதுகைத் தொடையும், இயைபுத் தொடையும் இடையிடையே செறிந்திருக்கும்; பாடலின் ஒலி சிறந்திருக்கும்; இவ்வாறான அமைப்பில் உள்ளது ஒயிற்கும்மியாகும். 
காட்டு : ஒயிற்கும்மி (விரைவு மும்மை)
தென்பரங் குன்றினில் மேவுங் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றுடு முமைப்பெற்றிடு
தில்லைவி நாயகன் காப்பாமே.
(முருகன் ஒயிற்கும்மி. தொடை.281)
இதில் தெ-தே-சி-தி-தி என்ற மோனையும், சிகர-மகர-திகழு என்ற எதுகையும் இடையிடை மிடைந்து வந்துள்ளதையும், இதன் பிற்பகுதியில் ‘தகதத்திமி’ என்னும் சந்தமுடைய நான்கு முடுகியற் சீர்கள் வந்துள்ளதையும் உணரலாம். இதில் இயைபு இல்லை. 
5 சதுசிர இன ஏக தாளவட்டணையில் அடங்கும் 20 சீரடி பெற்று வரும் ஒயிற்கும்மியும் உண்டு. அவை நான்கசைத் தனிச்சொற்களையும் இடையே பெற்று வரும். 
காட்டு : ஒயிற்கும்மி (சதுசிர இன தாளம்)
மாவும்ப லாவும் கொய்யாவும் ஆரஞ்சியும்
வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய்
தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த
பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும்
போவார டிவழுக்கும். 
(வெ.கோ.வ.சிந்து.தொடை.ப.281)
இதில் பழுக்கும், இருக்கும், வழுக்கும் என்ற இயைபும், ‘மகிழ்ந்துவாய்’ என்ற நாலசைத் தனிசொல்லும், ‘மலர்ந்த’ என்ற மூவசைத் தனிச்சொல்லும் வந்துள்ளதைக் காணலாம். எனவே ஒயிற்கும்மி; விரைவு நடையது; முடுகியல் அடிகளைக் கொண்டது; எதுகையும், இயைபும் இடையிடையே செறிந்தது; ஒலி சிறந்தது என்பது போதரும்.

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.