|
||||||||||||||||||
பழகிப்போய்விட்டது ....... |
||||||||||||||||||
ஒவ்வொருமுறையும் நீ என்னை வெட்டியேஎறிந்திருக்கிறாய் ..... வெட்டப்பட்ட ஒவ்வொருமுறையும் தளைத்தே வந்திருக்கிறேன் நான் .... மீண்டும் தளைக்க சில சமயம் நாட்களாகியிருக்கிறது ..... சிலசமயம் மாதங்களாகியிருக்கிறது ...... சிலசமயம் வருடங்களாகியிருக்கிறது ...... ஆனாலும் தளைத்தே வந்திருக்கிறேன் ஒவ்வொருமுறையும் .... தளைப்பதற்கு எங்கிருந்தோ தைரியம் வந்துவிடுகிறது .... தளைத்தே தீர வேண்டுமென்ற தீர்மானம் வந்துவிடுகிறது .... தளைத்த ஒவ்வொருமுறையும் .... தாளாத அதே நேசத்தோடு உன்கதவுதட்டியிருக்கிறேன் .... இதுவரைக்கும் உன் அன்போ .... உன்வாஞ்சையோ ..... நேசமானபார்வையோ .... ஒவ்வொரு முறையும் நீ என்னை வெட்டியேஎறிந்திருக்கிறாய் ...... இப்போதெல்லாம் தளைக்கும்போதும்சரி நான்வெட்டப்படுவதையே எதிர்பார்க்கிறேன் ..... பழகிப்போய் விட்டது .... ஆனாலும் மீண்டும் தளைப்பேன் ... தட்டுவேன் .... - குகன் |
||||||||||||||||||
by uma on 07 Dec 2011 0 Comments | ||||||||||||||||||
|
||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|