|
||||||||
பாலூட்டிகள் |
||||||||
குழந்தாய்! உனக்கு நான்
முலையைத் திறந்து பாலூட்டுவது
சங்கடமாய் இருக்கிறது.
நீ என்
பூவரசம் மொட்டுத்தான்
வால்வெள்ளி பார்க்கவென்று நானெழும்பிக் கண்ட
நடுச்சாமப் பிறைதான்.
உயிர்தான்
இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும்
இன்னும் சொன்னால்
என்
ஈரல் இளமாங்காய் பித்து
எல்லாமே நீதான்.
என்வயிற்றில்
உண்டான காய்தான்.
அதிலொன்றும் குறையில்லை.
என் முகவெட்டை அப்படியே
உாித்துக் கொண்டு பிறந்த கிளிதான்.
அதிலொன்றும் குறையில்லை.
என்றாலும் உனக்கு நான்
முலையைத் திறந்து பாலூட்டுவது
சங்கடமாய் இருக்கிறது.
இந்த முலைப்பால்
என்
இரத்தம் நிறம்மாறி வருகின்ற அமுதம்,
கோதுடைந்த
கோழிக்கு கோழி ஊட்டாத ஒன்று.
மரங்களிலே கேருகின்ற
எந்தக் குயிற் பேடும்
தன்
நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிாியமுடன்
ஊட்ட விதியற்றுப்போன பொக்கிசம்.
இந்தப் பாலைத்தான்
பத்தியமாய் உனக்குத்தான்
ஊட்ட மிகவும் சங்கடமாய் இருக்கிறது.
இன்றைக்கு நீ மொட்டு.
மனங்குருத்தைப் போல
போட்ட இடத்தில் மல்லாக்கக் கிடந்து
"உம்மா" என
உச்சி குளிர்ந்திட
கத்தி விறைக்கின்ற பாலரசி.
நாளைக்கு....
இது
என்ர
திராய்க் குஞ்சு.
குழந்தாய்! உனக்கு நான் முலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது.
நீ என் பூவரசம் மொட்டுத்தான் வால்வெள்ளி பார்க்கவென்று நானெழும்பிக் கண்ட நடுச்சாமப் பிறைதான்.
உயிர்தான் இந்த உடம்பின் ஒவ்வொரு உரோமமும் இன்னும் சொன்னால் என் ஈரல் இளமாங்காய் பித்து எல்லாமே நீதான். என்வயிற்றில் உண்டான காய்தான்.
அதிலொன்றும் குறையில்லை. என் முகவெட்டை அப்படியே உாித்துக் கொண்டு பிறந்த கிளிதான். அதிலொன்றும் குறையில்லை.
என்றாலும் உனக்கு நான் முலையைத் திறந்து பாலூட்டுவது சங்கடமாய் இருக்கிறது.
இந்த முலைப்பால் என் இரத்தம் நிறம்மாறி வருகின்ற அமுதம், கோதுடைந்த கோழிக்கு கோழி ஊட்டாத ஒன்று. மரங்களிலே கேருகின்ற எந்தக் குயிற் பேடும் தன் நாக்குச் சிவந்த குஞ்சுக்குப் பிாியமுடன் ஊட்ட விதியற்றுப்போன பொக்கிசம்.
இந்தப் பாலைத்தான் பத்தியமாய் உனக்குத்தான் ஊட்ட மிகவும் சங்கடமாய் இருக்கிறது.
இன்றைக்கு நீ மொட்டு. மனங்குருத்தைப் போல போட்ட இடத்தில் மல்லாக்கக் கிடந்து "உம்மா" என உச்சி குளிர்ந்திட கத்தி விறைக்கின்ற பாலரசி. நாளைக்கு.... இது என்ர திராய்க் குஞ்சு.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|