LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

பாயிரம்

விநாயகர்

276     மாமேவு மேனியஞ் செக்கர்வான் கார்க்கவுண் மதக்கமஞ் சூற்கொண்டலோர்
      வண்கோட் டிளம்பிறை விளங்குபுகர் மீன்செம்மை வாய்ந்த நயனக்கதிரவன்
காமேவு குடிலத் தடித்தொளிர் தரச்சுரர் கணம்புகழ்ந் தேத்தெடுப்பக்
      களிமிக்கு மண்ணுலகம் விண்ணுலக மாகவமர் கடவுளடி முடிசூடுவாந்
தேமேவு கொன்றையணி துன்றுசடை யெந்தையார் சிந்தைத் தடத்துண் மலருஞ்
      செங்குங்கு மத்தாது விழியளி மொழித்தேன் றிகழ்ந்தமுக வம்போருகப்
பூமேவு பொற்கொடியை மற்கெழுமு மளவில்பல புவனப் பரப்பெலாமுன்
      பொறையுயிர்த் தாளைநிறை யுறையூர்ப் பிராட்டியை புகழ்தமிழ்க் கவிதழையவே.     (1)

சிவபெருமான்

277     தேனொழுகு செழுமலர்ப் பொழில்சுலவு கழுமலச் சிறுகுழவி நாவரசுநற்
      றென்னாவ லூர்நம்பி வாதவூ ரெம்பிரான் றிகழுமிந் நால்வர்தம்வாய்க்
கானொழுகு மமுதமழை கொடுகுளிர்ப் பித்திடக் கண்டுவெண் டுண்டமதியுங்
      கங்கையு மிலைந்தவை தருங்குளிர்க் காற்றான் கடுப்பக் கரத்தினுதலில்
வானொழுகு செந்தழ லிருத்திக் கரித்தோல் வயங்குதிரு மேனிபோர்த்த
      வள்ளலைப் பரசியெம துள்ளலைக் குங்கொடிய மாசறுப் பாஞ்சுடர்த்த
மீனொழுகு மதி தவள மாடத் துரிஞ்சலுடல் விரவுமுய னீத்துமடவார்
      விழைமுக மடுப்பது கடுக்குமுறை யூரம்மை விரிதமிழ்க் கவிதழையவே.     (2)

உமாதேவியார்

278     வண்ணமதி யிற்கலையு மிரவியிற் சுடருமல ரிற்பொலியு நாற்றமும் போன்
      மறைதுதிசெ யிறைவரொடு பிரியாத தனதியல்பை மாலயன் முதற் சுரர்க்கு
நண்ணரிய தாயவொரு திருமேனி வாமத்தி னன்குறக் காட்டிநிற்கு
      நாயகியை யகிலமு மளித்தபெரு மாட்டிதனை நாத்தழும் பத்துதிப்பார்
தண்ணமு தசும்பமுயன் மதிநடு வுறச்சுற்று தவளமா ளிகையருகெலாந்
      தாவில்சூற் கொண்டறலை தாங்கித் துகிற்கொடிக டங்குவது பாலொழுகுவா
யண்ணல்பசு மடலோடு நீற்றடியர் நடுநின் றரைப்பாய் நுடங்கிடக்கா
      ரமணரைக் கழுவேற்றி யதுகாட்டு முறையூரெ மம்மைநற் றமிழ்தழையவே.     (3)

விநாயகர்
279     கண்ணறா நெற்றிப் பிரான்சடை யிடைப்பொற் கடுக்கையந் தாதளாவங்-
      கலைமதியை யிகல்வென்று கரைகொண்டு வாங்குதன் கைக்கோ டுடன்பொருத்தி,
விண்ணறா வொருகதிர வன்றேற்றல் காட்டியவ் வியன்சடைக் கங்கையாற்றில் -
      வீழ்த்தத்த மனமுந் தெரித்துப்பின் முன்போல் விரைந்தெடுத் துப்பொருத்தித்,
தண்ணறா வொருமுழுத் திங்களுத யங்காட்டு தம்பிரான் றிருவடிக்கே
      சரணடைந் தேமுளரி மலரிதழ்பொன் மூடித் தயங்கலம் மாதுகொழுநன்
புண்ணறா ஞாட்பிற்றன் மகிழ்நனை மறைத்தபகை போற்றுதல் கடுக்குமுறையூர்ப்
      புண்ணியம் பூத்தருள் பழுத்தபொற் கொம்பினைப் புகழ்தமிழ்க் கவிதழையவே.     (4)

சுப்பிரமணியர்

280     கொங்குலவு கோதயயி ராணிதாள் பட்டமரர் கோமான் புயஞ்சிவப்பக்
      கூடித் திளைத்தவள் கருங்கண் சிவப்பக் கொடுந்தொழிற் றகுவர்மடவார்
செங்கையொடு கொங்கைகள் சிவப்பக் கடைக்கண் சிவந்தானை யொருகுறப்பெண்
      சீறடிக் கல்லால் வணங்கா முடிப்பெருஞ் சேவகனை யஞ்சலிப்பாஞ்
சங்கெறி துறைக்கட் குடம்பையோ டொருபூந் தருத்தாழ்ந்து நிற்பவம்பர்த்
      தாமரைக் கொடிநுழைந் தம்மலர் மடுத்தத் தடத்தினுட் பாய்கயலெலாம்,
பொங்குமீன் கூடுபி னுறக்குனிந் ததிபத்தர் பொள்ளல்வலை படுமுன்மீனைப்-
      பொற்கையி னெடுத்துவிடன் மானுமுறை யூர்க்கருணை பூத்தா டமிழ்க்கருளவே.     (5)

திருநந்திதேவர்

281     கருதரிய வுலகெலாங் காக்கும் பிரான்றிருக் கயிலையைப் பொதுமைநீக்கிக்
      காக்குமோ ருரிமைகொண் டெழின்மார்பின் முடியிற்பல் கடவுளர் தரித்தொளிவிடுந்
துருவருங் கவுத்துவ முதற்பல மணித்தொகைக டுகளா யெழப்புடைக்குஞ்
      சூரல்படை யாக்கொண்ட வெந்தைபெரு மானடித் தொண்டரைக் கண்டுபணிவா
மருகுபெரு காற்றுப் புனற்றெளிவின் மூழ்கிடா தள்ளற் கருஞ்சேற்றின்வா -
      யாழ்ந்தே யுழக்கிக் குலைக்கணே றாதுழ லடிப்பிள வுடைப்பன்மேதி
திருவமுறு சைவத் தழுந்தாப் புறச்சமயர் திறமிற் றெனத்தெரிக்குந்
      தென்னுறந் தைப்பதியின்மன்னும் பிராட்டிதன் செந்தமிழ்க் கவிதழையவே.     (6)

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.

282     பாலொழுகு குமுதவாய்ப் பிள்ளையைக் கள்ளப் படிற்றமணர் கூற்றை நீற்றைப்
      பற்றியவர் பற்றறப் பற்றுமொரு களைகணைப் பாரிக்கு ஞானவொளியை
மாலொழுகு புன்புற மதத்தரும் வியந்துதுதி வாய்பேச வென்பினைப்பெண்
      வடிவாக்கு தூமணியை மாமறைத் தமிழ்மொழி மழைக்கொண்டலைப்பரவுவாஞ்
சேலொழுகு கண்ணிய ரியங்குபொழி லிற்கருஞ் செழுமுகில் விராவொருதருச்
      சினையுறுஞ் செந்தே னிறாலொரு வளாருறச் சென்றுவளி யெறியமோதல்
நீலொழுகு முடலவுண ரைச்சவட் டியவலி நிறுத்தவொர் துரும்பைவளையா
      னெடுபால்ப· றரமோதல் காட்டுமுறை யூர்க்கண்வளர் நிமலைநற் றமிழ்தழையவே.     (7)
பாயிரம்.
திருநாவுக்கரசுநாயனார்.

283     கருமுருட் டுப்பறி தலைச்சமண ராழ்துயர்க் கடலிடை யழுந்தவெம்மான் -
      கருணையங் கடலிடை யழுந்திப் பறம்பொடு கருங்கடலின் மிசைமிதந்த,
திருவமுறு செந்தமிழ்க் கடலைத் தழைந்தொளிகொள் சிவஞான தீபத்தைநற் -
      சிவமணங் கமழ்மறைத் தமிழ்பொழியு முகிலைத் தினம்பணிந் தேத்தெடுப்பாம்,
பருவமுகி னித்திலச் சுதைதீற்று மாடப் பரப்பிற் படர்ந்துதுயிறல் -
      பாற்கடலின் மீமிசைக் கண்டுயில்கொள் சக்கரப் படையுடைப் பகவனேய்க்கு,
மொருபெரு வளத்தவுறை யூரிடை யமர்ந்தருளு முமையவளை யிமையம்வந்த -
      வொண்பிடியை யலகெலா முதலிய வொருத்தியை யுரைக்குமின் றமிழ்தழையவே.     (8)

ஸ்ரீசுந்தர்மூர்த்திநாயனார்.

284     முன்னரிய முதுகுன்றர் தந்தபொரு லற்றிட்டு முரித்ரைப் பூங்குளத்தின் -
      முன்னெடுத் தவனைவெம் முதலைவாய்ப் பிள்ளைதரு முதல்வனைப் பிறைமுடித்து,
மன்னுமொரு தம்பிரான் றோழனைக் களிகொண்டு மதுவுண்டு வண்டுமூச -
      மணமாலை துயல்வருந் தோளனைப் பரவைமண வாளனைப் பரவிநிற்பா,
மின்னனைய சடையர்முடி காறுமய னாணச்செல் விரிதலைத் தாழைகளெலாம் -
      மெய்யநின் போனீர் தரித்துமுக் கட்பெறுமெ மெய்ச்சினையை யுலகின்மடவார்,
தென்னுலவு கொங்கையொப் பென்பரென வவர்திருச் செவியறி வுறுத்தல்காட்டுஞ் -
      செறிவள மலிந்ததிரு நகரெனு முறந்தையுமை செந்தமிழ்க் கவிதழையவே.     (9)

திருவாதவூரடிகள்.

285     திருவார் பெருந்துறையி லொருகுருந் தடியிற் செழுங்கங்கை முடிமிலைந்த -
      சிவபிரா னருளுதலு மழல்வெண்ணெய் கல்லெனச் சிந்தைநெக் குருகியுருகி,
மருவார் மலர்க்கரஞ் சென்னிமீக் கொண்டிருகண் மழைவார வானந்தமே -
      மாறாத சிவபோக நறவுண் டிருந்தவருள் வள்ளல்பொற் றாள்பரசுவாம்,
வெருவா விளஞ்சூற் றகட்டகட் டிளவாளை மிடறிறப் பாய்வதஞ்சி -
      விரிதலைக் கதலியுஞ் செங்காய்ப் பசுங்கமுகும் வேழக் கரும்புமாராய்ந்,
திருவா னளிக்குமக வான்கருணை பெறமே லெழுந்தது கடுப்பவன்னா -
      னெழின்மண்ட பத்தினுக் கழகுதரு முறையூ ரிருந்தா டமிழ்க்குதவவே.     (10)

ஸ்ரீசண்டேசுவரநாயனுரும் மற்றநாயன்மார்களும்.

286     சிவகருமம் யாவர்கள் சிதைத்திடினு மவர்களைத் தேர்ந்துயிர் தபக்கோறலே -
      சிவதரும மென்பது தெரிந்துயிர்க ளுய்யத் திருத்தாதை தாளெறிந்த,
தவமழ முனித்தலைவர் தாளுமா ரூர்நம்பி சாற்றுமறு பத்துமூவர் -
      தாட்டா மரைப்போது மெப்போது முடிமீத் தரித்துத் துதித்தல்செய்வாந்,
துவரெறி யிளந்தளி ரரும்பிய நறுங்கனிச் சூதம்வா னோங்கிநிற்றல் -
      துருவரிய வினமான வொருமாவை யிளையவன் சுடரயில்கொ டுடல்பிளக்கத்,
திவளொளி முடித்தேவர் செய்தது தெரிந்தத் திருத்தேவ ருலகடர்க்கச் -
      சீறிச் சிவந்தெழுந் ததுசிவணு முறையூர்ச் செழுங்கோதை தமிழ்தழையவே.     (11)

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.