LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தான் தனியார் பள்ளிகளில் மலாலா புத்தகத்திற்கு தடை !!!

பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடியதால், மலாலா என்ற 15 வயது சிறுமியை தாலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது. தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனையை, 'நான் மலாலா' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட விரும்பினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து ஆசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள 'நான் மலாலா' என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. பாகிஸ்தானில்,இப் புத்தகம் ரூ.595க்கு விற்கப்படுகிறது.

 

தனியார் பள்ளிகளில் தடை :

 

நான் மலாலா புத்தகத்தில் மேற்கத்திய சக்திகளின் தூண்டுதலால் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றிருப்பதால் 'நான் மலாலா' புத்தகத்தை பள்ளி பாடதிட்டம் மற்றும் நூலகங்களில் தடை விதிப்பதாக பாகிஸ்தான் அனைத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறுகையில், பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.கோடிக்கணக்கான மாணவிகளுக்கு சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் பெண் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே, பாகிஸ்தானில் உள்ள சுமார் 1.5 லட்சம் பள்ளிகளின் பாடதிட்டமாகவோ, கட்டுரை தொடர்பான போட்டிகளிலோ, பள்ளி நூலகங்களிலோ அந்த புத்தகத்தை பயன்படுத்த கூடாது என்று நாங்கள் தடை விதித்துள்ளோம் என மிர்சா காஷிப் கூறியுள்ளார். 

by Swathi   on 10 Nov 2013  0 Comments
Tags: Malala   Malala Book   I am Malala   மலாலா   மலாலா புத்தகம்   நான் மலாலா     
 தொடர்புடையவை-Related Articles
பாகிஸ்தான் தனியார் பள்ளிகளில் மலாலா புத்தகத்திற்கு தடை !!! பாகிஸ்தான் தனியார் பள்ளிகளில் மலாலா புத்தகத்திற்கு தடை !!!
பாகிஸ்தான் பிரதமராவதே எனது லட்சியம் : சொல்கிறார் சிறுமி மலாலா !!! பாகிஸ்தான் பிரதமராவதே எனது லட்சியம் : சொல்கிறார் சிறுமி மலாலா !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.