LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

பல்லாங்குழி விளையாட்டு

தோற்றம் மற்றும் வளர்ச்சி:

பல்லாங்குழியின் தோற்றம் பற்றி தெளிவான கருத்து எதையும் விளக்க முடியவில்லை.ஏனென்றால் ஆப்பிரிக்காவில் சூடான்,கென்யா, உகான்டா, தான்சானியா,ரொடிசியா,தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. எகிப்து பிரமிடுகளிலும் பல்லாங்குழி செதுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் 'அடியார்க்கு நல்லார் உரையில் மட்டும் இதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.' இவ்விளையாட்டு பண்டைய காலத்திலிருந்து விளையாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க காலத்தில் கிராமத்தில் மண்தரையில் குழிகளைத் தோண்டி விளையாடப்பட்டது. நாளடைவில் வளர்ச்சிப் பெற்று மரப்பலகையில் குழிகளை அமைத்து விளையாடப்பட்டு வருகிறது. பல்லாங்குழி விளையாட்டின் தோற்றத்தயும்,வளர்ச்சியையும் ஆராயம் போது பெண்களுக்கான விளையாட்டின் இயல்புகள் அதிகளவில் தென்படுகிறன. இலங்கையில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 18-குழிப்பலகை அமைப்பு 'பல்லபெட்டா' என்னும் இடத்தில் உள்ள விகாரக் குகையில் காணப்படுவதால், பல்லாங்குழி ஆட்டம் இங்கே வழக்கத்தில் இருந்திருக்கின்றது என்பதை உறுதி செய்யப்படுகிறது.

பெயர்க்காரணம் :


பல்லாங்குழியென்பது பண்ணாங்குழி, பன்னாங்குழி, பள்ளாங்குழி, பதினாங்குழி, பரலாடும் குழி, பாண்டி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. பல அழகிய குழிகளை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆட பெறுவதால் (பல+ஆம்+குழி=பல்லாங்குழி) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கிராமத்தில் நெல்க்குத்துவதற்காக தோண்டப்படுகின்ற சிறுபள்ளத்தை பண்ணை என்று கூறுவதுண்டு. அதைப் போலவே சின்ன பள்ளம் தோண்டி கற்களையிட்டு ஆடுவதால் 'பண்ணாங்குழி' எனப்படுகின்றது.பள்ளம்+குழி எனப்பிரித்தால் பூமியில் பள்ளம் தோண்டி குழியாக்கி கற்களை இட்டு விளையாடப்படுவதால் 'பள்ளாங்குழி' என வழங்கப்பட்டிருக்கலாம். பதினான்கு குழிகள் இருப்பதால் பதினாங்குழி எனப் பட்டிருக்கலாம். மேலும் 'முத்து' என்பதற்கு 'பரல்' என்றும் பொருள் உன்டென்பதால் பரலாடும் குழி என்று மாறியிருக்க்கலாம். இவ்விளையாட்டிற்கு பாண்டியாட்டம் என்ற பெயரும் உண்டு.

விதிமுறை :


14-குழிகளில் கற்களையோ அல்லது புளியமுத்தையோ குறிப்பிட்ட எண்ணிக்கையில் வைத்து தங்களின் குழியிலிருந்து காய்களை எடுத்து வலமிருந்து இடதுபுறமாக அனைத்து குழிகளிலும் காய்களை போட்டு வரவேண்டும் கய்கள் தீர்ந்த பின்பு அடுத்த குழியிலிருந்து காய்களை எடுத்து போடவேண்டும் எவ்வாறு போட்டு வரும் போது காய் தீர்ந்து விடும்போது பக்கத்து குழியில் காய் ஏதும் இல்லாமல் இருந்தால் அதற்கு அடுத்த குழியில் உள்ள கைகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளலாம் பின்னர் அதே போல எதிரே இருப்பவர் விளையாடுவார் இவ்விளையாட்டில் முடிவு தெரிய அதிக நேரம் எடுக்கும். ஆட்டத்தை தொடர முடியாவிட்டால் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய எவரிடம் காய்கள் அதிகமாக இருக்குமோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.

வகைகள் :


பல்லாங்குழி விளையாட்டில் பல வகைகள் இருக்கின்றன 1. பசுப்பாண்டி , 2. சரிப்பாண்டி 3. எதிர்ப்பாண்டி 4. இராஜாப்பாண்டி, 5. காசிப்பாண்டி, 6. கட்டுப்பாண்டி, 7. சீதப்பாண்டி என்று தமிழறிஞர்கள் பிரித்துள்ளனர். மேலும் அரிப்பாண்டி, முத்துப்பாண்டி, தாயிச்சிப்பாண்டி என்று மூன்று வகைகளை குறிப்பிட்டுள்ளனர்.

பயன்கள் :

பல்லாங்குழி விளையாடுவதால் எண்ணிக்கை திறன் அதிகரிக்கிறது. குழிகளில் கற்களை எடுத்து விளையாடும் போது விரல்களுக்கு பயிற்சி கிடைக்கும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் நுண்ணிய கணிதத்திறன் அதிகரிக்கிறது. அறிவுத்திறனும், வாய்ப்புநிலை இயல்பும் இவ்விளையாட்டில் காணப்படுகிறது.

by Swathi   on 24 Jan 2015  2 Comments
Tags: பல்லாங்குழி   பல்லாங்குழி விளையாட்டு   Pallanguzhi Game   Pallanguzhi Vilaiyattu           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
25-Aug-2019 02:43:31 Pradeep said : Report Abuse
7 types Oda rules and regulations venum pls send me mail
 
27-Apr-2017 21:15:08 kirthaani said : Report Abuse
சோ நைஸ் நோட்ஸ் இது எனக்கு நல்ல பயன் அளித்திருக்கிறாய்த்து.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.