LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அப்புசாமி

பந்தியும் ப·ப்வேயும்

 

இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி ‘பந்திக்கு முந்திக்கோ’ என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு, மியூஸிகல் சேரில் இடம் பிடிப்பதுபோல் டைனிங் ஹாலில் காலி நாற்காலியை நோக்கிப் பாயவேண்டிய அவசியமே இல்லை. முதலில் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்குமுன் நாற்காலியில் உட்காந்து கொண்டு எச்சசொச்சங்களை அருவருப்புடன் பார்க்கும் அபாக்கியங்கள் இல்லை.
பிரபல சமையல் காண்ட்ராக்ட் விற்பன்னர்களெல்லாம் இப்போது ப·ப்வே முறைக்குத் தாவிவிட்டார்கள். இது ரொம்ப ஆறுதலான விஷயம்தானென்றாலும் எல்லா ப·ப்வே விருந்துகளிலும் ‘இஷ்டம்போல் வெட்டுங்கள்’ என்று முழுச் சுதந்திரம் அளிப்பதில்லை – முக்கியமாக கல்யாண ப·ப்வேக்களில்.
ஒவ்வொரு பலகார செக்ஷனிலும் ஓரிரு வெயிட்டர்கள், கிங்கரர்கள் போல் ஒரு கையில் பிளாஸ்டிக் உறையை மாட்டிக்கொண்டு (ஏதோ கை படாமல் எடுத்துப் பரிமாறுவதாக பாவலா பண்ணிக்கொண்டு) கரண்டியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.
தட்டை நீட்டினால், கரண்டியால் பலகாரத்தை எடுத்து நம் தட்டில் ஒரு உதறல் உதறுவார்.
சில சமயம் பொங்கல் இசுக்குப் பிசுக்காக இருந்தால் பாதி கரண்டி அளவுதான தட்டில் விழும். மீதிப் பாதி நிரந்தரமாகக் கரண்டியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அளவைக் குறைக்க காண்ட்ராக்டரே கரண்டியில் நிரந்தரமாக அதை ஒட்டியிருப்பார்களோ என்று கூடச் சிலர் சந்தேகப்படுவதுண்டு.
“இன்னும் ஒரு கரண்டி” என்றோ “ஸம் மோர் ப்ளீஸ்” என்றோ… “விழவே இல்லையே” என்றோ பொங்கல் பொறுப்பாளரிடம் பேரம் பேச முடிகிறதா? பின்னாலே க்யூவிலிருப்பவர்களுக்குப் பொறுக்காது.
‘சரியான அல்பம்’ என்பது போலப் பார்ப்பார்கள். (அவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ நமக்கு என்று ஒரு கெளரவம் இருக்கிறதல்லவா?)
அதிகமான அயிட்டங்கள் இருப்பது போன்ற பிரமையை உண்டு பண்ணுவதில் ப·ப்வே சமையல்காரர்களுக்கு விசேஷ சாமர்த்தியம் உண்டு.
உதாரணமாக இட்லி க்யூவில் நிற்கிறோம் என்று வையுங்கள்.
தட்டை ஏந்திப் போனவுடன் பிளாஸ்டிக் உறைக் கைக்காரர் ஒரு இட்லியை நம் தட்டில் வைக்கிறார் (போடுகிறார்) (அடுத்தவர் வாளியிலிருந்து சிவப்பாக ஒரு சட்னி போடுகிறார். சில இஞ்ச் நகர்ந்ததும் பச்சையாக ஒரு சட்னி. இன்னும் முன்னேறினால் கூட்டு மாதிரி இனம் தெரியாத ஏதோ ஒன்று.
அதையும் தாண்டிப் போனால் மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் ரெடி மிக்ஸாகக் கலந்து வைத்ததை ஒருத்தர் ஒரு ஸ்பூன் சிந்துகிறார்.
இந்தத் தொடரை அடுத்துச் சென்றால் கமகமவென்று சூடா சாம்பாரை ஒருத்தர் ஊற்றுகிறார்.
சாம்பாரையும் கடந்தால் மோர்க்குழம்பு மாதிரி ஆனால் மோர்க் குழம்பு அல்லாத ஏதோ ஒரு திரவம். (சமையல்காரரின் சென்சார் செய்யப்படாத கற்பனை.)
ஒரு இட்லிக்கே இத்தனை உபகிரகங்களும் இருப்பதால் பிளேட் நிரம்பி விடுகிறது.
ஆனால் நாம் கடக்க வேண்டிய பலகார தூரமோ இன்னும் ஏராளமோ ஏராளம்..
இட்லிக்கு முன்னதாக ஸ்வீட் உண்டாச்சே! அடடே அதைக் கோட்டை விட்டு விட்டோமே. எல்லார் தட்டிலும் மஞ்சளாக ஒன்று மின்னுகிறதே… பாதம் அல்வாவா, மைசூர்ப்பாகா – எதுவாயிருந்தாலும் ப·ப்வே தர்மம் என்னவென்றால் – எந்தப் பலகாரத்தையும் ஒதுக்கிய பாவம் நமக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்.
ஆனால் தியேட்டரிலிருந்து புறப்பட்டபின் கேட்டில் காரை ரிவர்ஸ் செய்வது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் ப·ப்வே கியூவில் ரிவர்ஸ் எடுப்பது.
ஒரு ஸ்வீட் துண்டுக்காக க்யூவிலிருந்து விலகினோமானால் மறுபடியும் நமக்கு அந்த இடம் கிடைக்காது. ‘சார் கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்குங்க… ஓடிப் போய் ஸ்வீட் வாங்கிண்டு வந்துடறேன்,” என்று க்யூவிலிருப்பவர்களிடம் சொல்ல முடியுமா என்ன? நமக்கென்று சில செல்·ப் ரெஸ்பெக்டுகள் இருக்கிறதே. ஆகவே அந்த ஸ்வீட்டை அடுத்த ரவுண்டில் சந்தித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இட்லியின் தொடர்ச்சியைக் கவனிப்போம் என்று அடுத்த பலகார பக்கம் போகிறோம்.
அடுத்தது கிச்சடி. கிச்சடிக்கும் பல உபகிரகங்கள் உண்டு. கொத்ஸ¤, வத்தக் குழம்பு, வற்றாத குழம்பு, அதற்கு ஒரு கூட்டணி கூட்டு.
இட்லிக் கூட்டணியுடன், கிச்சடிக் கூட்டணியும் சேர்த்து தட்டில் சற்று களேபரம் ஏற்படுகிறது.
ஆனால் இப்போதுதான் இரண்டே இரண்டு பலகாரங்களை அடைந்திருக்கிறோம்.
அடுத்தது என்ன? ஊத்தப்பமா? நகர்கிறோம்.
சிறிய சைஸில் சற்றே ஆறிய ஊத்தப்பம், இட்லி, கிச்சடி மீது விழுகிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள சமையல்காரர் தேங்காய்ப்பாலோ மாங்காய்ப் பாலோ செய்திருக்கிறார். அந்தத் திரவம் ஒரு பேப்பர் கிண்ணத்தில் ஊத்தப்பத்துக்கு அருகே இடம் பிடித்துக் கொள்கிறது.
ஏற்கனவே திரவ நிலையில் தட்டிலிருந்த சாம்பாரைப் பராமரிப்பதே பெரும் கஷ்டமாக இருக்கும்போது, பால் போன்ற நிறத்தில் இது வேறு வந்து சேர்ந்திருக்கிறது.
பார்ப்போம்… இதையெல்லாம் ரசிக்கத்தானே வேண்டும் என்று மனசைத் தேற்றிக்கொண்டு அடுத்த அயிட்டத்துக்கு பாலன்ஸ் பண்ணிக்கொண்டு நகர்கிறோம்.
ப·ப்வே அனுபவமுடையவர்கள் கியூவின் துவக்கத்திலேயே முன் ஜாக்கிரதையாக இரண்டு காலி பிளேட்டுகள் எடுத்து வருகிறார்கள்.
ஐயோ, இப்படி இரண்டு, பிளேட் எடுத்துவர வேண்டும் என்ற புத்தி நமக்கு இல்லையே என்று நாம் நினைக்கிறதையே, மனைவியும் நினைத்து நம்மைப் பார்க்கிறாள். ரகசியக் குரலில், “நான் வேணும்னா போய் ரெண்டு தட்டு எடுத்து வந்துடட்டுமா?” என்கிறாள்.
“சீ! சீ! அல்பம்! சும்மா இரு!” என்று அடக்குகிறோம் அல்லது அடக்குவது போலக் கண்ணால் முறைக்கிறோம்.
கிச்சடிக்குப் பிறகு இடியாப்பம் வெள்ளை வெளேரென்று கவர்கிறது.
இரண்டு இடியாப்பமும் அதற்குத் தொட்டுக்கொள்ள குருமா ஒரு கிண்ணமும் தட்டில் வந்து சேருகிறது.
காலேஜ் நேரத்தில் மாணவர்கள் பஸ்ஸில் தொத்திக் கொள்வதுபோல தட்டு விளிம்பில் ஒரு இடியாப்பம், தொங்கியவாறு விழுந்து விடுவேனென்று பயமுறுத்துகிறது. கியூவில் நகர்ந்து கொண்டே சாப்பிடுவதும் நாசூக்கானதாக இல்லை. யாரும் அப்படிச் சாப்பிடுவதில்லை.
இடியாப்பம் ப்ளஸ் குருமாவுடன் இப்போது இன்னுமொரு பேரிடி.
சுடச் சுடக் கல்லில் மசாலா தோசை ஏக காலத்தில் அரை டஜன் கமகமவென்று வேகிற காட்சியைக் காண்கிறோம்.
ஒரு வினாடி நேரத்தில் ஒரு கரண்டி மாவை டபராவில் மொண்டு, அவனருளாலே அவன்தாள் போற்றி என்பது போல அதே டபராவினால் மாவைக் கல்லில் தேய்த்து சுடச்சுட மசால் தோசை மடித்தாயிற்று. நம் தட்டில் சொத்தென்று இரும்புக் கரண்டியால் போடுகிறார்.
தோசையானது சகல பலகாரங்களையும் பாதியளவு மறைத்தவாறு தட்டில் உட்கார்ந்து விட்டது.
இப்போது செக்கச் செவேலென்று காலி·பிளவர் ·ப்ரை….
டி.வி. கதைகளில் ‘விளம்பர இடைவேளைக்குப் பிறகு’ என்பது போல கட்டாயம் பிரேக் கொடுக்காவிட்டால் தட்டை ஒழுங்காகத் தூக்க முடியாது போன்ற நிலை.
அந்த காலி·பிளவர் ·பிரையை நம் தட்டில் ஒருத்தர் தூவுகிறார். மொற மொற ·ப்ரை சாம்பாரில் முழுகி தனது மொறப்பை இழக்கும் அநியாயக் காட்சியைக் காணச் சகிக்காமல், முதல் சுற்றை முதலில் காலி செய்து விடுவோம் என்பதாக வைத்து கொண்டு சாப்பிட ஏதாவது மேஜை, ஜன்னல் விளிம்பு கிடைக்காதா என்று பார்க்கிறோம்.
ஓட்டல்களானால் அப்படிப்பட்ட விளிம்புகள் கிடைக்கும்.
கல்யாண மண்டபத்தில் பிளேட்டை ஒரு கையில் வைத்துக் கொண்டு மண்டபத்தில் உலவிக்கொண்டே சாப்பிட வேண்டும்.
எதிரே வருபவருடன் முட்டிக் கொண்டு தட்டைச் சாய்த்துவிட்டால் அசிங்கம். பட்டுப் புடவைகள் அதிகம் சஞ்சரிக்கும் ஸ்தலம்.
ஆகவே பரம ஜாக்கிரதையாக டிராபிக் ஜாமில் பைக் செலுத்திச் செல்வதுபோல ஜாக்கிரதையாக வளைந்து நெளிந்து ஊடுருவ வேண்டும்.
எதிரிலே தெரிந்தவர் வாட்டர் பாட்டிலுடன் வருகிறார்.
ஸீல் செய்யப்பட்ட சிறிய சைஸ் அழகான வாட்டர் பாட்டில்…
அடடே! இப்படி ஒரு அயிட்டம் தருகிறார்களா? அது எங்கே என்று நாலாபக்கமும் கண்ணைச் சுழற்றி ஒரு வழியாகக் கண்டு பிடித்து மேற்படி பாட்டில் தண்ணீரைக் கைப்பற்றும் வரை நாம் ஏமாந்துவிட்டோம் என்ற உறுத்தல் இருக்கிறது. தண்ணி கியூவில் நின்று ஒரு பாட்டிலை வாங்கி இடுக்கிக் கொண்டு வெற்றிகரமாகச் சாப்பிடத் தொடங்கினால், எவனோ தயிர் வடையைத் தயிர் சொட்டச் சொட்ட ஒருத்தர் எடுத்துப் போகிறார். மேலே தழை, கிழை போட்டு வடை அபார கவர்ச்சியாயிருக்கிறது.
உடனடியாக தயிர்வடை இலாகாவைத் தேடுகிறோம்.
இன்னும் அதே எச்சில் தட்டைத் தூக்கிக் கொண்டு போக வேண்டுமா? அனுபவமுள்ளவர்கள் கையிலுள்ள தட்டைக் கீழே அதற்கென்றிருக்கிற வாளியில் போட்டுவிட்டுப் புதுத் தட்டுடன் தயிர் வடைப் பயணம் துவங்குவதைக் காண்கிறோம்.
ஆகா.. நமக்கு இந்த டெக்னிக் தெரியாமல் போயிற்றே? சரி. பரவாயில்லை என்று பழைய எச்சில் தட்டிலேயே தயிர்வடை கியூவில் நின்று மேற்படி வஸ்துவை அடைகிறோம்.
தயிர் ததும்பும் தயிர் வடை அதற்கு ஒரு ஸ்பூன். அருகில் வரட்டு மிளகாய்ப் பொடி செக்கச் சிவக்க. அதை நாமே எடுத்துத் தூவிக் கொள்ளும்போது பிளேட்டை உஷாராகப் பிடிக்காவிட்டால் தயிர் கீழே கொட்ட ஏது உண்டு.
“காரா பூந்தி சார்” என்று அதட்டுகிறது ஒரு குரல். ‘ஓ! தயிர் வடை மேல் காரா பூந்தி தூவ ஒருத்தர் காத்திருக்கிறார். கோவிலில் சண்டிகேஸ்வரரைச் சுற்றாவிட்டால் அவருக்குச் கோபம் வந்துவிடுமாம் – அது மாதிரி காராபூந்திக்காரரின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்று அந்த ஆசிர்வாதத்தையும் வாங்கிக்கொண்டு நகரும்போது, சாம்பார் வடை குறுக்கிவிடுகிறது.
நல்ல வேளை, தனி பிளேட்டில் தந்து விடுவதால் அதையும் வாங்கிக் கொண்டு ‘அதற்கு மேலாகத் தூவப்படும் வெங்காயம், கொத்துமல்லி இதர அலங்காரங்களையும் அங்கீகரித்துக் கொண்டு சீக்கிரம் சாப்பிடுவோம் என்று வேகமாக நடக்கையில், குழிப்பணியாரம் கவன ஈர்ப்பைக் கொண்டு வருகிறது.
சே! சின்னச் சின்ன சைஸில் என்ன அழகு… என்ன புதுமை… அதை கையகப்படுத்திக் கொண்டு நகர்ந்தவுடன், காகிதப் பிளேட்டில் கொட்டிய சாஸ் ரெட்ட ரெடியாக இருக்கிறது.
அதையும் கொத்திக்கொண்டு இரண்டாம் சுற்றை முடிக்கிறோம்.
வயிற்றில் இன்னும் நிறைய இடம் இருப்பதாகவே தோன்றுகிறது – கண்கள் ஏற்படுத்தும் பிரமை.
இன்னும் சுண்டல், சித்ரான்ன வகைகள், பூரி, நான், ப்ரெட் பட்டர் ஜாம், சப்பாத்தி, பரோட்டா, மசால் தோசை எல்லா தினுசுகளும் அவ்வப்பொழுது சுடுகல்லில் போட்டுப் போட்டு எடுக்கப்பட்டவை.
இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாவது தின்னாமல் வெளியேறினால் நமக்குக் கொடிய நரகம்தான் கிடைக்கும் என்ற உணர்வு தோன்ற அந்தந்த வரிசைகளில் நிற்கிறோம்.
கொஞ்சம் கலைந்து இருந்தாலும் இப்போதெல்லாம் பரவாயில்லை.
ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் – தோசை போடுபவர் நீட்டும் நீளத் தோசைக் கரண்டி நம் மேல் பட்டு விடாதபடி ஜாக்கிரதை உணர்வோடு ஒதுங்கிக் கொண்டு தட்டை மட்டும் முன்னே நீட்டி தோசை பெற வேண்டும். நமக்கு வேண்டியது தோசையே தவிர சூடு அல்ல என்பது யாவரும் அறிந்ததே.
இத்தனைக்கு அப்புறம் காய்கறி பழம் பரேட்…..
வட்ட வட்ட வெள்ளரிக்காய்த் துண்டுகள், தக்காளி வட்டங்கள், அன்னாசிப் பழத் துண்டுகள் சகல பழங்களும் கலந்து பழக் கலவை. அப்புறம் அட்டைக் குப்பிகளில் ஐஸ் க்ரீம், கூல் டிரிங்க்.. அட்டைக் குப்பிகளிளே காப்பி.
அப்புறம் நாட்டுப்புறப் பீடா, நகர்ப்புற பீடாவென்று பீடா ரகங்கள்.
தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் வெற்றிலையில் ஒன்றைப் பிடித்து அதில் சுண்ணாம்பையோ என்னத்தையோ தடவி, எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத பல வகைப் பொருள்களை, வேகமாகத் தூவி, கொஞ்சம் குல்கந்தையும் வழியத்தக்க இன்னும் சிலவற்றையும் போட்டு, ஒன்று இரண்டாக மடித்து தரும் பீடா வகையை டபக்கென்று வாயில் போட்டு படக்கென்று வாயை மூடிக்கொண்டு விட வேண்டும்.
ப·ப்வேயில் ‘விருந்து விசாரித்தல் என்று தனியாக எதுவும் கிடையாது.
பந்திச் சாப்பாடு என்றால் பெண்ணின் அப்பாவோ பிள்ளையின் அப்பாவோ புதுவேட்டி சலசலக்க பந்தியில் தனக்குத் தெரிந்த முகங்களையும் நெருங்கிய நண்பர்களையும், ஒப்புக்காவது – சராசரியாக ஒண்ணே கால் நிமிஷத்துக்கு – அவசரம் கலந்த அன்புடன் விசாரிப்பார்கள். ‘என்ன இது ஒண்ணுமே சாப்பிடலை? ஹ ஹ ஹ!’ என்று பெரிசாக போலிச் சிரிப்பாவது சிரிப்பார்கள்.
ப·ப்வே சந்தைக் கடைக் கூட்டம்தான். கைத் தட்டில் உள்ள பலகாரங்கள் கீழே விழாமல் இருக்க வேண்டுமே என்று பாலன்ஸ் செய்யவே நமக்கு நேரம் சரியாயிருக்கும்.
உறவினர் சினேகிதர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தலை நிமிர்ந்து பார்க்கக் கூட முடிவதில்லை.
கல்யாணம் நடத்துபவர்களும் அந்தக் கசமுசாக் கூட்டத்தில் நம்மைத் தேடிக் கண்டு பிடித்து, “நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம்,” என்றெல்லாம் சொல்ல இயலாது.
அவர்களாகவும் வர முடியாது. நாமாகவும் அவரைத் தேடிப் போய் விடை பெற முடியாது. பந்திப் பரிமாறல் என்றால் ஒரு நடை இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நடந்தால் போதும்.
விசாரித்து முடித்துவிடலாம்.
நேரிலே வந்து ரொம்ப நல்லாக் கவனிச்சாங்க என்று புகழ்வார்கள்.
ப·ப்வே முறையில் அந்தப் புகழ் கிடைக்காது. பழக்கப்பட்ட மாடுகள் பழகின தொட்டிகளில் பருத்திக் கொட்டை தின்பது போல பலலகாரங்களருகே போய்ச் சாப்பிட்டுகிட்டு போய்க்கினே இருக்க வேண்டியதுதான்…
ஆனாலும் பந்தி விருந்தில் ‘இங்கே கொஞ்சம் சாம்பார். இங்கே வரவே வரலை…’ என்றெல்லாம் குரல் எழும்பும். ப·ப்வேயில் அந்த மாதிரி சத்தமெல்லாம் எழவே எழாது.
‘ஹவுஸ் ·புல்’ என்று அநாகரிகமா பந்தி விருந்தில் ஹால் நிரம்பியதும் அறைக் கதவைத் தாளிட்டுத் துவார பாலகர்கள் காவல் காப்பார்களே, அந்த அசிங்கமெல்லாம் ப·ப்வேயில் கிடையாது.
இன்னொரு பெரிய நன்மையும் உண்டு. பந்தியில் என்றால் நமக்கு எதிரே நாம் வெறுக்கும் ஒரு முகம் உட்கார்ந்து இருப்பதை கவனித்தால் நான் எழுந்து வாக்-அவுட் செய்ய முடியாது. சாப்பிட்டு முடிகிறவரை அந்த ஆளை சகித்துக் கொள்ள வேண்டும். ப·ப்வேயில் நமக்கு பிடிக்காத ஆளின் தலை தெரிந்ததுமே நைஸாக வேறு பக்கம் நகர்ந்து விடலாம்.
இன்னொரு பெரிய நன்மையும் உண்டு.
பவதி பிக்ஷ¡ந்தேஹி என்பது போலக் கையில் தட்டேந்தி சாப்பிடச் செல்லும்போது நம்மை அறியாமலேயே ஒரு அடக்கமும் உண்டாகிறது.
ப·ப்வே பெருமையை ரசிக்காத உணராத சில பேர் இருக்கிறார்கள்.
எந்த ஒரு புதுமை வந்தாலும் மனமொப்பி முதலில் அதை ஏற்க மாட்டார்கள்.
ப·ப்வே முறையை எதிர்க்கும் என் கர்நாடக மாமா, “போடா, நீயும் உன் ப·ப்வேயும்! பிச்சைக்காரனாட்டம் தட்டைத் தூக்கிக் கொண்டு கியூவில் நின்னு வாங்கித் திங்கணுமாக்கும்” என்று கத்துவார்.
எனக்கென்னவோ ப·ப்வே என்பது பிச்சை விருந்தாகத் தோன்றவில்லை. அது ‘இச்சை விருந்து’ என்பதே என் கட்சி.

        இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி ‘பந்திக்கு முந்திக்கோ’ என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு, மியூஸிகல் சேரில் இடம் பிடிப்பதுபோல் டைனிங் ஹாலில் காலி நாற்காலியை நோக்கிப் பாயவேண்டிய அவசியமே இல்லை. முதலில் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்குமுன் நாற்காலியில் உட்காந்து கொண்டு எச்சசொச்சங்களை அருவருப்புடன் பார்க்கும் அபாக்கியங்கள் இல்லை.பிரபல சமையல் காண்ட்ராக்ட் விற்பன்னர்களெல்லாம் இப்போது ப·ப்வே முறைக்குத் தாவிவிட்டார்கள். இது ரொம்ப ஆறுதலான விஷயம்தானென்றாலும் எல்லா ப·ப்வே விருந்துகளிலும் ‘இஷ்டம்போல் வெட்டுங்கள்’ என்று முழுச் சுதந்திரம் அளிப்பதில்லை – முக்கியமாக கல்யாண ப·ப்வேக்களில்.ஒவ்வொரு பலகார செக்ஷனிலும் ஓரிரு வெயிட்டர்கள், கிங்கரர்கள் போல் ஒரு கையில் பிளாஸ்டிக் உறையை மாட்டிக்கொண்டு (ஏதோ கை படாமல் எடுத்துப் பரிமாறுவதாக பாவலா பண்ணிக்கொண்டு) கரண்டியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.தட்டை நீட்டினால், கரண்டியால் பலகாரத்தை எடுத்து நம் தட்டில் ஒரு உதறல் உதறுவார்.

 

       சில சமயம் பொங்கல் இசுக்குப் பிசுக்காக இருந்தால் பாதி கரண்டி அளவுதான தட்டில் விழும். மீதிப் பாதி நிரந்தரமாகக் கரண்டியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.அளவைக் குறைக்க காண்ட்ராக்டரே கரண்டியில் நிரந்தரமாக அதை ஒட்டியிருப்பார்களோ என்று கூடச் சிலர் சந்தேகப்படுவதுண்டு.“இன்னும் ஒரு கரண்டி” என்றோ “ஸம் மோர் ப்ளீஸ்” என்றோ… “விழவே இல்லையே” என்றோ பொங்கல் பொறுப்பாளரிடம் பேரம் பேச முடிகிறதா? பின்னாலே க்யூவிலிருப்பவர்களுக்குப் பொறுக்காது.‘சரியான அல்பம்’ என்பது போலப் பார்ப்பார்கள். (அவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ நமக்கு என்று ஒரு கெளரவம் இருக்கிறதல்லவா?)அதிகமான அயிட்டங்கள் இருப்பது போன்ற பிரமையை உண்டு பண்ணுவதில் ப·ப்வே சமையல்காரர்களுக்கு விசேஷ சாமர்த்தியம் உண்டு.உதாரணமாக இட்லி க்யூவில் நிற்கிறோம் என்று வையுங்கள்.தட்டை ஏந்திப் போனவுடன் பிளாஸ்டிக் உறைக் கைக்காரர் ஒரு இட்லியை நம் தட்டில் வைக்கிறார் (போடுகிறார்) (அடுத்தவர் வாளியிலிருந்து சிவப்பாக ஒரு சட்னி போடுகிறார்.

 

        சில இஞ்ச் நகர்ந்ததும் பச்சையாக ஒரு சட்னி. இன்னும் முன்னேறினால் கூட்டு மாதிரி இனம் தெரியாத ஏதோ ஒன்று.அதையும் தாண்டிப் போனால் மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் ரெடி மிக்ஸாகக் கலந்து வைத்ததை ஒருத்தர் ஒரு ஸ்பூன் சிந்துகிறார்.இந்தத் தொடரை அடுத்துச் சென்றால் கமகமவென்று சூடா சாம்பாரை ஒருத்தர் ஊற்றுகிறார்.சாம்பாரையும் கடந்தால் மோர்க்குழம்பு மாதிரி ஆனால் மோர்க் குழம்பு அல்லாத ஏதோ ஒரு திரவம். (சமையல்காரரின் சென்சார் செய்யப்படாத கற்பனை.)ஒரு இட்லிக்கே இத்தனை உபகிரகங்களும் இருப்பதால் பிளேட் நிரம்பி விடுகிறது.ஆனால் நாம் கடக்க வேண்டிய பலகார தூரமோ இன்னும் ஏராளமோ ஏராளம்..இட்லிக்கு முன்னதாக ஸ்வீட் உண்டாச்சே! அடடே அதைக் கோட்டை விட்டு விட்டோமே. எல்லார் தட்டிலும் மஞ்சளாக ஒன்று மின்னுகிறதே… பாதம் அல்வாவா, மைசூர்ப்பாகா – எதுவாயிருந்தாலும் ப·ப்வே தர்மம் என்னவென்றால் – எந்தப் பலகாரத்தையும் ஒதுக்கிய பாவம் நமக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்.ஆனால் தியேட்டரிலிருந்து புறப்பட்டபின் கேட்டில் காரை ரிவர்ஸ் செய்வது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் ப·ப்வே கியூவில் ரிவர்ஸ் எடுப்பது.ஒரு ஸ்வீட் துண்டுக்காக க்யூவிலிருந்து விலகினோமானால் மறுபடியும் நமக்கு அந்த இடம் கிடைக்காது.

 

         ‘சார் கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்குங்க… ஓடிப் போய் ஸ்வீட் வாங்கிண்டு வந்துடறேன்,” என்று க்யூவிலிருப்பவர்களிடம் சொல்ல முடியுமா என்ன? நமக்கென்று சில செல்·ப் ரெஸ்பெக்டுகள் இருக்கிறதே. ஆகவே அந்த ஸ்வீட்டை அடுத்த ரவுண்டில் சந்தித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இட்லியின் தொடர்ச்சியைக் கவனிப்போம் என்று அடுத்த பலகார பக்கம் போகிறோம்.அடுத்தது கிச்சடி. கிச்சடிக்கும் பல உபகிரகங்கள் உண்டு. கொத்ஸ¤, வத்தக் குழம்பு, வற்றாத குழம்பு, அதற்கு ஒரு கூட்டணி கூட்டு.இட்லிக் கூட்டணியுடன், கிச்சடிக் கூட்டணியும் சேர்த்து தட்டில் சற்று களேபரம் ஏற்படுகிறது.ஆனால் இப்போதுதான் இரண்டே இரண்டு பலகாரங்களை அடைந்திருக்கிறோம்.அடுத்தது என்ன? ஊத்தப்பமா? நகர்கிறோம்.சிறிய சைஸில் சற்றே ஆறிய ஊத்தப்பம், இட்லி, கிச்சடி மீது விழுகிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள சமையல்காரர் தேங்காய்ப்பாலோ மாங்காய்ப் பாலோ செய்திருக்கிறார். அந்தத் திரவம் ஒரு பேப்பர் கிண்ணத்தில் ஊத்தப்பத்துக்கு அருகே இடம் பிடித்துக் கொள்கிறது.ஏற்கனவே திரவ நிலையில் தட்டிலிருந்த சாம்பாரைப் பராமரிப்பதே பெரும் கஷ்டமாக இருக்கும்போது, பால் போன்ற நிறத்தில் இது வேறு வந்து சேர்ந்திருக்கிறது.பார்ப்போம்… இதையெல்லாம் ரசிக்கத்தானே வேண்டும் என்று மனசைத் தேற்றிக்கொண்டு அடுத்த அயிட்டத்துக்கு பாலன்ஸ் பண்ணிக்கொண்டு நகர்கிறோம்.ப·ப்வே அனுபவமுடையவர்கள் கியூவின் துவக்கத்திலேயே முன் ஜாக்கிரதையாக இரண்டு காலி பிளேட்டுகள் எடுத்து வருகிறார்கள்.

 

        ஐயோ, இப்படி இரண்டு, பிளேட் எடுத்துவர வேண்டும் என்ற புத்தி நமக்கு இல்லையே என்று நாம் நினைக்கிறதையே, மனைவியும் நினைத்து நம்மைப் பார்க்கிறாள். ரகசியக் குரலில், “நான் வேணும்னா போய் ரெண்டு தட்டு எடுத்து வந்துடட்டுமா?” என்கிறாள்.“சீ! சீ! அல்பம்! சும்மா இரு!” என்று அடக்குகிறோம் அல்லது அடக்குவது போலக் கண்ணால் முறைக்கிறோம்.கிச்சடிக்குப் பிறகு இடியாப்பம் வெள்ளை வெளேரென்று கவர்கிறது.இரண்டு இடியாப்பமும் அதற்குத் தொட்டுக்கொள்ள குருமா ஒரு கிண்ணமும் தட்டில் வந்து சேருகிறது.காலேஜ் நேரத்தில் மாணவர்கள் பஸ்ஸில் தொத்திக் கொள்வதுபோல தட்டு விளிம்பில் ஒரு இடியாப்பம், தொங்கியவாறு விழுந்து விடுவேனென்று பயமுறுத்துகிறது. கியூவில் நகர்ந்து கொண்டே சாப்பிடுவதும் நாசூக்கானதாக இல்லை. யாரும் அப்படிச் சாப்பிடுவதில்லை.இடியாப்பம் ப்ளஸ் குருமாவுடன் இப்போது இன்னுமொரு பேரிடி.சுடச் சுடக் கல்லில் மசாலா தோசை ஏக காலத்தில் அரை டஜன் கமகமவென்று வேகிற காட்சியைக் காண்கிறோம்.ஒரு வினாடி நேரத்தில் ஒரு கரண்டி மாவை டபராவில் மொண்டு, அவனருளாலே அவன்தாள் போற்றி என்பது போல அதே டபராவினால் மாவைக் கல்லில் தேய்த்து சுடச்சுட மசால் தோசை மடித்தாயிற்று.

 

         நம் தட்டில் சொத்தென்று இரும்புக் கரண்டியால் போடுகிறார்.தோசையானது சகல பலகாரங்களையும் பாதியளவு மறைத்தவாறு தட்டில் உட்கார்ந்து விட்டது.இப்போது செக்கச் செவேலென்று காலி·பிளவர் ·ப்ரை….டி.வி. கதைகளில் ‘விளம்பர இடைவேளைக்குப் பிறகு’ என்பது போல கட்டாயம் பிரேக் கொடுக்காவிட்டால் தட்டை ஒழுங்காகத் தூக்க முடியாது போன்ற நிலை.அந்த காலி·பிளவர் ·பிரையை நம் தட்டில் ஒருத்தர் தூவுகிறார். மொற மொற ·ப்ரை சாம்பாரில் முழுகி தனது மொறப்பை இழக்கும் அநியாயக் காட்சியைக் காணச் சகிக்காமல், முதல் சுற்றை முதலில் காலி செய்து விடுவோம் என்பதாக வைத்து கொண்டு சாப்பிட ஏதாவது மேஜை, ஜன்னல் விளிம்பு கிடைக்காதா என்று பார்க்கிறோம்.ஓட்டல்களானால் அப்படிப்பட்ட விளிம்புகள் கிடைக்கும்.கல்யாண மண்டபத்தில் பிளேட்டை ஒரு கையில் வைத்துக் கொண்டு மண்டபத்தில் உலவிக்கொண்டே சாப்பிட வேண்டும்.எதிரே வருபவருடன் முட்டிக் கொண்டு தட்டைச் சாய்த்துவிட்டால் அசிங்கம். பட்டுப் புடவைகள் அதிகம் சஞ்சரிக்கும் ஸ்தலம்.ஆகவே பரம ஜாக்கிரதையாக டிராபிக் ஜாமில் பைக் செலுத்திச் செல்வதுபோல ஜாக்கிரதையாக வளைந்து நெளிந்து ஊடுருவ வேண்டும்.எதிரிலே தெரிந்தவர் வாட்டர் பாட்டிலுடன் வருகிறார்.

 

        ஸீல் செய்யப்பட்ட சிறிய சைஸ் அழகான வாட்டர் பாட்டில்…அடடே! இப்படி ஒரு அயிட்டம் தருகிறார்களா? அது எங்கே என்று நாலாபக்கமும் கண்ணைச் சுழற்றி ஒரு வழியாகக் கண்டு பிடித்து மேற்படி பாட்டில் தண்ணீரைக் கைப்பற்றும் வரை நாம் ஏமாந்துவிட்டோம் என்ற உறுத்தல் இருக்கிறது. தண்ணி கியூவில் நின்று ஒரு பாட்டிலை வாங்கி இடுக்கிக் கொண்டு வெற்றிகரமாகச் சாப்பிடத் தொடங்கினால், எவனோ தயிர் வடையைத் தயிர் சொட்டச் சொட்ட ஒருத்தர் எடுத்துப் போகிறார். மேலே தழை, கிழை போட்டு வடை அபார கவர்ச்சியாயிருக்கிறது.உடனடியாக தயிர்வடை இலாகாவைத் தேடுகிறோம்.இன்னும் அதே எச்சில் தட்டைத் தூக்கிக் கொண்டு போக வேண்டுமா? அனுபவமுள்ளவர்கள் கையிலுள்ள தட்டைக் கீழே அதற்கென்றிருக்கிற வாளியில் போட்டுவிட்டுப் புதுத் தட்டுடன் தயிர் வடைப் பயணம் துவங்குவதைக் காண்கிறோம்.ஆகா.. நமக்கு இந்த டெக்னிக் தெரியாமல் போயிற்றே? சரி. பரவாயில்லை என்று பழைய எச்சில் தட்டிலேயே தயிர்வடை கியூவில் நின்று மேற்படி வஸ்துவை அடைகிறோம்.தயிர் ததும்பும் தயிர் வடை அதற்கு ஒரு ஸ்பூன். அருகில் வரட்டு மிளகாய்ப் பொடி செக்கச் சிவக்க. அதை நாமே எடுத்துத் தூவிக் கொள்ளும்போது பிளேட்டை உஷாராகப் பிடிக்காவிட்டால் தயிர் கீழே கொட்ட ஏது உண்டு.

 

       “காரா பூந்தி சார்” என்று அதட்டுகிறது ஒரு குரல். ‘ஓ! தயிர் வடை மேல் காரா பூந்தி தூவ ஒருத்தர் காத்திருக்கிறார். கோவிலில் சண்டிகேஸ்வரரைச் சுற்றாவிட்டால் அவருக்குச் கோபம் வந்துவிடுமாம் – அது மாதிரி காராபூந்திக்காரரின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்று அந்த ஆசிர்வாதத்தையும் வாங்கிக்கொண்டு நகரும்போது, சாம்பார் வடை குறுக்கிவிடுகிறது.நல்ல வேளை, தனி பிளேட்டில் தந்து விடுவதால் அதையும் வாங்கிக் கொண்டு ‘அதற்கு மேலாகத் தூவப்படும் வெங்காயம், கொத்துமல்லி இதர அலங்காரங்களையும் அங்கீகரித்துக் கொண்டு சீக்கிரம் சாப்பிடுவோம் என்று வேகமாக நடக்கையில், குழிப்பணியாரம் கவன ஈர்ப்பைக் கொண்டு வருகிறது.சே! சின்னச் சின்ன சைஸில் என்ன அழகு… என்ன புதுமை… அதை கையகப்படுத்திக் கொண்டு நகர்ந்தவுடன், காகிதப் பிளேட்டில் கொட்டிய சாஸ் ரெட்ட ரெடியாக இருக்கிறது.அதையும் கொத்திக்கொண்டு இரண்டாம் சுற்றை முடிக்கிறோம்.வயிற்றில் இன்னும் நிறைய இடம் இருப்பதாகவே தோன்றுகிறது – கண்கள் ஏற்படுத்தும் பிரமை.இன்னும் சுண்டல், சித்ரான்ன வகைகள், பூரி, நான், ப்ரெட் பட்டர் ஜாம், சப்பாத்தி, பரோட்டா, மசால் தோசை எல்லா தினுசுகளும் அவ்வப்பொழுது சுடுகல்லில் போட்டுப் போட்டு எடுக்கப்பட்டவை.இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாவது தின்னாமல் வெளியேறினால் நமக்குக் கொடிய நரகம்தான் கிடைக்கும் என்ற உணர்வு தோன்ற அந்தந்த வரிசைகளில் நிற்கிறோம்.கொஞ்சம் கலைந்து இருந்தாலும் இப்போதெல்லாம் பரவாயில்லை.ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் – தோசை போடுபவர் நீட்டும் நீளத் தோசைக் கரண்டி நம் மேல் பட்டு விடாதபடி ஜாக்கிரதை உணர்வோடு ஒதுங்கிக் கொண்டு தட்டை மட்டும் முன்னே நீட்டி தோசை பெற வேண்டும்.

 

       நமக்கு வேண்டியது தோசையே தவிர சூடு அல்ல என்பது யாவரும் அறிந்ததே.இத்தனைக்கு அப்புறம் காய்கறி பழம் பரேட்…..வட்ட வட்ட வெள்ளரிக்காய்த் துண்டுகள், தக்காளி வட்டங்கள், அன்னாசிப் பழத் துண்டுகள் சகல பழங்களும் கலந்து பழக் கலவை. அப்புறம் அட்டைக் குப்பிகளில் ஐஸ் க்ரீம், கூல் டிரிங்க்.. அட்டைக் குப்பிகளிளே காப்பி.அப்புறம் நாட்டுப்புறப் பீடா, நகர்ப்புற பீடாவென்று பீடா ரகங்கள்.தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் வெற்றிலையில் ஒன்றைப் பிடித்து அதில் சுண்ணாம்பையோ என்னத்தையோ தடவி, எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத பல வகைப் பொருள்களை, வேகமாகத் தூவி, கொஞ்சம் குல்கந்தையும் வழியத்தக்க இன்னும் சிலவற்றையும் போட்டு, ஒன்று இரண்டாக மடித்து தரும் பீடா வகையை டபக்கென்று வாயில் போட்டு படக்கென்று வாயை மூடிக்கொண்டு விட வேண்டும்.ப·ப்வேயில் ‘விருந்து விசாரித்தல் என்று தனியாக எதுவும் கிடையாது.பந்திச் சாப்பாடு என்றால் பெண்ணின் அப்பாவோ பிள்ளையின் அப்பாவோ புதுவேட்டி சலசலக்க பந்தியில் தனக்குத் தெரிந்த முகங்களையும் நெருங்கிய நண்பர்களையும், ஒப்புக்காவது – சராசரியாக ஒண்ணே கால் நிமிஷத்துக்கு – அவசரம் கலந்த அன்புடன் விசாரிப்பார்கள். ‘என்ன இது ஒண்ணுமே சாப்பிடலை? ஹ ஹ ஹ!’ என்று பெரிசாக போலிச் சிரிப்பாவது சிரிப்பார்கள்.ப·ப்வே சந்தைக் கடைக் கூட்டம்தான்.

 

        கைத் தட்டில் உள்ள பலகாரங்கள் கீழே விழாமல் இருக்க வேண்டுமே என்று பாலன்ஸ் செய்யவே நமக்கு நேரம் சரியாயிருக்கும்.உறவினர் சினேகிதர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தலை நிமிர்ந்து பார்க்கக் கூட முடிவதில்லை.கல்யாணம் நடத்துபவர்களும் அந்தக் கசமுசாக் கூட்டத்தில் நம்மைத் தேடிக் கண்டு பிடித்து, “நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம்,” என்றெல்லாம் சொல்ல இயலாது.அவர்களாகவும் வர முடியாது. நாமாகவும் அவரைத் தேடிப் போய் விடை பெற முடியாது. பந்திப் பரிமாறல் என்றால் ஒரு நடை இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நடந்தால் போதும்.விசாரித்து முடித்துவிடலாம்.நேரிலே வந்து ரொம்ப நல்லாக் கவனிச்சாங்க என்று புகழ்வார்கள்.ப·ப்வே முறையில் அந்தப் புகழ் கிடைக்காது. பழக்கப்பட்ட மாடுகள் பழகின தொட்டிகளில் பருத்திக் கொட்டை தின்பது போல பலலகாரங்களருகே போய்ச் சாப்பிட்டுகிட்டு போய்க்கினே இருக்க வேண்டியதுதான்…ஆனாலும் பந்தி விருந்தில் ‘இங்கே கொஞ்சம் சாம்பார். இங்கே வரவே வரலை…’ என்றெல்லாம் குரல் எழும்பும். ப·ப்வேயில் அந்த மாதிரி சத்தமெல்லாம் எழவே எழாது.‘ஹவுஸ் ·புல்’ என்று அநாகரிகமா பந்தி விருந்தில் ஹால் நிரம்பியதும் அறைக் கதவைத் தாளிட்டுத் துவார பாலகர்கள் காவல் காப்பார்களே, அந்த அசிங்கமெல்லாம் ப·ப்வேயில் கிடையாது.இன்னொரு பெரிய நன்மையும் உண்டு.

 

     பந்தியில் என்றால் நமக்கு எதிரே நாம் வெறுக்கும் ஒரு முகம் உட்கார்ந்து இருப்பதை கவனித்தால் நான் எழுந்து வாக்-அவுட் செய்ய முடியாது. சாப்பிட்டு முடிகிறவரை அந்த ஆளை சகித்துக் கொள்ள வேண்டும். ப·ப்வேயில் நமக்கு பிடிக்காத ஆளின் தலை தெரிந்ததுமே நைஸாக வேறு பக்கம் நகர்ந்து விடலாம்.இன்னொரு பெரிய நன்மையும் உண்டு.பவதி பிக்ஷ¡ந்தேஹி என்பது போலக் கையில் தட்டேந்தி சாப்பிடச் செல்லும்போது நம்மை அறியாமலேயே ஒரு அடக்கமும் உண்டாகிறது.ப·ப்வே பெருமையை ரசிக்காத உணராத சில பேர் இருக்கிறார்கள்.எந்த ஒரு புதுமை வந்தாலும் மனமொப்பி முதலில் அதை ஏற்க மாட்டார்கள்.ப·ப்வே முறையை எதிர்க்கும் என் கர்நாடக மாமா, “போடா, நீயும் உன் ப·ப்வேயும்! பிச்சைக்காரனாட்டம் தட்டைத் தூக்கிக் கொண்டு கியூவில் நின்னு வாங்கித் திங்கணுமாக்கும்” என்று கத்துவார்.எனக்கென்னவோ ப·ப்வே என்பது பிச்சை விருந்தாகத் தோன்றவில்லை. அது ‘இச்சை விருந்து’ என்பதே என் கட்சி.

by parthi   on 12 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
11-May-2018 13:43:12 Manian said : Report Abuse
அருமை ! சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.