LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

பனீர் பட்டாணி குருமா (Paneer Peas Kurma)

தேவையானவை:

பனீர் துண்டங்கள் - 1 1/2 கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
பூண்டு - 2 பல்
புளிக்காத தயிர் - 1 கப்
பிரியாணி இலை - 2
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 3
மிளகாய்பொடி -1 1/2  டீஸ்பூன்
தனியாப் பொடி - 1 மேசைக்கரண்டி
தக்காளி விழுது - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

   1. பெரிய வெங்காயத்தைத் நறுக்கி, வதக்கி எடுத்துக்கவும். அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பனீர் கட்டிகளை பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்தெடுத்த பனீரை மிதமான தண்ணீரில் போட்டு வைக்கவும். பட்டாணியைத் தனியாக வேகவைக்கவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
   2. இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுதை  சேர்க்கவும். கொதித்த பிறகு, வேகவைத்த பட்டாணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும். நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையை மேலே தூவவும்.

Paneer Peas Kurma

INGREDIENTS for Paneer peas Kurma:

Cheese Slice-11/2Cup

Green Peas-1/2Cup

Oil-1tbsp

Cinnamon-1Piece

Garlic-2Flakes

Curd-1Cup

Bay Leaf-2

Cloves-2

Big Onion-3

Chilly powder-11/2tsp

Coriander Powder-1tbsp

Tomato Paste-1/4Cup

Salt-Enough Need

PROCEDURE to make Paneer Peas Kurma:

1. Cut onion and sauté well. Then grind fried onion and mix with curd. Heat oil in a pan, fry cheese slice till turn golden color. Put fried cheese slices in to water. Boil the green peas and keep aside. Now heat oil in a pan, add masala ingredients, chopped garlic, grinded onion and fry in low flame till oil float from masala.

2. Then add coriander powder, chilly powder, salt and tomato paste. Put boiled peas and cheese slices. When boiled well, remove from flame and garnish with coriander leaves.

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.