|
||||||||||||||||||
பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் - முனைவர் இரா. பிரபாகரன் |
||||||||||||||||||
கல்விப் பயணம்: தமிழ்மொழியின் சிறப்பு என்னவென்றால் மற்ற மொழியில் விற்பன்னராக இருப்பவர் கூட தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவராக இருப்பார். இதுவே தமிழ் மொழியின் ஆகச்சிறந்த சிறப்பு ஆகும். அவ்வழி இரா. பிரபாகரன் அவர்கள் இளங்கலை, முதுகலையில் கணிதம் பயின்றவர். தன்னுடைய பள்ளிப் படிப்பில் பலமுறை இடைநின்று பல ஊர்களுக்குச் சென்று படித்தவர். 1960களின் இறுதியில் அமெரிக்கா சென்றவர். தற்போதும் அமெரிக்காவில் வசித்து வருகிறார். திருக்குறள் ஆர்வம்: இரா. பிரபாகரன் அவர்களின் தந்தை திருக்குறள் மீது தீராத காதல் கொண்டவர். சிறுவயதிலேயே தன்னுடைய குழந்தைகளுக்கும் திருக்குறள் ஆர்வத்தை விதைத்தவர். இதனாலேயே பிரபாகரன் அவர்களும் திருக்குறள் மீது காதல் கொண்டவராக வளர்ந்தார். இதனாலே இவர் அமெரிக்கா சென்ற பிறகும், பல ஆண்டுகள் கழித்தும் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நிகழ்த்தினார். இயற்றிய புத்தகங்கள்: புறநானூறு 400 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார். குறுந்தொகை நூலுக்கும் உரை எழுதியுள்ளார். திருக்குறளின் பெருமையை மற்ற மொழியினரும் அறிய வேண்டும் என்று எண்ணி வுரந யுபநடநளள றுளைனழஅ என்ற நூலை இயற்றினார். பன்னாட்டு மாநாடுகள்: முனைவர் இரா. பிரபாகரன் அவர்கள் தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் அமெரிக்காவில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். பிறகு பன்னாட்டுப் புறநானூறு மாநாடும், பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடும் நடத்தப்பட்டன. இந்த மாநாடுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசளிக்கப்பட்டன. திருக்குறள் - பொது முறை: மறை என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். திருக்குறளை ‘பொது மறை’ என்று கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் திருக்குறளில் மறைக்கப்பட்ட செய்திகளோ, இரகசிய செய்திகளோ கிடையாது எனவே திருக்குறளை ‘பொது முறை’ என்றே கூற வேண்டும். திருக்குறளை முக்கியமாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே திருக்குறளை அவர்களுக்குப் புரியும் வண்ணம் கதைகள் மூலமாகவோ, பிற வழிகள் மூலமாகவோ எடுத்துச் சொல்ல வேண்டும். சங்க இலக்கியம்: சங்க கால வாழ்வியலை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது சங்க இலக்கியம். வீரம், கொடை, அன்பு, அருள், நட்பு, விருந்தோம்பல், கல்வி, காதல், கற்பு என அனைத்து பண்புகளையும் எடுத்துரைக்கிறது. சங்க கால பெண்களும் வீரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். சங்க இலக்கியத்தை 470 புலவர்கள் இயற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் அடிப்படையிலேயே புலவர்கள் கிடையாது. ஆனால் அக்காலத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே தான் பல துறைகளைச் சார்ந்தவர்களும் பாடல்களை இயற்றியுள்ளனர். சங்க இலக்கியத்தில் 39 பெண் புலவர்கள் இடம் பெறுகின்றனர். வேறு எந்த நாட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண் புலவர்கள் பாடல்கள் இயற்றியதாகச் சான்றுகள் இல்லை. இவை அனைத்தும் சங்க இலக்கியத்தின் சிறப்புகள் ஆகும். தமிழர்கள் உணர வேண்டியவை: தமிழர்கள் அனைவரும் தமிழால் ஒன்றுபட வேண்டும். அடிப்படையில் தமிழர்கள் தங்களுடைய அடையாளமாகத் தமிழை எண்ண வேண்டும். தமிழ் மொழி வழியாகவே கல்வி பயில வேண்டும். தமிழைச் சரியாக உச்சரிக்க வேண்டும். சாதி, மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ‘தான் தமிழன்’ என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும். |
||||||||||||||||||
by Lakshmi G on 24 Sep 2020 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|