LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- இனத்தின் தொன்மை

பறையிசை - ஒரு பார்வை

பறை என்றால் தமிழில் அறிவித்தல் என்ற பொருள் உண்டு.  பறை இசைக்கருவி தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவி.  ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டு வரும் தமிழிசைக் கருவி.  5000 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பிய இலக்கண நூலிலேயே  பறையிசைப்  பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.  பறைக்கருவி எல்லாத் தோல்இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவி.  

 

சுமார் ஒன்றரை  கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி இருப்பவர்களைக் கூட தன்வசப் படுத்தி கேட்கவைக்கக் கூடிய திறனைத் தன்னகத்தே கொண்ட இசைமுழக்கம் நிறைந்த இசை. வெற்றியை பறைசாற்ற, திருமண நிகழ்வுகளில், போர்க்காலங்களில் தாய்மார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை போரின் கொடூரங்களில் இருந்து  தப்பிக்கச் செய்ய என்று கிட்டத்தட்ட 35 வகை நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தப் பட்டு வந்த/ பயன்பட்டு வரும் அபூர்வமான ஓர் இசைக்கருவி. 

 

காலப்போக்கில் சில சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இசையாகச் சுருங்கிப்போன பறையிசை இப்பொழுது விடுதலை பெற்று தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளமாக உலகெங்கும் இசைக்கப்படுகிறது. கைத்தட்டத் தெரிந்த அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய அரியதொரு இசைக் கருவி. ஆடியும் பாடியும் ஒரே குழுவாக  இசைக்கக் கூடிய  இசைக் கருவிகளுள் ஒரு முக்கியமான கருவி.பறையிசையையும், அதனுடன் கூடிய நடனத்தையும் நாம் கண்டுகளிக்க ஒர் அரிய வாய்ப்பு.  

 

-மகேந்திரன் பெரியசாமி 

 

by Swathi   on 26 Jun 2015  3 Comments
Tags: Parai Music   Parai Music Katturai   Parai Isai Katturai   Parai Isai History   பறை இசை   பறையிசை கட்டுரை   பறையிசை  
 தொடர்புடையவை-Related Articles
பறையிசை - ஒரு பார்வை பறையிசை - ஒரு பார்வை
அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை! அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை!
கருத்துகள்
21-Nov-2017 23:19:29 Deva said : Report Abuse
பறை என்பது என்றும் அழியாத சொத்து அதை அடிக்கும் நாம் சிவனுக்கு சமம் பறை இசையே சிவனை ஆடவைத்தது பறை இசையாக மட்டும் இல்லாமல் உயிரின் மேலாக நாம் நினைக்க வேண்டும்
 
21-Nov-2017 23:19:03 Deva said : Report Abuse
பறை என்பது என்றும் அழியாத சொத்து அதை அடிக்கும் நாம் சிவனுக்கு சமம் பறை இசையே சிவனை ஆடவைத்தது பறை இசையாக மட்டும் இல்லாமல் உயிரின் மேலாக நாம் நினைக்க வேண்டும்
 
12-Jul-2015 00:27:24 kanagu said : Report Abuse
பறை இன்று அழிந்து வரும் கலைகளில் ஒன்று. அழிவதைத தடுக்க பறை இசைக் கலையை அரசாங்கம் காக்க வேண்டும் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.