LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

பரமதபங்கம்

5.1:
எண்டள வம்புயத்துள் இலங்கும்மறுகோணமிசை
வண்பணிலந்திகிரி வளைவில்வளைவாய்முசலந்
திண்கையிலகுசம் சீர்திகழுங்கதை செங்கமலம்
எண்படையேந்திநின்றான் எழிலாழியிறையவனே.

5.2:
விடுநெறியஞ்சி விடத் தொடக்கிய
விதியரடைந்து தொழத்த ழைத்ததெழு
விழியருள் தந்து விலக்கடிக்களை
விரகிலியம்பி விலக்கி வைத்தனர்
கொடுவினையென் பதனைத் தினைத்தனை
கொணர்த லிகந்த குணத்தனத்தினர்
குருகையில் வந்து கொழுப்படக்கிய
குலபதி தந்த குறிப்பில் வைத்தனர்
கடுநரகன் புகழற்றி மற்றொரு
கதி பெறுமன்பிலெமைப் பொருத்தினர்
கமலையுகந்த கடற் கிடைக்கடல்
கருணை யுயர்ந்ததிடர்க் கொருக்கினர்
படுமுதலின்றி வளர்த்த நற்கலை
பலபலவொன்ற வெமக்குரைத்தனர்
பழ மறையந்தி நடைக் கிடைச்சுவர்
பரமதமென்றதிடித்த பத்தரே.

5.3:
போமுரைக்கும் பொருள் யாமறியோம் பொருளார் மறையிற்
றாமுரைக்கின்றன தாமேயறியுந் தரமுடையார்
ஆமுரைக்கென்றி வையாய்ந்தெடுத்து ஆரண நூல் வழியே
நாமுரைக்கும் வகை நல்லருளேந்திநவின்றனரே.

5.4:
சித்துமசித்து மிறையுமெனத் தெளிவுற்றுநின்ற
தத்துவ மூன்றும் தனித்தனிகாட்டுந்தனி மறையான்
முத்திவழிக்கிது மூலமெனத் துணிவார்களையுங்
கத்தி மயக்குங்கத கரை நாங்கடிகின்றனமே.

5.5:
முத்தின் வடங்களென முகுந்தன் புனைமூவகையாஞ்
சித்திலருசுருதிச் செவ்வைமாறிய சிந்தைகளாற்
பத்திலிரண்டு மெய்க்கப் பகட்டும் பரவாதியர்தங்
கத்தில் விழுந்தடைந்த அழுக்கின்று கழற்றினமே.

5.6:
நாக்கியலும் வகை நம்மையளித்த வர்நல்லருளாற்
பாக்கியமேந்திப் பரனடியார் திறம்பார்த்ததற்பின்
றாக்கியர் தங்கள் டலைமிசை தாக்கித் தனிமறைதான்
போக்கிய மென்றதனில் பொய்ம்மதங்களைப் போக்குவமே.

5.7:
தீவகை மாற்றி அன்றோர்தேரிலா ரணம்பாடிய நந்
தேவகிசீர் மகனார் திறம்பாவருள் சூடியநா
மூவகைய மறியாத்தத்துவத்தின் முகமறிவார்
நாவகையே நடத்தும் நடைபார்த்து நடந்தனமே.

5.8:
வேலைப்புறமகங்காண்பது போல் வேதநன்னெறிசேர்
நூலைப்புற மகங்காண்டலில் னுண்ணறிவின்றி நின்றீர்
மாலைப் பெற வழிகாட்டிய தேசிகர் வாசகமே
யோலைப்புறத் திலெழுதுகின்றோம் உள்ளெழுதுமினே.

5.9:
சிறைநிலையாம் பவத்தில் சிறுதேனின்பமுண்டுழல்வார்
மறைநிலைகண்டறியா மயன் மாற்றிய மன்னருளாற்
றுறைநிலை பாரமெனத் துளங்காவமுதக்கடலாம்
இறைநிலையாமுரைத்தோம் எங்குருக் களியம்பினவே.

5.10:
வெறியார் துளவுடை வித்தகன்றன்மையின் மெய்யறிவார்
குறியார் நெடியவரென்று ஒருகுற்றம் பிறர்க்குரையார்
அறியார் திறத்திலருள்புரிந்து ஆரண நன்னெறியாற்
சிறியார் வழிகளழிப்பதுங் தீங்குகழிப்பதற்கே.

5.11:
மிண்டுரைக்க விரகு தருந்தருக்கங்கொண்டே
வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார்
கண்டதற்கு விபரீதங்கத்து கின்றார்
காணாத குறைமறையிற் காட்ட நிற்பார்
பண்டொருத்தன் கண்டுரைத்தேன் நானேயென்னப்
பலவகையிலு பாதிகளாற் படிந்து வீழ்வார்
கொண்டலொக்குந் திருமேனிமாயக் கூத்தன்
குரைகழல் சேர்விதிவகையிற் கூடாதாரே.

5.12:
கண்டது மெய்யெனில் காணுமறையிலறிவு கண்டோ ம்
கண்டதலாத திலதெனில் கண்டிலங்குற்றமிதிற்
கண்டதுபோல் மறைகாட்டுவதும் கண்டதொத்ததனால்
உண்டதுகேட்கும் உலோகாயதரென்றுமீறுவதே.

5.13:
கண்டதனாற் கானாத தனுமிக்கின்றார்
கண்டொருத்தனுரைத்ததனைக் கவருகின்றார்
உண்டுபசிகெ டுமென்றே யுனர்ந்துண் கின்றார்
ஒன்றாலேயொன்றைத் தாஞ்சதிக்கின்றார்
பண்டுமுலையுண்டதனால் முலையுண்கின்றார்
பார்க்கின்றார் பலவல்லாத் தம்மை மற்றும்
கண்டு மதி கெட்ட நிலை காணகில்லார்
காணாத திலதென்று கலங்குவரே.

5.14:
காணாதில தெனுங்கல்வி யினாரைக் கடிந்ததற்பின்
கோணார்குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களி
னாணாதனைத்துமில தென்றும் நால்வகையன்றிதென்றும்
வாணாளறுக்கின்ற மத்திமத்தான் வழிமாற்றுவமே.

5.15:
மானமிலைமேயமிலை யென்றும் மற்றோர்
வாதநெறியிலையென்றும் வாதுபூண்ட
தானுமிலை தன்னுரையும் பொருளுமில்லை
தத்துவத்தினுணர்த்தி சயமில்லையென்றும்
வானவருமான வருமனமும் வெள்க
வளம்பேசுமதி கேடன்மத்திமத்தான்
றேனநெறிகொண்டனைத்துந்தி ருடாவண்ணஞ்
செழுமதிபோலெழு மதியாற் சேமித்தோமே.

5.16:
முற்றுஞ்சகத்திலதென்றே பகட்டியமுட்டரை, நாஞ்
சுற்றுந்துறந்து துறையில்நின்றே துகளாக்கியபின்
மற்றொன்றிலது மதிபலவுண்டென்று வஞ்சனையாற்
சற்றுந்துறந்த யோகாசரனைச் சதிக்கின்றனமே.

5.17:
உளக்கதியை நாமுள்ளியுள்ளந்தேறி
உலகத்தாருகந்திசைய வுலகுண்டென்றோம்
இளக்கவாரிதாகிய நற்றருக்கஞ்சேர்ந்த
வெழின்மறையிலீ சனுடனெம்மைக் கண்டோ ம்
விளக்குநிரைபோல் மதிகள் வேறாய் வேறொன்
றறியாதே விளங்குமென விளம்புகின்ற
களக்கருத்தன் கண்ணிரன்டு மழித்தோம் நாணாக்
காகம்போற் றிரிந்தவனென் கதறுமாறே.

5.18:
பொருளொன்றிலதென்று போதமொன்றுகொண்ட பொய்யரை, நாந்
தெருள்கொண்டு தீர்த்த பின் காணவொண்ணாப் பொருள்தேடுகின்ற
மருள்கொண்ட சூதுரைக்கும் சௌத்திராந்திகன்வண்ணிக்கை நாம்
இருள்கொண்ட பாழ்ங்கிணரென்று இகழ்ந்தோடவியும்புவமே.

5.19:
நிலையில்லாப் பொருள்மதியை விளைத்துத் தான்
சேர்நிறங்கொடுத்துத் தானழியுந், தன்னால்வந்த
நிலையில்லாமதி தன்னில்நிறத்தைக் காணும்
இதுகாணும் பொருள் காண்கையென்ற நீசன்
முலையில்லாத் தாய்கொடுத்த முலைப்பாலுண்ணும்
முகமில்லாமொழியெனவே மொழிந்த வார்த்தை
தலையில்லாத் தாளூருங்கணக்காய் நின்ற
கட்டளை நாங்கண்டின்று காடினோமே.

5.20:
காண்கின்றவனிலை காட்சியுங்கண்டதுமுண்டு, அவைதாம்
எண்கொண்டனவன்று இவற்றிற்குணமு நிலையுமிலை
சேண்கொண்டசந்ததியால் சேர்ந்துமொன்றென நிற்க்குமென்ற
கோண்கொண்டகோளுரை வைபாடிகன் குறைகூறுவமே.

5.21:
கும்பிடுவாராரென்று தேடுகின்றார்
குணங்களையுந்தங்க ளுக்குக் கூறுகின்றார்
தம்படியைத்தமர்க்குரைத்துப் படிவிக்கின்றார்
தமக்கினிமேல் வீடென்று சாதிக்கின்றார்
தம்புடவையுணல் குறித்து நெடிதெண்கின்றார்
சந்ததிக்குத் தவம்பலிக்கத் தாம் போகின்றார்
செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச்
சேவகப் பற்றுடனே நாஞ்செகுத்திட்டோ மே.

5.22:
வேதங்கண் மௌலிவிளங்க வியாசன் விரித்த நன்னூற்
பாதங்களான பதினாறில் ஈசன்படிமறைத்துப்
பேதங்களில்லையென்று ஓர்பிரமப்பிச்சியம்புகின்ற
போதங்கழிந்தவனைப் புத்தர்மாட்டுடன் பூட்டுவமே.

5.23:
பிரிவில்லா விருளொன்று பிணக்கொன்றில்லப்
பெருவெயிலை மறைத்துலகங்காட்டுமென்ன
வறிவில்லா வறிவொன்றையவித்தைமூடி
யகம்புறமென்றி வையனைத்துமைக்குமென்பார்
செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்துகெட்டார்
சீவனையுமீசனையுஞ்சிதைக்கப்பார்த்தார்
நெறியில்லா நேர்வழியுந்தானேயானா
னெடுமாலை நாமடைந்து நிலைபெற்றோமே.

5.24:
சோதனைவிட்டொருத்தஞ்சொல மெய்யெனச் சோகதரைச்
சேதனையற்றவரென்று சிதைத்தபின், சீவர்கட்கோர்
வேதனைசெய்கை வெறுமறமென்று விளம்பிவைத்தே
மாதவமென்று மயிர் பறிப்பார்மயல் மாற்றுவமே.

5.25:
சொன்னார் தாஞ்சொன்ன தெலாந்துறவோ மென்றுஞ்
சொன்னதுவே சொன்னதலதாகுமென்றுந்
தின்னாதுந்தின்னுமது மேகமென்றுஞ்
சிறியனுமாம் பெரியனுமாஞ்சீவனென்றும்
மன்னாதுமன்னுமதுமொன்றேயென்றும்
வையமெலாம் விழுகின்ற தென்றுமென்றுந்
தென்னாடும் வடநாடுஞ்சிரிக்கப் பேசுஞ்
சினநெறியார் சினமெல்லாஞ்சிதைத்திட்டோ மே.

5.26:
ஏகாந்திகமொன்றுமில்லையென்று ஆசையைத்தாமுடுப்பார்
சோகாந்தமாகத் துறப்புண்டபின் றொழில்வைதிகமென்று
ஏகாந்திகள்சொன்ன வீசன்படியில் விகற்பமெண்ணும்
லோகாந்தவீணர்தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே.

5.27:
ஒன்றெனவும் பலவெனவுந்தோற்றுகின்ற
உலகெல்லாமொரு பிரமந்தானேயாக்கி
நன்றெனவுந்தீதெனவும் பிரிந்தவெல்லா
நன்றன்றுதீதன்றேயென நவின்றார்
கன்றுமலர்பசுவு மலராகி நின்றே
கன்றாகிப் பசுவாகி நின்றவண்ணம்
இன்றுமறைமாட்டுக்கோரிடையனான
ஏகாந்தியிசைந்திட நாமியம்பினோமே.

5.28:
சாயா மறைகளிற் சத்தந்தெளிந்திடச் சாற்றுதலாற்
றூயாரிவரென்று தோன்றநின்றே பலசூதுகளான்
மாயாமதமும் மறுசினவாதும் பவுத்தமுஞ்சேர்
வையாகரணர்சொல்லும் மறுமாற்றங்கள் மாற்றுவமே.

5.29:
கலத்திற் கலங்கி வருங்காணிக்கெல்லாங்
கண்ணாறுசதிர வழிகட்டுவார் போல்
உலகத்தில் மறைசேர்ந்தவுரைக டம்மால்
ஒருபிழியுஞ்சேராமலு பகரித்தார்
பலகத்தும் பவுத்தர்முதலான பண்டைப்
பகற்கள்ளர் பகட்டழிக்கப் பரவும் பொய்யாஞ்
சிலகற்றுச் சித்தாந்தமறியகில்லாச்
சிறுவரினி மயங்காமற் சேமித்தோமே.

5.30:
கண்டதலாதன கட்டுதலாற்f கண்டவிட்டதனாற்
பண்டுள தானமறைக்குப் பழமையை மாற்றுதலாற்
கொண்டதுமீசனைக் கொள்ளாவகையென்று கூறுதலால்
கண்டகராய் நின்ற காணாதர் வாதங்கழற்றுவமே.

5.31:
ஆகமத்தை யனுமான மென்கையாலும்
அழியாத மறையழிக்க நினைத்தலாலும்
போகமற்றொரு பலம் போற்கிடக்கை தானே
புண்ணியர்க்கு வீடென்று புணர்த்தலாலு
மாகமொத்த மணிவண்ணன் படியை மாற்றி
மற்றவனுக்கொரு படியை வகுத்தலாலுங்
காகமொத்த காணாத தன் கண்ணை வாங்கிக்
காக்கைக்காரென்றலற்றக் காட்டினோமே.

5.32:
கோதம நூல்களைக் குற்றமிலாவகை கூட்டலுமாங்
கோதுகழித்து ஒருகூற்றிற்குணங்களைக் கொள்ளவுமாம்
யாது மிகந்து ஒருநீதியையாமேவகுக்கவுமாம்
வேதியர் நன்னயவித்தரமென்பது மெய்யுளதே.

5.33:
நான் மறைக்குத்துணையாக நல்லோரெண்ணு
நாலிரண்டிலொன்றான நயநூல்தன்னிற்
கூன்மறைத்தல் கோதுளது கழித்தன் மற்றோர்
கோணாத கோதில் வழிவகுத்தலன்றி
யூன்மறைத்த வுயிரொளிபோலொத்த தொவ்வாது
உயிரில்லாக்காணாத முரைத்தவெல்லாம்
வான்மறைக்கமடிகோலும் வண்ணமென்றொ
மற்றிதற்கார் மறுமாற்றம் பேசுவாரே.

5.34:
ஈசனுமற்றணங்குமிலதென்று எழில்நான்மறையிற்
பேசியநல்வினையால் பெரும்பாழுக்கு நீரிறைக்கு
நீசரைநீதிகளானிக மாந்தத்தினூல் வழியே
மாசின்மனங்கொடுத்தும் மறுமாற்றங்கண்f மாற்றுவமே.

5.35:
கனைகடல்போலொரு நீராஞ்சூத்திரத்தைக்
கவந்தனையு மிராகுவையும் போலக்கண்டு
நினைவுடனே நிலைத்தரும மிகந்து நிற்கு
நீசர்நிலை நிலைநாட வண்ணமெண்ணி
வினைபரவுசைமினியார் வேதநூலை
வேதாந்த நூலுடனே விரகாற்கோத்த
முனையுடைய முழுமதி நம்முனிவர்சொன்ன
மொழிவழியே வழியென்று முயன்றிட்டோ மே.

5.36:
முக்குணமாய்நின்ற மூலப்பிரகிருதிக்கு, அழியா
வக்குணமற்ற அருத்துணை மற்றதற் கீசனிலை
இக்கணனைப்படியை யைந்துமெண்ணில் முன்முத்தியென்னும்
பக்கணவீணர் பழம்பகட்டைப் பழுதாக்குவமே.

5.37:
ஈசனிலனென் பதனா லென்றுஞ்சீவர்
எங்குமுளரிலருணர்வை யென்றவத்தாற்
பாசமெனும் பிரகிருதிதன்னால் என்றும்
பலமுமிலை வீடுமிலை யென்னும் பண்பாற்
காசினி நீர் முதலான காரியங்கள்
கச்சபத்தின் கால்கை போலென்னுங்கத்தால்
நாசமலதிலை காணும் ஞாலத்துள்ளீர்
நாமிசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே.

5.38:
தாவிப்புவனங்கள் தாளினை சூட்டிய, தந்தையுந்திப்
பூவிற்பிறக்கினும் பூதங்களெல்லாம் புணர்த்திடினு
நாவிற்பிரிவின்றி நாமங்கை வாழினும் நான்மறையிற்
பாவித்ததன்றியுரைப்பது பாறும் பதர்த்திரளே.

5.39:
காரணனாயுலக ளிக்குங்கண்ணன் றேசைக்
கண்ணாடி நிழல் போலக் காண்கையாலுந்
தாரணையின் முடிவான சமாதிதன்னைத்
தனக்கேறும் விளக்கென்று தனிக்கையாலுங்
காரணமாமது தனக்குப்பயனாஞ்
சீவன்கைவலிய நிலையென்று கணிக்கையாலுங்
கோரணியின் கோலமெனக்குக் குறிக்கலாகுங்
கோகனகத்தயன் கூறுஞ்சமயக் கூற்றே.

5.40:
சாதுசனங்களெலாஞ்சச்சை யென்னும் சலம்புணர்த்தார்
கோதம சாபமொன்றால் கொடுங்கோலங்கள் கொண்டுலகிற்
பூதபதிக்கடியா ரெனநின்று அவன் பொய்யுரையால்
வேதமகற்ற நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே.

5.41:
மாதவனே பரனென்று வையங்காண
மழுவேந்திமயல் றீர்க்க வல்லதேவன்
கைதவமொன்று கந்தவரைக் கடியசாபங்
கதிவியதாலதன் பலத்தைக்கருதிப் பண்டை
வேதநெறியணுகாது விலங்குதாவி
வேறாகவிரித் துரைத்த விகற்பமெல்லாம்
ஓதுவதுகுத்திரத்துக் கென்றுரைத்தான்
ஓதாதே யோதுவிக்கு மொருவன்றானே.

5.42:
கந்தமலர்மகள் மின்னுங்காரார் மேனிக்
கருணைமுகில் கண்ட கண்கள் மயிலாயாலும்
அந்தமில்பேரின்பத் திலடியரோடே
அடிமையெனும் பேரமுத மருந்திவாழத்
தந்தமதி யிழந்தரனார் சமயம்புக்குத்
தழல்வழிபோய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர்
சந்தநெறி நேரறிவார் சரணஞ்சேர்ந்து
சங்கேதத்தவ முனிவீர் தவிர்மினீரே.

5.43:
யாதுமிலாதவன்றும் யவர்க்குந்நன்றியெண்ணிய, நம்
மாதவனார் வதனத்தமுதுண்ணும் வலம்புரிபோல்
வாதுகளாலழியா மறைமௌலியின் வான்பொருளே
யோதியபஞ்சாத்திரமுகவாரை யொழுக்குவமே.

5.44:
பூவலருந்தி ருவுந்திப்புனிதன் வையம்
பொன்னடியாலளந்திருவர் போற்றிநின்ற
நாவலருங்கலைகளெலாந் தன்னை நாட
நாடாத நன்னதியா நணுகு நாதன்
கோவலனாய் நிரையளித்த நிறைபோல் வேதங்
கோவாகக் கோமானாயதன் பால்சேர்த்துக்
காவலிது நல்லுயிருக்கென்று காட்டுங்
கார்த்தயுகக் கதிகண்டோ ங்கரை கண்டோ மே.

5.45:
நமக்கார்துணையென நாமென்றருள் தருநாரணனார்
உமக்காறிவையென்ற டியிணைகாட்ட உணர்ந்தடையும்
எமக்கோர்பரமினியில்லாது இருவினைமாற்றுதலிற்
றமக்கேபரமென்று தாமுயலுந்த ரஞ்சாற்றுவமே.

5.46:
பலத்திலொருதுவக்கற்ற பதவிகாட்டிப்
பல்லுயிருந்தடுமாறப் பண்ணுகின்ற
கலித்திரளின் கடுங்கழுதைக்கத் துமாற்றிக்
கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம்
வலத்தில குமறு வொன்றாமல் மறுவொன்றில்லா
மாமணியாய் மலர் மாதரொளியாம், மந்நன்
னலத்திலொரு நிகரில்லா நாதன் பாத
நல்வழியாமல் வழக்கார் நடத்துவாரே.

5.47:
எல்லார்க்குமெளிதான வேற்றத்தாலும்
இனியுரைக்கை மிகையான விரக்கத்தாலுஞ்
சொல்லார்க்கு மளவாலும மைதலாலுந்
துணிவரிதாய்த் துணைதுறக்குஞ்சுகரத்தாலுங்
கல்லார்க்குங்கற்றார் சொற்கவர்தலாலுங்
கண்ணனுரை முடிசூடி முடித்தலாலு
நல்லார்க்குந்தீயார்க்கு மிதுவே நன்றா
நாரணற்கேயடைக்கலமாய் நணுகுவீரே.

5.48:
பண்டைமறைக்குப் பகையெனநின்ற பரமதங்கள்
கொண்டவர்கொள்ளும் பயனொன்றிலதெனுங்கூர் மதியால்
வண்டுவரைக் கரசான நம்மாயனை, வானுலகிற்
கண்டுகளிப்பதெனும் காதலொன்றைக் கருதுவமே.

5.49:
கலந்திகழும் போகங்கள் கண்டுவெள்கிக்
காரியமுங்காரணமுங்கடந்து நாம் போய்க்
குலந்திகழுங்குருக்களடி சூடி மன்னுங்
குற்றவேலடியவர் தங்குழாங்கள் கூடி
வலந்திக ழுந்திருமகளும் மற்றிடத்தே
மன்னிய மண்மகளா ருநீளையாரு
நலந்திகழ வீற்றிருந்த நாதன் பாத
நமக்கிதுவே முடியென்ன நண்ணினோமே.

5.50:
மானங்களின்றி வகுத்துறைக்கின்ற மதங்களெலாந்
தானங்களன்று தரும நெறிக்கென்று சாற்றியபின்
வானங்கவர்ந்து மறைமுடி சூடிய மாதவத்தோர்
ஞானங்களொன்ற நடக்கின்ற நல்வழி நாடுவமே.

5.51:
தன்னடிக்கீழுலகேழையும்வைத்த தனிதிருமால்
பொன்னடிக்கேற்கின்ற புண்ணியர்கேண்மின், புகலறிவார்
முன்னடிபார்த்து முயலுதலால் அவர்சாயையெனப்
பின்னடிபார்த்து நடந்து பெரும்பதமேறுவமே.

5.52:
வையமெலாமிருள் நீக்கு மணிவிளக்காய்
மன்னிய நான் மறைமௌலி மதியே கொண்டு
மெய்யலது விளம்பா தவியாசன் காட்டும்
விலக்கில்லா நல்வழியே விரைந்து செல்வீர்
ஐயமறவறு சமயக்குறும்பறுத்தோம்
அணியரங்க ரடியவர்க்கேயடிமை செய்தோ
மையகடல்வட்டத்துண்f மற்றுந்தோற்றும்
வாதியர்தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே.

5.53:
கோதவமொன்றில்லாத தகவேகொண்ட
கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று, ஓர்
தூதுவனாயொரு கோடிமறைகளெல்லாந்
தொடர்ந்தோடத் தனியோடித்துயரந்தீர்த்த
மாதவனார்வட கொங்கில் வானியாற்றின்
வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்
போது, இவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாட்
புணராத பரமதப்போர் பூரித்தோமே.

5.54:
திகிரி மழுவுயர்குந்தந்தண்டங்குசம் பொறி
சிதறுசதமுக வங்கிவாள் வேலமர்ந்ததுந்
தெழிபணில சிலைகண்ணி சீரங்க செவ்வடி
செழியகதை முசலந்தி சூலந்தி கழ்ந்ததும்
அகிலவுலகுகள் கண்டையாயோரலங்கலில்
அடையவடைவிலிங்க வாசின்றி நின்றதும்
அடியுமருகணையு மரவாமென்ன நின்று அடி
யடையு மடியரையன் பினலஞ்சலென்பது
மகிழுமமரர் கணங்கள் வானங்கவர்ந்திட
மலியுமசுரர் புணர்த்த மாயந்துரந்ததும்
வளருமணிமணிமின்ன வானந்திகொண்டிட
மறைமுறை முறைவணங்க மாறின்றிவென்றதுஞ்
சிகியிரவிமதியமு மிழ்தேசுந்த வெண்டிசைத்
திணிமருள்செகவுகந்து சேமங்கள் செய்ததுந்
திகழரவணை யரங்கர்தே சென்னமன்னிய
திரிசுதரிசனர் செய்யவீரெண் புயங்களே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : எண்டள, விடுநெறி, போமுரை, சித்தும்
முத்தின், நாக்கியல், தீவகை, வேலை, சிறைநிலை,
வெறியார், மிண்டு, கண்டதுமெய், கண்டதனால், கணாது,
மானமிலை, முற்றும், உளக்கதி, பொருளொன்றிலது,
நிலையில்லா, காண்கின்ற, கும்பிடு, வேதங்கள்,
பிரிவில்லா, சோதனை, சொன்னார், ஏகாந்திகம், ஒன்றென,
சாயா, கலகத்தில், கண்டதலாதன, ஆகமத்தை,
கோதம, நான்மறைக்கு, ஈசனும், கனைகடல்,
முக்குணமாய், ஈசனிலன், தாவி, காரணமாய்,
சாது, மாதவனே, கந்த, யாதும், பூவலரும்,
நமக்கார், பலத்தில், எல்லார்க்கும், பண்டைமறை,
கலந்திகழும், மானங்கள், தன்னடி, வையமெலாம்,
கோதவம், திகரி, வாழி.-

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.