LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

நான்காம் பாகம் - பிரளயம்-காதல் என்னும் மாயை

 

சீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள்.'பங்களா'வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வதற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள்காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும்அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்துகிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக்காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில்கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போதுகாணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. சீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்னஎன்பது புலனாயிற்று. "லலிதா! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்புஎங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது?" என்றாள் லலிதா."அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது.சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது!" என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள். 
 
     "நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை! டில்லியிலிருந்து நீ கடைசியாகஎழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை! உனக்கென்ன வருத்தம், சீதா! ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய்? அவருக்கும் உனக்கும் ஒத்துக்கொள்ளவில்லையா? இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக்கலியாணம் செய்து கொண்டீர்களே? இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரைஉங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம்வெறும் பொய்யா? உங்களுக்குள் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை? உண்மையில் அவருக்கு உன்பேரில் அன்பு இல்லையா?" என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள். "எனக்குத்தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்தி லிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக்கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக்கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதைஅறிந்து கொள்ள நான் பிரயத்தனப் படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை.திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய்பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கியமேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவே யில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான்கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்!" என்றாள் சீதா. 
 
      "நீ பேசுவது மர்மமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சீதா! நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்?அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய்?அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் எத்தனையோ சந்தோஷமாயிருந்தது. என்னுடையகணவர் என்னிடம் அப்படியெல்லாம் இல்லையே என்றெண்ணி ஏமாற்றமும் அடைந்தேன். இப்போது நீ பேசுவதைப் பார்த்தால் எல்லாம் பொய் என்று பெரியவர்கள் சொல்லுவதுஉண்மைதான் போலிருக்கிறது" என்று லலிதா கூறினாள். "அதில் சந்தேகமில்லை, லலிதா!பெரியவர்கள் இந்த உலகத்தை 'மாய உலகம்' என்று சொல்லுவது சரிதான். இந்த மாயஉலகத்தில் காதல் ஒன்றுதான் உண்மையானது என்று சிலர் சொல்லுவதுண்டு. நாவல்களிலும்,நாடகங்களிலும், சினிமாக்களிலும் இப்படிச் சொல்வார்கள். அதைப் போல மூடத்தனம்,பைத்தியக்காரத்தனம் - வேறொன்றும் கிடையாது. இந்த மாய உலகத்தில் எத்தனையோ மாயைகள் இருக்கின்றன. எல்லா மாயைகளிலும் பெரிய மாயை காதல் என்பதுதான்.என்னுடைய பெண்ணுக்கும் உன்னுடைய பெண்ணுக்கும் கொஞ்சம் வயதாகும்போது, அதுவரைநான் உயிரோடிருந்தால், அவர்களிடம் சொல்லப் போகிறேன். கதைகளைப் படித்து விட்டும்நாடகங்களையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டும் காதல், கீதல் என்று பைத்தியக்காரஎண்ணம் எண்ணிக் கொண்டிராதீர்கள். பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும்கலியாணத்திலேதான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாயிருக்கலாம் என்று சொல்லப்போகிறேன். காதல் என்பது வெறும் மாயை என்பதற்கு என்னையே உதாரணமாகக் காட்டப்போகிறேன்." 
 
      "சீதா! உன்னுடைய பேச்சில் எனக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை! ஏதோஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்றுநினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே? ஆனால் அந்தச்சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய்என்று சொல்ல முடியுமா? இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து நீ சொன்னதெல்லாம் எனக்குஅப்படியே ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் உன் உடம்பு எப்படிப் பூரித்தது என்பதெல்லாம் எனக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம்வெறும் பொய் என்பதாக நான் இன்னமும் நம்ப முடியவில்லை." "நீ மட்டும் என்ன? என்னால்கூடநம்பமுடியவில்லைதான். லலிதா! அதையெல்லாம் நினைத்தால் இப்போது கூட என் உடம்புசிலிர்க்கிறது. முதன் முதலில் அவரும் நானும் பார்த்துக் கொண்ட பிறகு, எங்களுடையஆசையை வெளியிட்டுக் கொண்ட பிறகு, இந்தப் பூவுலகம் எனக்குச் சொர்க்கலோகமாக மாறியிருந்தது. அவர் முதன் முதலில் என் கரத்தைத் தொட்டுக் கண்களால் ஒற்றிக்கொண்ட பிறகு, அவருடைய காதலைச் சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என்கன்னத்தில் கன்னி முத்தம் ஈந்த பிறகு, என்னுடைய மனித ஜன்மம் மாறித் தேவ கன்னிகைஆகியிருந்தேன். அந்த நாட்களில் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் என் தேகத்தைஅலங்கரித்தன. பூலோகத்துப் புஷ்பங்கள் எல்லாம் என் உடம்பில் மலர்ந்து மணம் வீசின. சந்திரகிரணங்கள் என் தேகத்தை மூடும் சல்லாத்துணி ஆயின. தென்றல் காற்று என் மேனியைக்குளிர்விப்பதற்காகவே வீசிற்று. சந்தனம் எனக்காகவே கந்தம் அளித்தது. 
 
      நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா! அவ்வளவும் அப்போதுஉண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான்நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்றுசொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜூலியட்டிடம் ரோமியோ வைத்தஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமேகிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும்என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில்குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது.என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா! நான் வங்கநாட்டுச்சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது.என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதைஇப்போது பாடிக் காட்டட்டுமா?" என்றாள் சீதா. 
 
      "பேஷாய்ப் பாடு! கேட்கவும் வேண்டுமோ? நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே!அது வங்காளிப் பாஷைப் பாட்டா?" என்றாள் லலிதா. "நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்;ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்!" என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:- 
 
                                             "பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார்? 
                                                                       - என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?
                                            காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார்? 
                                                                      - சகியே கைவிட்டுச் சென்றவர் யார்?
                                            வான வெளியினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார்? 
                                                                      - சகியே தானாக நின்றவர் யார்?
                                            தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார்? 
                                                                      - என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார்?" 
 
      இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளைஅன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். அவ்விதம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், "ஐயோ! பாவம்! என்னவெல்லாமோகஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகி யிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டாள்.

சீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள்.'பங்களா'வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வதற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள்காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும்அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்துகிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக்காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில்கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போதுகாணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. சீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்னஎன்பது புலனாயிற்று. "லலிதா! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்புஎங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது?" என்றாள் லலிதா."அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது.சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது!" என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள்.       "நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை! டில்லியிலிருந்து நீ கடைசியாகஎழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை! உனக்கென்ன வருத்தம், சீதா! ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய்? அவருக்கும் உனக்கும் ஒத்துக்கொள்ளவில்லையா? இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக்கலியாணம் செய்து கொண்டீர்களே? இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரைஉங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம்வெறும் பொய்யா? உங்களுக்குள் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை? உண்மையில் அவருக்கு உன்பேரில் அன்பு இல்லையா?" என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள். "எனக்குத்தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்தி லிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக்கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக்கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதைஅறிந்து கொள்ள நான் பிரயத்தனப் படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை.திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய்பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கியமேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவே யில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான்கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்!" என்றாள் சீதா.        "நீ பேசுவது மர்மமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது சீதா! நமக்குக் கலியாணம் ஆன புதிதில் இதே இடத்தில் நாம் உட்கார்ந்து எத்தனை நாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்?அவர் உன்னிடம் வைத்த காதலைக் குறித்து எவ்வளவு பூரிப்புடன் பேசிக் கொண்டிருந்தாய்?அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் எத்தனையோ சந்தோஷமாயிருந்தது. என்னுடையகணவர் என்னிடம் அப்படியெல்லாம் இல்லையே என்றெண்ணி ஏமாற்றமும் அடைந்தேன். இப்போது நீ பேசுவதைப் பார்த்தால் எல்லாம் பொய் என்று பெரியவர்கள் சொல்லுவதுஉண்மைதான் போலிருக்கிறது" என்று லலிதா கூறினாள். "அதில் சந்தேகமில்லை, லலிதா!பெரியவர்கள் இந்த உலகத்தை 'மாய உலகம்' என்று சொல்லுவது சரிதான். இந்த மாயஉலகத்தில் காதல் ஒன்றுதான் உண்மையானது என்று சிலர் சொல்லுவதுண்டு. நாவல்களிலும்,நாடகங்களிலும், சினிமாக்களிலும் இப்படிச் சொல்வார்கள். அதைப் போல மூடத்தனம்,பைத்தியக்காரத்தனம் - வேறொன்றும் கிடையாது. இந்த மாய உலகத்தில் எத்தனையோ மாயைகள் இருக்கின்றன. எல்லா மாயைகளிலும் பெரிய மாயை காதல் என்பதுதான்.என்னுடைய பெண்ணுக்கும் உன்னுடைய பெண்ணுக்கும் கொஞ்சம் வயதாகும்போது, அதுவரைநான் உயிரோடிருந்தால், அவர்களிடம் சொல்லப் போகிறேன். கதைகளைப் படித்து விட்டும்நாடகங்களையும் சினிமாக்களையும் பார்த்துவிட்டும் காதல், கீதல் என்று பைத்தியக்காரஎண்ணம் எண்ணிக் கொண்டிராதீர்கள். பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும்கலியாணத்திலேதான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாயிருக்கலாம் என்று சொல்லப்போகிறேன். காதல் என்பது வெறும் மாயை என்பதற்கு என்னையே உதாரணமாகக் காட்டப்போகிறேன்."        "சீதா! உன்னுடைய பேச்சில் எனக்கு இன்னமும் நம்பிக்கை உண்டாகவில்லை! ஏதோஒரு பெருந் துக்கத்தினால் அல்லது மனக்கசப்பினால் இப்படிப் பேசுகிறாயோ என்றுநினைக்கிறேன். காதல் என்பது மாயை என்றும் பொய் என்றும் சொல்லுகிறாயே? ஆனால் அந்தச்சமயத்தில், நமக்குக் கலியாணம் ஆகும் சமயத்தில், நீ அநுபவித்த சந்தோஷமெல்லாம் பொய்என்று சொல்ல முடியுமா? இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து நீ சொன்னதெல்லாம் எனக்குஅப்படியே ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெயரைச் சொன்னால் உன் உடம்பு எப்படிப் பூரித்தது என்பதெல்லாம் எனக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகத்துக்கு வருகிறது. அதெல்லாம்வெறும் பொய் என்பதாக நான் இன்னமும் நம்ப முடியவில்லை." "நீ மட்டும் என்ன? என்னால்கூடநம்பமுடியவில்லைதான். லலிதா! அதையெல்லாம் நினைத்தால் இப்போது கூட என் உடம்புசிலிர்க்கிறது. முதன் முதலில் அவரும் நானும் பார்த்துக் கொண்ட பிறகு, எங்களுடையஆசையை வெளியிட்டுக் கொண்ட பிறகு, இந்தப் பூவுலகம் எனக்குச் சொர்க்கலோகமாக மாறியிருந்தது. அவர் முதன் முதலில் என் கரத்தைத் தொட்டுக் கண்களால் ஒற்றிக்கொண்ட பிறகு, அவருடைய காதலைச் சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் என்கன்னத்தில் கன்னி முத்தம் ஈந்த பிறகு, என்னுடைய மனித ஜன்மம் மாறித் தேவ கன்னிகைஆகியிருந்தேன். அந்த நாட்களில் வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் என் தேகத்தைஅலங்கரித்தன. பூலோகத்துப் புஷ்பங்கள் எல்லாம் என் உடம்பில் மலர்ந்து மணம் வீசின. சந்திரகிரணங்கள் என் தேகத்தை மூடும் சல்லாத்துணி ஆயின. தென்றல் காற்று என் மேனியைக்குளிர்விப்பதற்காகவே வீசிற்று. சந்தனம் எனக்காகவே கந்தம் அளித்தது.        நான் அணிந்த பட்டுப் புடவைகள் என்னுடைய மேனியின் அழகினால் சோபை பெற்று விளங்கின; இதையெல்லாம் நானே உணர்ந்தேன். லலிதா! அவ்வளவும் அப்போதுஉண்மையாகத்தான் தோன்றியது. 'மாயை' என்றோ 'பொய்' என்றோ ஒரு கணமும் நான்நினைக்கவில்லை. அவர் என்னிடம் அந்த நாளில் வைத்திருந்த ஆசையைத்தான் என்னவென்றுசொல்லுவேன் தமயந்தியிடம் நளன் வைத்த ஆசையும் ஜூலியட்டிடம் ரோமியோ வைத்தஆசையும் லைலாவிடம் மஜ்னூன் வைத்த ஆசையும் அவர் என்னிடம் வைத்திருந்த ஆசைக்கு இணையாகாது என்றே தோன்றியது. வெள்ளி நிற அன்னப்பறவைகள் பூட்டிய புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு நாங்கள் நீல வானத்தில் நட்சத்திர மண்டலங்களுக்கிடையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஆனந்த யாத்திரைக்கு அந்தமேகிடையாது என்று எண்ணினேன். ஆனால் ஒரு நாள் அதற்கு முடிவு வந்தேவிட்டது. உன்னையும்என்னையும் போல் பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி வந்து எங்கள் ஆனந்த வாழ்க்கையில்குறுக்கிட்டாள். அந்த நிமிஷத்தில் சனியன் பிடித்தது. அவருடைய மனம் பேதலித்தது.என்னுடைய சொர்க்கம் ஒரு நொடிப்பொழுதில் நரகமாக மாறியது. லலிதா! நான் வங்கநாட்டுச்சிறையில் இருந்தபோது ஒரு பாடலைக் கேட்டேன். அது என் மனதை ரொம்பவும் கவர்ந்தது.என் மனதில் உற்சாகம் குன்றித் துயரம் ஏற்படும்போதெல்லாம் அதைப் பாடுவேன். உனக்கு அதைஇப்போது பாடிக் காட்டட்டுமா?" என்றாள் சீதா.        "பேஷாய்ப் பாடு! கேட்கவும் வேண்டுமோ? நீ பாடுவது எனக்கு எப்போதுமே பிடிக்குமே!அது வங்காளிப் பாஷைப் பாட்டா?" என்றாள் லலிதா. "நான் கேட்டது வங்காளிப் பாட்டுத்தான்;ஆனால் அதை நானே தமிழ்ப்படுத்தினேன்; கேள்!" என்று சொல்லிவிட்டு சீதா துயரம் ததும்பிய வர்ணமெட்டில் பின்வரும் பாட்டைப் பாடினாள்:-                                               "பாற்கடல் மீதினில் பசும்பொன் படகினில் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?                                                                        - என்னைப் பரிந்தேற்றிச் சென்றவர் யார்?                                            காற்றங்கு அடித்திடக் கடல் பொங்கும் வேளையில் கைவிட்டுச் சென்றவர் யார்?                                                                       - சகியே கைவிட்டுச் சென்றவர் யார்?                                            வான வெளியினில் தேனிலவு தன்னில் தானாக நின்றவர் யார்?                                                                       - சகியே தானாக நின்றவர் யார்?                                            தானாக நின்றென்னைத் தாவி அணைத்துப் பின் தனியாக்கிச் சென்றவர் யார்?                                                                       - என்னைத் தனியாக்கிச் சென்றவர் யார்?"        இந்தப் பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளைஅன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். அவ்விதம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது லலிதா தன் மனத்திற்குள், "ஐயோ! பாவம்! என்னவெல்லாமோகஷ்டங்களை அனுபவித்து இவளுடைய மூளையில் கொஞ்சம் கோளாறு உண்டாகி யிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டாள்.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.