LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு-1

 

நூல்
தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.
கடவுள் வணக்கம்
அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.
1. கல்வி
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை,
மரம் போக்கிக் கூலி கொண்டார். 1
சொற்றொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கற்றொறும், "கல்லாதேன்" என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,
கற்றொறும் தான் கல்லாத வாறு. 2
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். 3
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு
வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால்,
ஆற்று உணா வேண்டுவது இல். 4
"உணற்கு இனிய இந் நீர் பிறிதுஉழி இல்" என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின், கேட்டலே நன்று. 5
"உரை முடிவு காணான்; இளமையோன்!" என்ற
நரை முது மக்கள் உவப்ப-நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை
கல்லாமல் பாகம் படும். 6
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க
பூம் புனல் ஊர்!-பொது மக்கட்கு ஆகாதே;
பாம்பு அறியும் பாம்பின கால். 7
நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில். 8
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட!
நிறை குடம் நீர் தளும்பல் இல். 9
விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்,
கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி,
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,-
மதிப்புறத்துப் பட்ட மறு. 10
2. கல்லாதார்
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை- எற்றேல்,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. 11
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால் - நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,
கனா முந்துறாத வினை. 12
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்
'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-
சொல்லாக்கால் சொல்லுவது இல். 13
கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன்
சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம்
இவர் வரை நாட!-தமரை இல்லார்க்கு
நகரமும் காடு போன்றாங்கு. 14
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்!
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. 15
கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்
சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்று எனின்
தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,
யானையோடு ஆடல் உறவு. 16
3. அவையறிதல்
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால்
வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர், அவை. 17
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா
பெரு வரை நாட! சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய். 18
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு. 19
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி 
பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடு
தேவரும் ஆற்றல் இலர். 20
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,
புகல் அறியார் புக்கு, அவர் தாமே - இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ,
பாண் சேரிப் பல் கிளக்கும் ஆறு. 21
மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்
யானைப் பல் காண்பான் புகல். 22
அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, - கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல். 23
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்
புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்
புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,
இடைக் கலத்து எய்துவிடல். 24
நடலை இலர் ஆகி நன்று உணராராய
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்,
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று. 25
4. அறிவுடைமை
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின். 26
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்,
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்
பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
காய்கலா ஆகும் நிலா. 27
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!
கற்றறிவு போகா கடை. 28
ஆணம் உடைய அறிவினார் தம் நலம்
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,-
மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர்,
யானையால் யானை யாத்தற்று. 29
தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார்,
பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற
விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப
அரிவாரைக் காட்டார் நரி. 30
பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது. 31
பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். 32
அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும்,
திரு உடையராயின், திரிந்தும்-வருமால்
பெரு வரை நாட! பிரிவு இன்று, அதனால்
திருவினும் திட்பம் பெறும். 33
5. ஒழுக்கம்
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர்!-அஃதன்றோ
நெய்த்தலைப் பால் உக்கு விடல். 34
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரையை!-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர் உடும்பு. 35
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நடஅத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல். 36
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால்,
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்,
ஓர்த்தது இசைக்கும் பறை. 37
தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம்
எங்கெங்கும் தீர்த்ததற்கு இடை புகுதல்-எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது,
அயல் வளி தீர்த்து விடல். 38
கெடுவல் எனப்பட்டக் கண்ணும், தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும்; தேயாது, சொல். 39
பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி-மருந்தின்
தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப!
பிணி ஈடு அழித்து விடும். 40
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவா,
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி
இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!
பெரும் பழியும் பேணாதார்க்கு இல். 41
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,
'கோவிற்குக் கோவலன்' என்று, உலகம் கூறுமால்
தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல். 42
6. இன்னா செய்யாமை
பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்' எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,
நோவச் செயின், நோயின்மை இல். 43
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 44
'ஆற்றார் இவர்' என்று, அடைந்த தமரையும்,
தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கவ்வி விடும். 45
நெடியது காண்கலாய்; நீ ஒளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற;-அடியுளே,
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும். 46
'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால்,
ஆற்றாது அவர் அழத கண்ணீர் அவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும். 47
'மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை
ஒற்கப்பட முயறும்' என்றல் இழுக்கு ஆகும்;-
நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல்
கல் கிள்ளி, கை உயர்ந்தார் இல். 48
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,
கூர்ந்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;-
பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,
பேர்த்து நாய் கவ்வினார் இல். 49
காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல். 50
7. வெகுளாமை
இறப்பச் சிறயவர் இன்னா செயினும்,
பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு. 51
'ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை' என்ப;-ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது. 52
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
நெல்செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
தற் செய்ய, தானே கெடும். 53
எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாராக் கொண்டு விடுமர்மன்; அஃதால்
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல். 54
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,
பரியாதார் போல இருக்க - பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க் கூட்டுவார். 55
கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக,
பொய்யாகத் தம்மைப் பொருள் அல்லார் கூறுபவேல்,-
மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப,
செய்யாத எய்தா எனில். 56
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல். 57
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்க லாகாதார்,
நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,-
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ,
தீ இல்லை ஊட்டும் திறம். 58
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்;-ஒறுத்து ஆற்றின்,
வான் ஓங்கு உயர் வரை வெற்ப! பயம் இன்றே
தான் நோன்றிட வரும், சால்பு. 59
8. பெரியாரைப் பிழையாமை
அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று;
சிறியர் எனப்பாடும் செய்யும்;-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த,
என்று ஊடு அறுப்பினும், மன்று. 60
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்ற
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,-
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாமா கண் காணாத வாறு. 61
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரைக்,
கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,-
நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல். 62
முன்னும் ஒரு கால் பிழைப்பானை ஆற்றவும்,
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசை
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ,
வாழை இரு கால் குலை? 63
நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு,
நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;-
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே,
கொடும்பாடு உடையான் குடி. 64
9. புகழ்தலின் கூறுபாடு
செய்த கருமம் சிறிதானும் கைகூடா;
மெய்யா உணரவும் தாம் படார்; எய்த
நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப்
புள் அரைக்கால் விற்பேம்' எனல். 65
தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின்,
அமராததனை அகற்றலே வேண்டும்;-
அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம். 66
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல். 67
பல் கிளையுள் பார்த்துறான் ஆகி, ஒருவனை
நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,
உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,
நிரையுள்ளே இன்னா, வரைவு. 68
10. சான்றோர் இயல்பு
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர். 69
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி. 70
மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல்,
பீடு இலாக்கண்ணும், பெரியோர் பெருந் தகையர்;-
ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. 71
இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,
உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு
அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும்,
மணி மணியாகி விடும். 72
கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார்,
மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லால்;
பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். 73
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்,
தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின்,
நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!
அறி மடமும் சான்றோர்க்கு அணி. 74
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்,
உரைத்தால், உரை பெறுதல் உண்டு. 75
'எனக்குத் தகவு அன்றால்' என்பதே நோக்கி,
தனக்குக் கரி ஆவான் தானாய், - தவற்றை
நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
எனச் செய்யார், மாணா வினை. 76
தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை,- ஏய்ப்பார் முன்
சொல்லோடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே-
வில்லொடு காக்கையே போன்று. 77
மடங்கிப் பசிப்பினும், மாண்புடை யாளர்,
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்-குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!
கடலொடு காட்டு ஒட்டல் இல். 78
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,-
மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு. 79
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,
ஒன்றும், சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்-
குன்றின்மேல் இட்ட விளக்கு. 80
11. சான்றோர் செய்கை
ஈட்டிய ஒண் பொருள் இன்றெனினும், ஒப்புரவு
ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும்
போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,
ஏற்றுக் கன்று ஏறாய் விடும். 81
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்,
'இடம் கண்டு அறிவாம்' என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வார் கடன். 82
மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப் 
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?-
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய். 83
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை
மாண்டிலார் என்றே மறுப்பக் கிடந்ததோ?
பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட
பறை அறையாப் போயினார் இல். 84
பரியப் படுபவர் பண்பு இலரேனும்,
திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப்
பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ,
ஊர் அறிய நட்டார்க்கு உணா? 85
தெற்றப் பகைவர் இடர்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்
அவைப்படின், சாவாது பாம்பு. 86
'இறப்ப எமக்கு ஈது இழிவரவு!' எண்ணார்,
பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே-
தால அடைக்கலமே போன்று. 87
பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல்-எறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு. 88
சிறியவர் எய்திய செல்வத்தின், நாண
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்
முது நெய் தீது ஆகலோ இல். 89
12. கிழ்மக்கள் இயல்பு
மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும்,
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க
இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும்,
மன நல ஆகாவாம் கீழ். 90
'தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்' என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல். 91
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?-
மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ,
நந்து உழுத எல்லாம் கணக்கு. 92
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 93
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு உறுதி மொழியற்க!-மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே,
உண்டது நீலம் பிறிது. 94
தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே ஆயினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே,
தேவரே தின்னினும் வேம்பு. 95
காடு உறை வாழ்க்கைக் கரு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும்
கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்
செய் உளது ஆகும், மனம். 96
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே,
தின்பது அழுவதன் கண். 97
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே
துடும்பல் எறிந்து விடல். 98
மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,-
ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக்
காணாக் களிக்கும், களி. 99
உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும்,
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,-
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!
முழம் குறைப்பச் சாண் நீளூமாறு. 100
அல்லவை செய்ப, அலப்பின்; அல்வாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைந்து எழுவர்;-
கல்லாக் கயவர் இயல்போல்;-நரியிற்கு ஊண் 
நல் யாண்டும் தீ யாண்டும் இல். 101
கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,
கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?-
ஊர் அறியா மூரியோ இல். 102
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;-
மரம் பயில் சோலை மலை நாட!-என்றும்
குரங்கினுள் நன் முகத்த இல். 103
ஊழாயினாயிரைக் களைந்திட்டு, உதவாத
கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும்
தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து,
காஞ்சிரை நட்டு விடல். 104
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல்,-பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர்!-அது அன்றோ,
நாய்மேல் தவிசு இடும் ஆறு. 105
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,
ஆசறு செய்யாராய், ஆற்றப் பெருகினும்,
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார், குடி. 106
13. கீழ்மக்கள் செய்கை
இன்றி, சிறியார், 'எளியரால்!' என்று,-பெரியாரைத்
தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்-
திங்களை நாய் குரைத்தற்று. 107
'மறுமை ஒன்று உண்டோ ? மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்' என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
இட்டிகை தீற்று பவர். 108
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக
நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,-
எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து
உண்ணி பறித்துவிடல். 109
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,
'வருந்தினார்' என்றே வயப்படுவது உண்டோ ?
அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக் கண்ணும்,
பொருந்தா மண், ஆகா, சுவர். 110
குலத்துச் சிறயார், கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து
நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்
தலை கீழாக் காதிவிடல். 111
சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து,
அச்சாணி தாம் கழிக்குமாறு. 112
நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களைப் பேணி,
ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்-
புழுப் பெய்து புண் பொதியுமாறு. 113
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதைகள்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!-
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும். 114
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்,
மூக்கு அற்றதற்கு இல், பழி. 115
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல். 116
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக்
கள்ளராச் செய்குறு வார். 117
செய்த கொடுமை உடையான், அதன் பயம்
எய்த உரையான், இடரினால்;-எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல். 118
முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும்
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!-
மன்றத்து மையல் சேர்ந்தற்று. 119
தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,
கரப்புடை உள்ளம் கனற்று பவரே-
செருப்பிடைப் பட்ட பரல். 120
உறு மக்கள் ஆக ஒருவனை நாட்டி,
பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே,
குறுமக்கள் காவு நடல். 121
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,
நிரை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,-
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே,
சுரை ஆழ, அம்மி மிதப்பு. 122
தேர்ந்து, கண்ணோடது, தீவினையும் அஞ்சலராய்,
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு. 123
14. நட்பின் இயல்பு
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா,
கட்டங்கம் வெல் கொடி கொண்டானும், கொண்டானே;-
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே,
நட்டாரை ஒட்டியுழி. 124
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. 125
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே,
பேஎயோ டானும் பிரிவு. 126
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்
முனியார் செயினும், மொழியால் முடியா;-
துணியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
பனியால் குளம் நிறைதல் இல். 127
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா;
யார் நட்பே ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;-
கானாட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ,
நாய், நட்டால், நல்ல முயல். 128
'தீர்ந்தேம்' எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்
பழமை கந்து ஆக, பரியார், புதுமை;-
முழ நட்பின், சாண் உட்கு நன்று. 129
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப் 
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?
விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார்,
இழித்தக்க காணின், கனா. 130
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,
கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;-
பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ,
தம் கன்று சாக் கறப்பார். 131
தம் தீமை இல்லாதார், நட்டவர் தீமையையும்,
'எம் தீமை' என்றே உணர்ப, தாம்;-அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு. 132
தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்ற
அறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார்
மறையார், மருத்துவர்க்கு நோய். 133
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்,
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;-
கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து,
கெட்டார்க்கு நட்டாரோ இல்! 134

நூல்

தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,இன் துறை வெண்பா இவை.

கடவுள் வணக்கம்
அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,பெரியதன் ஆவி பெரிது.

1. கல்வி
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச்சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை,மரம் போக்கிக் கூலி கொண்டார். 1
சொற்றொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்கற்றொறும், "கல்லாதேன்" என்று, வழி இரங்கி,உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,கற்றொறும் தான் கல்லாத வாறு. 2
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்குமருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னைபொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். 3
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார்நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடுவேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால்,ஆற்று உணா வேண்டுவது இல். 4
"உணற்கு இனிய இந் நீர் பிறிதுஉழி இல்" என்னும்கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினைமுற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்கற்றலின், கேட்டலே நன்று. 5
"உரை முடிவு காணான்; இளமையோன்!" என்றநரை முது மக்கள் உவப்ப-நரை முடித்து,சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சைகல்லாமல் பாகம் படும். 6
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்கபூம் புனல் ஊர்!-பொது மக்கட்கு ஆகாதே;பாம்பு அறியும் பாம்பின கால். 7
நல்லார் நலத்தை உணரின், அவரினும்நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்லமயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும்,அயிலாலே போழ்ப, அயில். 8
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்றஅறை கல் அருவி அணி மலை நாட!நிறை குடம் நீர் தளும்பல் இல். 9
விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்,கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி,பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,-மதிப்புறத்துப் பட்ட மறு. 10

2. கல்லாதார்
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்தெற்ற உணரார், பொருள்களை- எற்றேல்,அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லைநாவல்கீழ்ப் பெற்ற கனி. 11
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்சொல்லுங்கால், சோர்வு படுதலால் - நல்லாய்வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,கனா முந்துறாத வினை. 12
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-சொல்லாக்கால் சொல்லுவது இல். 13
கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன்சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம்இவர் வரை நாட!-தமரை இல்லார்க்குநகரமும் காடு போன்றாங்கு. 14
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்!இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை,ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. 15
கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்று எனின்தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,யானையோடு ஆடல் உறவு. 16

3. அவையறிதல்
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால்வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்! தோற்பனகொண்டு புகாஅர், அவை. 17
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டுஇருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலாபெரு வரை நாட! சிறிதேனும் இன்னாது,இருவர் உடன் ஆடல் நாய். 18
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னிமொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்கிழிந்தானை மூக்குப் பொதிவு. 19
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடுதேவரும் ஆற்றல் இலர். 20
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,புகல் அறியார் புக்கு, அவர் தாமே - இகலினால்வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ,பாண் சேரிப் பல் கிளக்கும் ஆறு. 21
மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்யானைப் பல் காண்பான் புகல். 22
அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, - கல்விஅளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்மிளகு உளு உண்பான் புகல். 23
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,இடைக் கலத்து எய்துவிடல். 24
நடலை இலர் ஆகி நன்று உணராராயமுடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்,உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்கடலுளால் மாவடித் தற்று. 25

4. அறிவுடைமை
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்னஅணி எல்லாம், ஆடையின் பின். 26
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்,மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,காய்கலா ஆகும் நிலா. 27
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே,சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!கற்றறிவு போகா கடை. 28
ஆணம் உடைய அறிவினார் தம் நலம்மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,-மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர்,யானையால் யானை யாத்தற்று. 29
தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார்,பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்றவிரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்பஅரிவாரைக் காட்டார் நரி. 30
பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார்சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ்அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும்,பெரிது ஆள்பவனே பெரிது. 31
பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்துவேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். 32
அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும்,திரு உடையராயின், திரிந்தும்-வருமால்பெரு வரை நாட! பிரிவு இன்று, அதனால்திருவினும் திட்பம் பெறும். 33

5. ஒழுக்கம்
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்குசெய்த்தலை வீழும் புனல் ஊர்!-அஃதன்றோநெய்த்தலைப் பால் உக்கு விடல். 34
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,எள்ளற்க, யார் வாயும் நல் உரையை!-தெள்ளிதின்ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்,பார்ப்பாரும் தின்பர் உடும்பு. 35
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,நின் நடையானே நடஅத்தா! நின் நடைநின் இன்று அறிகிற்பார் இல். 36
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால்,பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதேகூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்,ஓர்த்தது இசைக்கும் பறை. 37
தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம்எங்கெங்கும் தீர்த்ததற்கு இடை புகுதல்-எங்கும்வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது,அயல் வளி தீர்த்து விடல். 38
கெடுவல் எனப்பட்டக் கண்ணும், தனக்கு ஓர்வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரைமுற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டியகல் தேயும்; தேயாது, சொல். 39
பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்குமருந்து ஆகி நிற்பதாம் மாட்சி-மருந்தின்தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப!பிணி ஈடு அழித்து விடும். 40
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவா,நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்திஇருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!பெரும் பழியும் பேணாதார்க்கு இல். 41
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,'கோவிற்குக் கோவலன்' என்று, உலகம் கூறுமால்தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா தீங்கு உரைக்கும்நாவிற்கு நல்குரவு இல். 42

6. இன்னா செய்யாமை
பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்' எனக் கருதி,யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டாதேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,நோவச் செயின், நோயின்மை இல். 43
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 44
'ஆற்றார் இவர்' என்று, அடைந்த தமரையும்,தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்உடையானைக் கவ்வி விடும். 45
நெடியது காண்கலாய்; நீ ஒளியை நெஞ்சே!கொடியது கூறினாய் மன்ற;-அடியுளே,முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடுபிற்பகல் கண்டுவிடும். 46
'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால்,ஆற்றாது அவர் அழத கண்ணீர் அவை அவர்க்குக்கூற்றமாய் வீழ்ந்து விடும். 47
'மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரைஒற்கப்பட முயறும்' என்றல் இழுக்கு ஆகும்;-நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல்கல் கிள்ளி, கை உயர்ந்தார் இல். 48
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,கூர்ந்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;-பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,பேர்த்து நாய் கவ்வினார் இல். 49
காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்குநல்ல நாராயம் கொளல். 50

7. வெகுளாமை
இறப்பச் சிறயவர் இன்னா செயினும்,பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளிநல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்இல்லம் சுடுகலா வாறு. 51
'ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனைமாறி ஒழுகல் தலை' என்ப;-ஏறிவளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!தெளியானைத் தேறல் அரிது. 52
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;நெல்செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,தற் செய்ய, தானே கெடும். 53
எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்வைதாராக் கொண்டு விடுமர்மன்; அஃதால்புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டுதனக்கு நோய் செய்துவிடல். 54
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,பரியாதார் போல இருக்க - பரிவு இல்லாவம்பலர் வாயை அவிப்பான் புகுவரேஅம்பலம் தாழ்க் கூட்டுவார். 55
கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக,பொய்யாகத் தம்மைப் பொருள் அல்லார் கூறுபவேல்,-மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப,செய்யாத எய்தா எனில். 56
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன்முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப்பசுக் குத்தின், குத்துவார் இல். 57
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்க லாகாதார்,நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,-பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ,தீ இல்லை ஊட்டும் திறம். 58
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்;-ஒறுத்து ஆற்றின்,வான் ஓங்கு உயர் வரை வெற்ப! பயம் இன்றேதான் நோன்றிட வரும், சால்பு. 59

8. பெரியாரைப் பிழையாமை
அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று;சிறியர் எனப்பாடும் செய்யும்;-எறி திரைசென்று உலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த,என்று ஊடு அறுப்பினும், மன்று. 60
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்றதாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,-போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,சாமா கண் காணாத வாறு. 61
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரைக்,கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,-நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்குமறைந்து, யானை பாய்ச்சிவிடல். 62
முன்னும் ஒரு கால் பிழைப்பானை ஆற்றவும்,பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசையாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ,வாழை இரு கால் குலை? 63
நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு,நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;-அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே,கொடும்பாடு உடையான் குடி. 64

9. புகழ்தலின் கூறுபாடு
செய்த கருமம் சிறிதானும் கைகூடா;மெய்யா உணரவும் தாம் படார்; எய்தநலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப்புள் அரைக்கால் விற்பேம்' எனல். 65
தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின்,அமராததனை அகற்றலே வேண்டும்;-அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை,தமவேனும், கொள்ளாக் கலம். 66
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்நாயைப் புலியாம் எனல். 67
பல் கிளையுள் பார்த்துறான் ஆகி, ஒருவனைநல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,நிரையுள்ளே இன்னா, வரைவு. 68

10. சான்றோர் இயல்பு
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,நூறாயிரவர்க்கு நேர். 69
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,புல் மேயாது ஆகும், புலி. 70
மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல்,பீடு இலாக்கண்ணும், பெரியோர் பெருந் தகையர்;-ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. 71
இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்குஅணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும்,மணி மணியாகி விடும். 72
கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார்,மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லால்;பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித்துன்னூசி விற்பவர் இல். 73
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்,தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின்,நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!அறி மடமும் சான்றோர்க்கு அணி. 74
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆநிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்,உரைத்தால், உரை பெறுதல் உண்டு. 75
'எனக்குத் தகவு அன்றால்' என்பதே நோக்கி,தனக்குக் கரி ஆவான் தானாய், - தவற்றைநினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்எனச் செய்யார், மாணா வினை. 76
தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை,- ஏய்ப்பார் முன்சொல்லோடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே-வில்லொடு காக்கையே போன்று. 77
மடங்கிப் பசிப்பினும், மாண்புடை யாளர்,தொடங்கிப் பிறர் உடைமை மேவார்-குடம்பைமடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!கடலொடு காட்டு ஒட்டல் இல். 78
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,-மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா;நரை ஆன் புறத்து இட்ட சூடு. 79
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,ஒன்றும், சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்-குன்றின்மேல் இட்ட விளக்கு. 80

11. சான்றோர் செய்கை
ஈட்டிய ஒண் பொருள் இன்றெனினும், ஒப்புரவுஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும்போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,ஏற்றுக் கன்று ஏறாய் விடும். 81
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்,'இடம் கண்டு அறிவாம்' என்று எண்ணி இராஅர்;-மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்கடம் கொண்டும் செய்வார் கடன். 82
மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப் பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?-மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,கை உண்டும், கூறுவர் மெய். 83
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரைமாண்டிலார் என்றே மறுப்பக் கிடந்ததோ?பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்டபறை அறையாப் போயினார் இல். 84
பரியப் படுபவர் பண்பு இலரேனும்,திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப்பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ,ஊர் அறிய நட்டார்க்கு உணா? 85
தெற்றப் பகைவர் இடர்பாடு கண்டக்கால்,மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்றநவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்அவைப்படின், சாவாது பாம்பு. 86
'இறப்ப எமக்கு ஈது இழிவரவு!' எண்ணார்,பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே-தால அடைக்கலமே போன்று. 87
பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்சிறியார் இனமாய் ஒழுகுதல்-எறி இலைவேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ,பூவொடு நார் இயைக்குமாறு. 88
சிறியவர் எய்திய செல்வத்தின், நாணபெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்முது நெய் தீது ஆகலோ இல். 89

12. கிழ்மக்கள் இயல்பு
மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும்,உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்கஇன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும்,மன நல ஆகாவாம் கீழ். 90
'தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;மிக்காரால்' என்று, சிறியாரைத் தாம் தேறார்;-கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,அக்காரம் சேர்ந்த மணல். 91
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?-மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ,நந்து உழுத எல்லாம் கணக்கு. 92
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்திவிதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்குஉரைத்தாலும் தோன்றாது உணர்வு. 93
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராதமூர்க்கர்க்கு உறுதி மொழியற்க!-மூர்க்கன் தான்கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே,உண்டது நீலம் பிறிது. 94
தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்யாவரே ஆயினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே,தேவரே தின்னினும் வேம்பு. 95
காடு உறை வாழ்க்கைக் கரு வினை மாக்களைநாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும்கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்செய் உளது ஆகும், மனம். 96
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னைபுன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே,தின்பது அழுவதன் கண். 97
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர்அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலேதுடும்பல் எறிந்து விடல். 98
மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,-ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக்காணாக் களிக்கும், களி. 99
உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும்,விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,-தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!முழம் குறைப்பச் சாண் நீளூமாறு. 100
அல்லவை செய்ப, அலப்பின்; அல்வாக்கால்,செல்வது அறிகிலர் ஆகிச் சிதைந்து எழுவர்;-கல்லாக் கயவர் இயல்போல்;-நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல். 101
கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?-ஊர் அறியா மூரியோ இல். 102
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;-மரம் பயில் சோலை மலை நாட!-என்றும்குரங்கினுள் நன் முகத்த இல். 103
ஊழாயினாயிரைக் களைந்திட்டு, உதவாதகீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும்தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து,காஞ்சிரை நட்டு விடல். 104
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்சிறியார்க்குச் செய்து விடுதல்,-பொறி வண்டுபூ மேல் இசை முரலும் ஊர்!-அது அன்றோ,நாய்மேல் தவிசு இடும் ஆறு. 105
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,ஆசறு செய்யாராய், ஆற்றப் பெருகினும்,மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாதகூதறைகள் ஆகார், குடி. 106

13. கீழ்மக்கள் செய்கை
இன்றி, சிறியார், 'எளியரால்!' என்று,-பெரியாரைத்தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்-திங்களை நாய் குரைத்தற்று. 107
'மறுமை ஒன்று உண்டோ ? மனப்பட்ட எல்லாம்பெறுமாறு செய்ம்மின்' என்பாரே-நறு நெய்யுள்கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,இட்டிகை தீற்று பவர். 108
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிகநண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,-எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்துஉண்ணி பறித்துவிடல். 109
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,'வருந்தினார்' என்றே வயப்படுவது உண்டோ ?அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக் கண்ணும்,பொருந்தா மண், ஆகா, சுவர். 110
குலத்துச் சிறயார், கலாம் தணிப்பான் புக்குவிலக்குவார் மேலும், எழுதல்-நிலத்துநிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்தலை கீழாக் காதிவிடல். 111
சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரைஇல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து,அச்சாணி தாம் கழிக்குமாறு. 112
நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும்பேணா அறிவு இலா மாக்களைப் பேணி,ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்-புழுப் பெய்து புண் பொதியுமாறு. 113
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதைகள்சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!-மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்நுணலும் தன் வாயால் கெடும். 114
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்,மூக்கு அற்றதற்கு இல், பழி. 115
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களைநாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்களிக்கள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கிவளி தோட்கு இடுவாரோ இல். 116
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக்கள்ளராச் செய்குறு வார். 117
செய்த கொடுமை உடையான், அதன் பயம்எய்த உரையான், இடரினால்;-எய்திமரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்பரிகாரம் யாதொன்றும் இல். 118
முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆயபொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும்குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!-மன்றத்து மையல் சேர்ந்தற்று. 119
தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,கரப்புடை உள்ளம் கனற்று பவரே-செருப்பிடைப் பட்ட பரல். 120
உறு மக்கள் ஆக ஒருவனை நாட்டி,பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல்சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே,குறுமக்கள் காவு நடல். 121
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,நிரை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,-வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே,சுரை ஆழ, அம்மி மிதப்பு. 122
தேர்ந்து, கண்ணோடது, தீவினையும் அஞ்சலராய்,சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்தவிரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்நரகர்கட்கு இல்லையோ நஞ்சு. 123

14. நட்பின் இயல்பு
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா,கட்டங்கம் வெல் கொடி கொண்டானும், கொண்டானே;-விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே,நட்டாரை ஒட்டியுழி. 124
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்தஉரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரை பிறிதுகொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. 125
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவிதாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே,பேஎயோ டானும் பிரிவு. 126
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்முனியார் செயினும், மொழியால் முடியா;-துணியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-பனியால் குளம் நிறைதல் இல். 127
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா;யார் நட்பே ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;-கானாட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ,நாய், நட்டால், நல்ல முயல். 128
'தீர்ந்தேம்' எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்பழமை கந்து ஆக, பரியார், புதுமை;-முழ நட்பின், சாண் உட்கு நன்று. 129
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப் பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார்,இழித்தக்க காணின், கனா. 130
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;-பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ,தம் கன்று சாக் கறப்பார். 131
தம் தீமை இல்லாதார், நட்டவர் தீமையையும்,'எம் தீமை' என்றே உணர்ப, தாம்;-அம் தண்பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-ஒருவர் பொறை, இருவர் நட்பு. 132
தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்குஉற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்றஅறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார்மறையார், மருத்துவர்க்கு நோய். 133
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்,அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;-கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து,கெட்டார்க்கு நட்டாரோ இல்! 134

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.