LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு-2

 

15. நட்பில் விலக்கு
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்,
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பராய்
எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும்,
உண்ணும் துணைக் காக்கும், கூற்று. 135
'எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர்- பைத்தொடீஇ!
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு. 136
பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே-
கழி விழாத் தோள் ஏற்றுவார். 137
'இடையீடு உடையார் இவர் அவரோடு' என்று,
தலையாயார் ஆராய்ந்தும் காணார்; கடையாயர்
முன் நின்று கூறும் குறளை தெரிதலால்,-
பின் இன்னா, பேதையார் நட்பு. 138
தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால்,
நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆயினென்,-
மான் மானும் கண்னால் மறந்தும் பரியலரா
கானகத்து உக்க நிலா. 139
கண்டு அறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேபோல்,
விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ,
விண்டற்கு விண்டல் மருந்து. 140
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று,
திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே,
இரு தலைக் கொள்ளி என்பார். 141
16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல்
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு. 142
'யாம் தீய செய்த மலை மறைத்தது' என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாராய் ;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!
கணையிலும் கூரியவாம் கண். 143
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு; அஃதேபோல்,
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;-
ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். 144
நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி
நோக்கி, அறிய அதுவேபோல் - நோக்கி,
முகன் அறிவார் முன்னம் அறிய; அதுவே,
மகன் அறிவு தந்தை அறிவு. 145
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறம் அரிதால்;-தேமொழி-ஆரும்
குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
புலப் புல வண்ணத்த, புள். 146
காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
'மேய்ப்பு ஆட்டது' என்று உண்ணாள் ஆயினாள்-தீப் புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும். 147
முயலவோ வேண்டா; முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!-
கயல் இகல் உண் கண்ணாய்!-கரியரோ வேண்டா;
அயல் அறியா அட்டூணோ இல். 148
17. முயற்சி
'எமக்குத் துணையாவார்?' வேண்டும் என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம். 149
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையோனே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன். 150
வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து
வாள் ஆண்மையாலும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று. 151
'ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்'
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது,
சென்றது, பேரா தவர். 152
'இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?
தனியேம் யாம்!' என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;
முனிவு இலராகி முயல்க!-முனிவில்லார்
முன்னியது எய்தாமை இல். 153
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும். 154
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண். 155
'எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை' என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க!- எங்கானும்
நன்கு திரண்டு பெரயவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள். 156
நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,
உலக்கைமேல் காக்கை என்பார். 157
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக்கொண்டு,
கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது
உக்கு ஓடிக் காட்டிவிடும். 158
தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கல்லார்,
'பின்னை, ஒருவரால் செய்வித்தும்' என்று இருத்தல்,-
செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ. 159
'முழுதுடன் முன்னே வகுத்தவன்' என்று,
தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ, அல்லல்-
இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்
எழுதினான் ஓலை பழுது. 160
முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது
ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற
வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள்
இல்லதற்கு இல்லை, பெயர். 161
18. கருமம் முடித்தல்
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே-
வெந் நீரில் தண்ணீர் தெளித்து. 162
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப் பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார். 163
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க!-
வரையக நாட!-விரைவிற், கருமம் 
சிதையும்; இடர் ஆய்விடும். 164
'நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்' என்று, ஒன்று
உளைய உரையாது, உறுதியே கொள்க!-
வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து,
தொளை எண்ணார், அப்பம் தின்பார். 165
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது-
கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்,
அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. 166
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும்;-கொடி அன்னாய்!-
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,
மூரி உழுது விடல். 167
ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றாண்டும்
பாணித்தே செய்ய, வியங்கொள்ளின் - காணி
பயவாமல் செய்வார் ஆர்? தம் சாகாடேனும்
உயவாமல் சேறலோ இல். 168
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,
முட்டாது அவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
தட்டாமல் செல்லாது, உளி. 169
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, 'அவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கு!' என்று அமர்ந்து இருத்தல்,-
மாப்புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக்
காப்பிடுதல், புன் மீன் தலை. 170
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
மற்றதன்பால் தேம்பல் நன்று. 171
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்
கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,-
இழவு அன்று, எருது உண்ட உப்பு. 172
கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின்,
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!-
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே,
அட்டாரை ஒட்டாக் கலம். 173
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,
'காட்டி, களைதும்' என வேண்டா;-ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல். 174
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,
இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து,
நினைத்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,
'நனைந்து வா' என்று விடல். 175
உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம்,
புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்-
நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு,
கரை இருந்தார்க்கு எளிய, போர். 176
19. மறை பிறர் அறியாமை
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும்,
சீர்ந்தது செய்யாதார் இல். 177
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் - தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்
பறைக்கண் கடிப்பு இடுமாறு. 178
அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க! - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு,
புல்வாய் வழிப்படுவார் இல். 179
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;-
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர்
கயவர்க்கு உரையார், மறை. 180
பெரு மலை நாட!-பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. 181
விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்
முறிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;-
அளிந்தார்கண் ஆயினும், ஆராயான் ஆகித்
தெளிந்தான் விரைந்து கெடும். 182
20. தெரிந்து தெளிதல்
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய். 183
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?-
கற்பால் கலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோரா தாரோ இலர். 184
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு
வேந்தர் வினாயினான், மாந்தரை - சான்றவன்,
கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்! 185
ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,
இருவரிடை நட்பான் புக்கால், பெரிய
வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்
குறுக் கண்ணி ஆகிவிடும். 186
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,
தினைத் துணையேயானும் அணிக் கோடல் நன்றே
இனக் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப!
பனைப் பதித்து, உண்ணார் பழம். 187
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;
சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!
இனம் கழு ஏற்றினார் இல். 188
கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,
நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தோடு
பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே-
நீர் குறிதாகப் புகல். 189
சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார்,
பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்,
கிடப்புழியும் பெற்றுவிடும். 190
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?-
புன் சொல் இடர்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல். 191
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,
பொய்ந் நீரர் ஆகிய பொருளை முடிப்பார்க்கும்,
எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர்
தம் நீரர் ஆதல் தலை. 192
யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,
தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை
படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும். 193
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,-
அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி,
மயில் போலும் கள்வர் உடைத்து. 194
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது
நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்
நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதே
ஓடுக, ஊர் ஓடுமாறு! 195
21. பொருள்
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது. 196
ஒல்லாது வின்றி, உடையார் கருமங்கள் 
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!-
கடலுள்ளும் காண்பவே, நன்கு. 197
அருமையுடைய பொருள் உடையார், தங்கண்
கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல்
நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு,
தேரை வழிச் சென்றார் இல். 198
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;-
பொரு படைக் கண்ணாய்!-அதுவே, திரு உடையார்
பண்டம் இருவர் கொளல். 199
உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே
உடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின்,
புதற்குப் புலியும் வலியே; புலிக்குப் 
புதலும் வலியாய்விடும். 200
வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின்,
பெரு வாய்த்தாய் நிற்கும், பெரிதும்;-ஒருவாறு 
ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்;
துளி ஈண்டில், வெள்ளம் தரும். 201
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்,
எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. 202
களமர் பலராமனும் கள்ளம் படினும்,
வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளைநெல்
அரிநீர் அணை திறக்கும் ஊர்!-அறுமோ,
நரி நக்கிற்று என்று கடல்? 203
நாடு அறியபபட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து
வாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி,
வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும்,
புலித் தலை நாய் மோத்தல் இல். 204
22. பொருளைப் பெறுதல்
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!-
அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று! 205
மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
இறந்தது பேர்த்து அறிவார் இல். 206
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்,
இமையாது காப்பினும் ஆகா; இமையோரும்
அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையால்,
நல் காப்பின் தீச் சிறையே நன்று. 207
ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,
'நோக்குமின்!' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,-
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!-
காக்கையைக் காப்பு இட்ட சோறு. 208
தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!-
மூரியைத் தீற்றிய புல். 209
முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன்னியல்
மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு. 210
'கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்' என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;-
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!-
கடம் பெற்றான் பெற்றான் குடம். 211
கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, 'தம்மினே' என்றால், தொடங்கிப்
பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும். 212
23. நன்றியில் செல்வம்
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
ஆவதே போன்று கெடும். 213
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு. 214
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,
கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா
வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!-
மரம் குறைப்ப மண்ணா, மயிர். 215
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம். 216
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,
'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு. 217
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை
அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? 218
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்
தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,-
அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,
மீ வேலி போக்குபவர். 219
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,-
இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து. 220
வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல். 221
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்துவிடல். 222
அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால்,
இடையன் எறிந்த மரம். 223
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,
பள்ளியுள் ஐயம் புகல். 224
இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம்,
வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,
பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின்,
நசை கொன்றான் செல் உலகம் இல். 225
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு. 226
24. ஊழ்
எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்!-குறும்பு, இயங்கும்
கோப்புக்குழி, செய்வது இல். 227
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய, கருமம் அதனால்,-
அறிவினை ஊழே அடும். 228
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி,
அறைப் பாய் அருவி அணி மலை நாட!-
உறற்பால யார்க்கும் உறும். 229
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டா விடுதல் அரிது. 230
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை,
ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப்
படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்-
தொடற்பாலார்கண்ணே தொடும். 231
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?-
முதல் இலார்க்கு ஊதியம் இல். 232
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும். 233
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம். 234
'இது மன்னும் தீது' என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும்;-மது மன்னும்
வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!-
தீ நாள் திரு உடையார்க்கு இல். 235
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,
வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;
தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி. 236
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்;
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;-
ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல். 237
'பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை
இன்று ஒறுக்கின்றது' என வறியார், துன்புறுக்கும்
மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!-
ஏவலாள் ஊரும் சுடும். 238
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால்,
செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை,
உயிர் உடையார் எய்தா வினை. 239
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி,
வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!-
ஊழ் அம்பு வீழா, நிலத்து. 240
25. அரசியல்பு
'எம் கண் இனையர்' எனக் கருதின், ஏதமால்;
தங்கண்ணேரானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு. 241
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக் 
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல். 242
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,
இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து
நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம்
நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. 243
பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்
அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,
கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,
வண்டு தாது உண்டுவிடல். 244
பாற்பட்டு வாழ்ப எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டாவாம்
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல். 245
அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறுத்து வாயில் இடல். 246
வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு
படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம். 247
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதும்;
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதார் இல். 248
மறு மனத்தன் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தன் ஆகி ஒழுகின்,-செறு மனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?-
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். 249
அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும்,
செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால்,
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்;
தண் கோல் எடுப்புமாம் மொய். 250
மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!-
மரத்தின் கீழ் ஆகா, மரம். 251
வழிப்பட்டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என்,
மெல்ல கவுள் கொண்ட நீர். 252
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு. 253
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,-
முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என்,
வல்லை, அரசு ஆட்கொளின்? 254
உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை,
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்துவிடல். 255
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், 'உலகு ஆண்டும்!' என்பவர்;
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையுள் கூழ்-மரமே போன்று. 256
பொலந் தார் இராமன் துணையாகப் தான்போந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
போந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல். 257
26. அமைச்சர்
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை. 258
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல். 259
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட 
சுரையாழ் நரம்பறுத் தற்று. 260
நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின்
வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப்
புல்லம் புறம் புல்லுமாறு. 261
மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை
அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து,
ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனில்,
சென்று படுமாம், உயிர். 262
செயல் வேண்டா நல்லன செய்விக்கும்; தீய
செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்-
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,-
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். 263
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவு உடையார் அவ்வியமும் செய்வர்;-வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. 264
தீயன அல்ல செயினும், திறல் வேந்தன்
காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும்
புலி முன்னம் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே,
வலி முன்னர் வைப் பாரம் இல். 265


15. நட்பில் விலக்கு
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்,எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பராய்எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும்,உண்ணும் துணைக் காக்கும், கூற்று. 135
'எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப் பட்டவர்உற்றுழி ஒன்றுக்கு உதவலர்- பைத்தொடீஇ!அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,மச்சு ஏற்றி, ஏணி களைவு. 136
பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத்தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே-கழி விழாத் தோள் ஏற்றுவார். 137
'இடையீடு உடையார் இவர் அவரோடு' என்று,தலையாயார் ஆராய்ந்தும் காணார்; கடையாயர்முன் நின்று கூறும் குறளை தெரிதலால்,-பின் இன்னா, பேதையார் நட்பு. 138
தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால்,நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆயினென்,-மான் மானும் கண்னால் மறந்தும் பரியலராகானகத்து உக்க நிலா. 139
கண்டு அறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேபோல்,விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ,விண்டற்கு விண்டல் மருந்து. 140
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று,திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே,இரு தலைக் கொள்ளி என்பார். 141

16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல்
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமைஓர் மூழையாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும்கண்டது காரணமாம் ஆறு. 142
'யாம் தீய செய்த மலை மறைத்தது' என்று எண்ணி,தாம் தீயார் தம் தீமை தேற்றாராய் ;-ஆம்பல்மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!கணையிலும் கூரியவாம் கண். 143
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு; அஃதேபோல்,கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;-ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம்படர்ந்ததே கூறும், முகம். 144
நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடிநோக்கி, அறிய அதுவேபோல் - நோக்கி,முகன் அறிவார் முன்னம் அறிய; அதுவே,மகன் அறிவு தந்தை அறிவு. 145
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்தேரும் திறம் அரிதால்;-தேமொழி-ஆரும்குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,புலப் புல வண்ணத்த, புள். 146
காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,'மேய்ப்பு ஆட்டது' என்று உண்ணாள் ஆயினாள்-தீப் புகைபோல்மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே,தம் சாதி மிக்குவிடும். 147
முயலவோ வேண்டா; முனிவரையானும்இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!-கயல் இகல் உண் கண்ணாய்!-கரியரோ வேண்டா;அயல் அறியா அட்டூணோ இல். 148

17. முயற்சி
'எமக்குத் துணையாவார்?' வேண்டும் என்று எண்ணி,தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ ? இல்லை;-தமக்கு மருத்துவர் தாம். 149
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தைஅற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையோனே ஆயினும்,மூத்தானே, ஆடு மகன். 150
வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்துவாள் ஆண்மையாலும் வலியராய், தாளாண்மைதாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்வாழ்க்கை திருந்துதல் இன்று. 151
'ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்'என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது,சென்றது, பேரா தவர். 152
'இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?தனியேம் யாம்!' என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;முனிவு இலராகி முயல்க!-முனிவில்லார்முன்னியது எய்தாமை இல். 153
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,யாதானும் ஆகிவிடும். 154
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்குமுடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்புஅடி இழுப்பின், இல்லை, அரண். 155
'எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை' என்று, ஒருவர்தங்கண் அழிவு தாம் செய்யற்க!- எங்கானும்நன்கு திரண்டு பெரயவாம், ஆற்றவும்முன் கை நெடியார்க்குத் தோள். 156
நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,உலக்கைமேல் காக்கை என்பார். 157
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக்கொண்டு,கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடிமிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிதுஉக்கு ஓடிக் காட்டிவிடும். 158
தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கல்லார்,'பின்னை, ஒருவரால் செய்வித்தும்' என்று இருத்தல்,-செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ,வெந்நீரும் ஆடாதார் தீ. 159
'முழுதுடன் முன்னே வகுத்தவன்' என்று,தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ, அல்லல்-இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்எழுதினான் ஓலை பழுது. 160
முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாதுஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அறவல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள்இல்லதற்கு இல்லை, பெயர். 161

18. கருமம் முடித்தல்
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்,பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே-வெந் நீரில் தண்ணீர் தெளித்து. 162
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப் பட்டாரைத்தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்பமுன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-உண் ஓட்டு அகல் உடைப்பார். 163
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்உரையின் வழுவாது உவப்பவே கொள்க!-வரையக நாட!-விரைவிற், கருமம் சிதையும்; இடர் ஆய்விடும். 164
'நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்' என்று, ஒன்றுஉளைய உரையாது, உறுதியே கொள்க!-வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து,தொளை எண்ணார், அப்பம் தின்பார். 165
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது-கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்,அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. 166
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்முடியாத வாறே முயலும்;-கொடி அன்னாய்!-பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,மூரி உழுது விடல். 167
ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றாண்டும்பாணித்தே செய்ய, வியங்கொள்ளின் - காணிபயவாமல் செய்வார் ஆர்? தம் சாகாடேனும்உயவாமல் சேறலோ இல். 168
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,முட்டாது அவரை வியங்கொளல் வேண்டுமால்தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,தட்டாமல் செல்லாது, உளி. 169
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, 'அவர்ஆக்குவர் ஆற்ற எமக்கு!' என்று அமர்ந்து இருத்தல்,-மாப்புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக்காப்பிடுதல், புன் மீன் தலை. 170
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லாமுற்றலை நாடிக் கருமம் செய வையார்கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,மற்றதன்பால் தேம்பல் நன்று. 171
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,-இழவு அன்று, எருது உண்ட உப்பு. 172
கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின்,பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!-தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே,அட்டாரை ஒட்டாக் கலம். 173
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,'காட்டி, களைதும்' என வேண்டா;-ஓட்டிஇடம்பட்ட கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டைஉடம்படுத்து வேள்வு உண்டார் இல். 174
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து,நினைத்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,'நனைந்து வா' என்று விடல். 175
உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம்,புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்-நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு,கரை இருந்தார்க்கு எளிய, போர். 176

19. மறை பிறர் அறியாமை
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரைஅற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும்,சீர்ந்தது செய்யாதார் இல். 177
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் - தெள்ளி,மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்பறைக்கண் கடிப்பு இடுமாறு. 178
அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையைமுன் பிறர்க்கு ஓடி மொழியற்க! - தின்குறுவான்கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு,புல்வாய் வழிப்படுவார் இல். 179
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டதுஉயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;-புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர்கயவர்க்கு உரையார், மறை. 180
பெரு மலை நாட!-பிறர் அறியலாகாஅரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையைநெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. 181
விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்முறிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;-அளிந்தார்கண் ஆயினும், ஆராயான் ஆகித்தெளிந்தான் விரைந்து கெடும். 182

20. தெரிந்து தெளிதல்
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,தா அம் தர வாரா நோய். 183
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?-கற்பால் கலங்கு அருவி நாட!-மற்று யாரானும்சொல் சோரா தாரோ இலர். 184
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்குவேந்தர் வினாயினான், மாந்தரை - சான்றவன்,கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின்கண்டதூஉம் எண்ணிச் சொலல்! 185
ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,இருவரிடை நட்பான் புக்கால், பெரியவெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்குறுக் கண்ணி ஆகிவிடும். 186
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,தினைத் துணையேயானும் அணிக் கோடல் நன்றேஇனக் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப!பனைப் பதித்து, உண்ணார் பழம். 187
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!இனம் கழு ஏற்றினார் இல். 188
கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தோடுபேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே-நீர் குறிதாகப் புகல். 189
சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார்,பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம்இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்,கிடப்புழியும் பெற்றுவிடும். 190
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?-புன் சொல் இடர்படுப்பது அல்லால், ஒருவனைஇன் சொல் இடர்ப்படுப்பது இல். 191
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,பொய்ந் நீரர் ஆகிய பொருளை முடிப்பார்க்கும்,எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர்தம் நீரர் ஆதல் தலை. 192
யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவைபடத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான்குடத்துள்ளும் நாடிவிடும். 193
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,-அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி,மயில் போலும் கள்வர் உடைத்து. 194
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாதுநில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதேஓடுக, ஊர் ஓடுமாறு! 195

21. பொருள்
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்குஆணியின் குத்தே வலிது. 196
ஒல்லாது வின்றி, உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்குஇடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!-கடலுள்ளும் காண்பவே, நன்கு. 197
அருமையுடைய பொருள் உடையார், தங்கண்கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல்நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு,தேரை வழிச் சென்றார் இல். 198
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;-பொரு படைக் கண்ணாய்!-அதுவே, திரு உடையார்பண்டம் இருவர் கொளல். 199
உடையதனைக் காப்பான் உடையான்; அதுவேஉடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின்,புதற்குப் புலியும் வலியே; புலிக்குப் புதலும் வலியாய்விடும். 200
வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின்,பெரு வாய்த்தாய் நிற்கும், பெரிதும்;-ஒருவாறு ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்;துளி ஈண்டில், வெள்ளம் தரும். 201
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்,எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாதுஅழுங்கல் முது பதி அங்காடி மேயும்பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. 202
களமர் பலராமனும் கள்ளம் படினும்,வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளைநெல்அரிநீர் அணை திறக்கும் ஊர்!-அறுமோ,நரி நக்கிற்று என்று கடல்? 203
நாடு அறியபபட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்துவாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி,வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும்,புலித் தலை நாய் மோத்தல் இல். 204

22. பொருளைப் பெறுதல்
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!-அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி,நந்து, நீர் கொண்டதே போன்று! 205
மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-இறந்தது பேர்த்து அறிவார் இல். 206
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்,இமையாது காப்பினும் ஆகா; இமையோரும்அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையால்,நல் காப்பின் தீச் சிறையே நன்று. 207
ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,'நோக்குமின்!' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,-போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!-காக்கையைக் காப்பு இட்ட சோறு. 208
தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக்குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல்வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!-மூரியைத் தீற்றிய புல். 209
முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன்னியல்மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல்வைத்து, மயில் கொள்ளுமாறு. 210
'கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்' என்பார்மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;-மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!-கடம் பெற்றான் பெற்றான் குடம். 211
கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்இடம் கொண்டு, 'தம்மினே' என்றால், தொடங்கிப்பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,நகை மேலும் கைப்பாய் விடும். 212

23. நன்றியில் செல்வம்
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தைநல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயனஆவதே போன்று கெடும். 213
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத்தன்மேல் குணில் கொள்ளுமாறு. 214
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றாவரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!-மரம் குறைப்ப மண்ணா, மயிர். 215
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்றமுழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவிவேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,நாய் பெற்ற தெங்கம்பழம். 216
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,அழகொடு கண்ணின் இழவு. 217
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடையமாவினை மாணப் பொதிகிற்பார், தீவினைஅஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? 218
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,-அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,மீ வேலி போக்குபவர். 219
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,-இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக்கரும் பனை அன்னது உடைத்து. 220
வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவேபழஞ் செய் போர்பு ஈன்று விடல். 221
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப்புல் கழுத்தில் யாத்துவிடல். 222
அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்றுஅடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால்,இடையன் எறிந்த மரம். 223
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்றுஇரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல்வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,பள்ளியுள் ஐயம் புகல். 224
இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம்,வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின்,நசை கொன்றான் செல் உலகம் இல். 225
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரைநீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்குஈத்ததை எல்லாம் இழவு. 226

24. ஊழ்
எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை,தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்!-குறும்பு, இயங்கும்கோப்புக்குழி, செய்வது இல். 227
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,பட்ட விருத்தம் பலவானால், பட்டபொறியின் வகைய, கருமம் அதனால்,-அறிவினை ஊழே அடும். 228
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி,அறைப் பாய் அருவி அணி மலை நாட!-உறற்பால யார்க்கும் உறும். 229
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்விழுமியோன் மேற்சென்றதனால், விழுமியவேண்டினும், வேண்டாவிடினும், உறற்பாலதீண்டா விடுதல் அரிது. 230
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை,ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப்படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்-தொடற்பாலார்கண்ணே தொடும். 231
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடுஇகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?-முதல் இலார்க்கு ஊதியம் இல். 232
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கைநல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்தொகற்பால போழ்தே தொகும். 233
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள்பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே,உய்வதற்கு உய்யா இடம். 234
'இது மன்னும் தீது' என்று இயைந்ததூஉம், ஆவார்க்குஅது மன்னும் நல்லதே ஆகும்;-மது மன்னும்வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!-தீ நாள் திரு உடையார்க்கு இல். 235
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச்சோற்றுள்ளும் வீழும் கறி. 236
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்;போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;-ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும்,ஆகாதார்க்கு ஆகுவது இல். 237
'பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மைஇன்று ஒறுக்கின்றது' என வறியார், துன்புறுக்கும்மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!-ஏவலாள் ஊரும் சுடும். 238
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால்,செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை,உயிர் உடையார் எய்தா வினை. 239
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி,வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!-ஊழ் அம்பு வீழா, நிலத்து. 240

25. அரசியல்பு
'எம் கண் இனையர்' எனக் கருதின், ஏதமால்;தங்கண்ணேரானும் தகவு இல கண்டக்கால்,வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லாமென்கண்ணன் ஆளான், அரசு. 241
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,காலை கழிந்ததன் பின்றையும், மேலைக் கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-முறைமைக்கு மூப்பு இளமை இல். 242
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்துநேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம்நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. 243
பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,வண்டு தாது உண்டுவிடல். 244
பாற்பட்டு வாழ்ப எனினும், குடிகள்மேல்மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டாவாம்கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,பால் தலைப் பால் ஊறல் இல். 245
அடைய அடைந்தாரை அல்லவை செய்து,கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,சூட்டு அறுத்து வாயில் இடல். 246
வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும்செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்குபடு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானைதொடு உண்ணின், மூடும் கலம். 247
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதும்;துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,எளியாரை எள்ளாதார் இல். 248
மறு மனத்தன் அல்லாத மா நலத்த வேந்தன்உறு மனத்தன் ஆகி ஒழுகின்,-செறு மனத்தார்பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?-ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். 249
அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும்,செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால்,வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்;தண் கோல் எடுப்புமாம் மொய். 250
மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப்பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!-மரத்தின் கீழ் ஆகா, மரம். 251
வழிப்பட்டவரை வலியராச் செய்தார்அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்கபையமர் மாலைப் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என்,மெல்ல கவுள் கொண்ட நீர். 252
தலைமை கருதும் தகையாரை வேந்தன்நிலைமையால் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்பாம்பொடு உடன் உறையுமாறு. 253
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்துமாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,-முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என்,வல்லை, அரசு ஆட்கொளின்? 254
உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை,அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின்ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக்கொள்ளி கொடுத்துவிடல். 255
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,ஒல்லை வெகுளார், 'உலகு ஆண்டும்!' என்பவர்;சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,கொல்லையுள் கூழ்-மரமே போன்று. 256
பொலந் தார் இராமன் துணையாகப் தான்போந்து,இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கேபோந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்சார்ந்து கெழீஇயிலார் இல். 257

26. அமைச்சர்
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்மலைப் பெயல் காட்டும் துணை. 258
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமைபயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்!-செய்தானைஒவ்வாத பாவையோ இல். 259
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்மரையா துணைபயிரும் மாமலை நாட சுரையாழ் நரம்பறுத் தற்று. 260
நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும்நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின்வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப்புல்லம் புறம் புல்லுமாறு. 261
மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கைஅனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து,ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனில்,சென்று படுமாம், உயிர். 262
செயல் வேண்டா நல்லன செய்விக்கும்; தீயசெயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்-தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,-முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். 263
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வியல பெற்றால்அறிவு உடையார் அவ்வியமும் செய்வர்;-வறிது உரைத்து,பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. 264
தீயன அல்ல செயினும், திறல் வேந்தன்காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும்புலி முன்னம் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே,வலி முன்னர் வைப் பாரம் இல். 265

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.