LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு-3

 

27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல். 266
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டல், 'யாம் ஒன்றும்
பெற்றிலேம்' என்பது பேதைமையே; மற்று அதனை
எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
'செய்க!' என்றான், 'உண்க!' என்னுமாறு. 267
'எமர் இது செய்க, எமக்கு!' என்று, வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு
வேலின்வாய் ஆயினும்,வீழார்; மறுத்து உரைப்பின்,-
'ஆல்' என்னின் 'பூல்' என்னுமாறு. 268
விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது,
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,-
மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!-
கடல் படா எல்லாம் படும். 269
உவப்ப உடனபடுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தால்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின்,
தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். 270
செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தார்,
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?-
உருத்த சுணங்கின் ஒளியிழாய்!-கூரிது,
எருத்து வலியநன் கொம்பு. 271
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த
நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும். 272
ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!-
பூண்டாங்கு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும். 273
காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன்
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்-
ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப,
தாய் அணல் தான் சுவைத்தற்று. 274
சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை;
விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்,
புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். 275
இடு குடைத் தேர் மன்னர், 'எமக்கு அமையும்' என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு,
முடிதல் எனைத்தும் உணரா முயறல்,-
கடிய கனைத்துவிடல். 276
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்,
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும்,
இளைத்து அன்று பாம்பு இகழ்வார் இல். 277
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவே
எருத்திடை வைக்கோல் தினல். 278
பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,
இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்
பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத்
தன் நாரால் யாத்துவிடல். 279
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்,
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி,
பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர்,
தம் மேலே வீழப் பனை. 280
வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,
நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;-
என் செய்து அகப்பட்டக் கண்ணும், எடுப்புபவோ,
துஞ்சு புலியைத் துயில்? 281
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?-
ஆமா உகளும் அணி வரை வெற்ப!-கேள்;
ஏமாரார் கோங்கு ஏறினார். 282
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்,
பொறாஅன் போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு. 283
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,
ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்-
ஆடு பணைப் பொய்க் காலே போன்று. 284
28. பகைத்திறம் தெரிதல்
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?-
மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண். 285
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது எதிர்த்து,
நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீரத்
தனி மரம் காடு ஆவது இல். 286
'முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தோரைப்
பின் நலிதும்' என்று இருத்தல் பேதைமையே; பின் சென்று,-
காம்பு அன்ன தோளி!-கடிதிற் கடித்து ஓடும்
பாம்பின் பல் கொள்வாரோ இல். 287
நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையும்
வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,-
கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால்,
அடி கெட மன்றி விடல். 288
தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்
சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக் கண்ணும்
உவர் நிலம் உட்கொதிக்குமாறு. 289
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை,
'அகம் புகுதும்!' என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்
ஒக்கலை வேண்டி அழல். 290
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க!
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும், கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல். 291
பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா,
சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின்,
தீ நாய் எடுப்புமாம் எண்கு. 292
இகலின் வலியாரை எள்ளி, எளியார்,
இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய்,
என் செய்தே ஆயினும் உய்ந் தீக!-சாவாதான்
முன்கை வளையும் தொடும். 293
வென்று அடுகிற்பாரை வெப்பித்து, அவர் காய்வது
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்-
குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று. 294
'உரைத்தவர் நாவோ பருந்து எறியாது' என்று,
சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால்,
இழைத்தது இகவாதவரைக் கனற்றி,
பலிப் புறத்து உண்பர் உணா. 295
தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,
கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டு ஒழுகல் வேண்டா;-
பழம் பகை நட்பு ஆதல் இல். 296
வெள்ளம் பகை யெனினும், வேறு இடத்தார் செய்வது என்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு-
புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ,
அள் இல்லத்து உண்ட தனிசு. 297
இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,
தம்மைப் பிரியார் தமரா அடைந்தாரின்,
செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?-
மைம்மைப்பின் நன்று, குருடு. 298
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,-
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே,
அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. 299
வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார்,
புன் பாட்டவர் பகை கோடல் பயன் இன்றே;-
கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!-
வெண் பாட்டம் வெள்ளம் தரும். 300
வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,
வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,
பொறுவரு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால்,
உருவு திரு ஊட்டுமாறு. 301
வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி,
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,-
புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!-
வலி அலாம் தாக்கு வலிது. 302
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல். 303
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்
பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,
நாய் பின்னதாகத் தகர். 304
யானும் மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,
ஈனம் செயக் கிடந்தது இல் என்று, கூனல்
படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே-
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. 305
இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே
அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால்
கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே
சிறு குரங்கின் கையால் துழா. 306
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால், மற்றவர்க்கு
ஆற்றும் பகையால் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டுவிடும். 307
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,
முள்ளினால் முள் களையும் ஆறு. 308
நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்,
மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,-
பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!-
ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. 309
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல்,
அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால்
நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால்,
ஒடி எறியத் தீரா, பகை. 310
29. படைவீரர்
தூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர். 311
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். 312
ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து,
ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள்
வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமைச் சாக்காடு எழல். 313
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,
'போர் ஏற்றும்' என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?
யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,
ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. 314
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,
தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க!-களிப்பினும்
சோரப் பொதியாத வாறு. 315
உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்
பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. 316
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும்,
நிகர் அன்றிமேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ,
கல்லொடு கை எறியுமாறு. 317
'வரை புரை வேழத்த, வன் பகை' என்று அஞ்சா
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!-
திரை அவித்து, ஆடார் கடல். 318
காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,
பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல். 319
இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும்,
அஞ்சி அகப்படுவார், ஆற்றாதார்;-அஞ்சி
இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள்
இருளின் இருந்தும் வெளி. 320
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே-
கருக்கினால் கூறை கொள்வார். 321
'அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்' என்று,
தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே-
மகன் மறையாத் தாய் வாழுமாறு. 322
உறுகண் பலவும் உணராமை கந்தா,
தறுகண்மை ஆகாதாம் பேதை, 'தறுகண்
பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது' என்று எண்ணி,
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. 323
தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாதான்,
என்ன குறையன், இளையரால்?-மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால். 324
கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று. 325
இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
'தருக!' என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். 326
30. இல்வாழ்க்கை
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய
ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!-
வித்து இன்றிச் சம்பிரதம் இல். 327
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு,
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து. 328
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்,
புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை
உண்டி வினவுவார் இல். 329
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து
இடர் இன்றி ஏமாந்திருந்தாரே, நாளும்
கடலுள் துலாம் பண்ணினார். 330
எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச்
செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி-
மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும்,
தான் செய்த பாவை தனக்கு. 331
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு. 332
தொடித் தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது. 333
விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும்; தொழுதையுள்,
மாலையும் மாலை மறுக்குறுத்தாள்;-அஃதால், 
சால்பினைச் சால்பு அறுக்குமாறு. 334
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,
தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்
ஊர் மிகின், இல்லை, கரியோ;-ஒலித்து உடன்
நீர் மிகின், இல்லை, சிறை. 335
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ-
வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல். 336
நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,
செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா, ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி
குறங்கு அறுப்பச் சோரும் குடர். 337
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன
கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்
ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு. 338
தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;
செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே-
நுகத்துப் பகல் ஆணி போன்று. 339
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,
கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;
'நிலைப் பொருள்' என்று அதனை நீட்டித்தல் வேண்டா;-
புலைப் பொருள் தங்கா, வெளி. 340
நன்றே, ஒருவர்த் துணையுடைமை; பாப்பு இடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும்
குன்றகல் நல் நாட!-கூறுங்கால், இல்லையே,
ஒன்றுக்கு உதவாத ஒன்று. 341
விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி,
கற்று அடியுள் ஆழ்ந்துவிடல். 342
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,
அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்
உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார்,
தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். 343
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல். 344
'தமன்' என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்,
'நமன்' என்று, காயினும், தான் காயான், மன்னே,
'அவன் இவன்' என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே,
நம நெய்யை நக்குபவர்? 345
நாடி, 'நமர்' என்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல்,-கிளர் மணி
நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த
கோடு குறைத்து விடல். 346
'பண்டு இன்னார்' என்று தமரையும், தம்மையும்,
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்,
விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ,
உண்ட இல் தீ இடுமாறு. 347
31. உறவினர்
தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?-
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!-
உமிக் குற்றுக் கை வருந்துமாறு. 348
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். 349
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல
வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே
மனை மரம் ஆய மருந்து. 350
மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?-
மை ஆர் இருங்கூந்தல் பைந்தொடி!-எக்காலும்
செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம்,
பெய்யாது எனினும், மழை. 351
முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால்,
பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;
பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!-
துன்னினார் அல்லர், பிறர். 352
உளைய உரைத்து விடினும், உறுதி
கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள்
பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!-
தாய் மிதித்த ஆகா முடம். 353
தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால்,
என்ன படினும், அவர் செய்வ செய்வதே;-
இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி
போம் வழிப் போகும், இழை. 354
கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ, துன்பம்;-
பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல்
திருவொடும் இன்னாது, துச்சு. 355
பாரதத் துள்ளும், பணையம் தம் தாயமா,
ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு
ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால்,
காதலரொடு ஆடார் கவறு. 356
32. அறம் செய்தல்
சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே,
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. 357
வைத்தனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்யின்-அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது. 358
மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல்,
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல். 359
ஈனுலகத்துஆயின், இசை பெறு஡உம்; அஃது இறந்து,
ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி. 360
மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை
ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,
நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,
நாய் காணின் கல் காணாவாறு. 361
தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அது ஆனால்,
'மிக்க வகையால் அறம் செய்!' என, வெகுடல்,-
அக்காரம் பால் செருக்குமாறு. 362
உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்-
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல். 363
அறம் செய்பவர்க்கும், அறவுழி நோக்கி,
திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;-
புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய,
அல்லவை நீங்கி விடும். 364
தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால்,
ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி,
அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து,
துஞ்சு வருமே, துயக்கு! 365
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம்,
முட்டு உடைத்தாகி, இடை தவிர்ந்து வீழ்தலின்,
நட்டு அறான் ஆதலே நன்று. 366
பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச்
சில நாள் சிறந்தவற்றால் செய்க!-கலை தாங்கி
நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம்
செய்வது செய்யாது, கேள். 367
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்,
நோக்கப் படினும், உணங்கலைப் புள் கவரும்;-
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண் பொருட்கும்
காப்பாரின் பார்ப்பார் மிகும். 368
இன்றி அமையா இரு முது மக்களைப்
பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்
குன்று, வழி அடுப்பது இல். 369
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்-
முயல் விட்டுக் காக்கை தினல். 370
இம்மைத் தவமும், அறமும், என இரண்டும்,
தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்,
இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும்,
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. 371
33. ஈகை
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருது வாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர். 372
கரப்புடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
சுரத்திடைப் பெய்த பெயல். 373
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே
வளம் நெடிது கொண்து அறாஅது;-அறுமோ,
குளம் நெடிது கொண்டது நீர்? 374
'நினைத்தது இது' என்று, அந் நீர்மையை நோக்கி,
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!-
கடிஞையில் கல் இடுவார் இல். 375
கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;-
வாய்ப்பத் தான் வாடியக் கண்ணும், பெருங் குதிரை,
யாப்புள், வேறு ஆகிவிடும். 376
அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தாரை, கொண்டார்,
படுத்து, 'ஏழையாம்!' என்று போகினும் போக!-
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும்
கொடுத்து, ஏழை ஆயினார் இல். 377
'இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்' என்று எண்ணி,
கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
இறைத்தோறும் ஊறும் கிணறு. 378
'இரவலர் தம் வரிசை' என்பார், மடவார்
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-
நீர் வரையவாம் நீர் மலர். 379
தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர,
'அடுத்தர' என்றாற்கு, 'வாழியரோ!' என்றான்;
தொடுத்து, 'இன்னர்' என்னலோ வேண்டா;-கொடுப்பவர்
தாம் அறிவார், தம் சீர் அளவு. 380
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்,
பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள்
பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;-
ஒன்று உறா முன்றிலோ இல். 381
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய
மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை
மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?-
பெண் பெற்றான் அஞ்சான், இழவு. 382
பயன் நோக்காது, ஆற்றவும் பார்த்து அறிவு ஒன்று இன்றி,
இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!-
கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு. 383
மறாஅ தவனும், பலர் ஒன்று இரந்தால்,
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
இரந்து ஊட்குப் பன்மையோ தீது. 384
தோற்றம் பெரிய நசையினார், அந் நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றுள்
கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால்,
உயவுநெய்யுள் குளிக்குமாறு. 385
காப்பு இகந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்
கோப் பரியான் கொள்ளக், கொடுத்து இராது என் செய்வர்?
நீத்த பெரியார்க்கே ஆயினும், மிக்கவை
மேவின், பரிகாரம் இல். 386
34. வீட்டு நெறி
எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை. 387
அடங்கி, அகப்பட்ட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே-
கொல்லிமேல் கொட்டு வைத்தார். 388
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் துடியிடை யார்ப் படர்ந்து, ஒட்டித்
தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்? 389
இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார்,
நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியாதவரே-
இரு தலையும் காக் கழித்தார். 390
வளமையும், தேசும், வலியும், வனப்பும்,
இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா,
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல். 391
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது
கும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும். 392
செல்வத் துணையும், தம் வாழ்நாள் துணையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,-
முள்ளித் தேன் உண்ணுமவர். 393
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவை
என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!
இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே
பல் கட்டு, அப் பெண்டிர், மகார். 394
சிறந்த தம் மக்களும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடரப்பாடு எவன் கொல்,-கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு. 395
எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட
வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும்,
கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே,
குழிப் புழி ஆற்றா குழிக்கு. 396
திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக
எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால்,
சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்,
நீர் அற, நீர்ச் சார்வு அறும். 397
ஓத நீர் வேலி உலகத்தார், 'அந் நெறி
காதலர்' என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்-
கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும். 398
பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார்,
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க!
வரம்பு இல் பெருமை தருமே;-பரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும். 399
மிகைப்பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை,
இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,-
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.
(புறத்திரட்டு -146) 1
'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது
இமையத்து அனையார்கண் இல்லை;-சிமைய
நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட!
நகையேதான் ஆற்றுவிடும். 
(புறத்திரட்டு - 1107) 2
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து? 
(புறத்திரட்டு - 1139) 3
பழமொழி நானூறு முற்றிற்று.

27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையைமடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்குடித்துக் குழைவாரோ இல். 266
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டல், 'யாம் ஒன்றும்பெற்றிலேம்' என்பது பேதைமையே; மற்று அதனைஎவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,'செய்க!' என்றான், 'உண்க!' என்னுமாறு. 267
'எமர் இது செய்க, எமக்கு!' என்று, வேந்தன்தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்குவேலின்வாய் ஆயினும்,வீழார்; மறுத்து உரைப்பின்,-'ஆல்' என்னின் 'பூல்' என்னுமாறு. 268
விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது,உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,-மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!-கடல் படா எல்லாம் படும். 269
உவப்ப உடனபடுத்தற்கு ஏய கருமம்அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தால்,வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின்,தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். 270
செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தார்,ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?-உருத்த சுணங்கின் ஒளியிழாய்!-கூரிது,எருத்து வலியநன் கொம்பு. 271
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனைமாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்தநல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்தகலமே நெய் பெய்துவிடும். 272
ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!-பூண்டாங்கு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமைவேண்டியது எல்லாம் தரும். 273
காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன்ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்-ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப,தாய் அணல் தான் சுவைத்தற்று. 274
சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை;விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்,புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். 275
இடு குடைத் தேர் மன்னர், 'எமக்கு அமையும்' என்று,கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு,முடிதல் எனைத்தும் உணரா முயறல்,-கடிய கனைத்துவிடல். 276
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்,நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்தகிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும்,இளைத்து அன்று பாம்பு இகழ்வார் இல். 277
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவேஎருத்திடை வைக்கோல் தினல். 278
பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத்தன் நாரால் யாத்துவிடல். 279
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்,கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி,பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர்,தம் மேலே வீழப் பனை. 280
வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;-என் செய்து அகப்பட்டக் கண்ணும், எடுப்புபவோ,துஞ்சு புலியைத் துயில்? 281
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?-ஆமா உகளும் அணி வரை வெற்ப!-கேள்;ஏமாரார் கோங்கு ஏறினார். 282
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்,பொறாஅன் போல, பொறுத்தால், பொறாஅமைமேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ,கூன்மேல் எழுந்த குரு. 283
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்-ஆடு பணைப் பொய்க் காலே போன்று. 284

28. பகைத்திறம் தெரிதல்
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?-மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும்அஞ்சுவார்க்கு இல்லை, அரண். 285
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தேகதித்துக் களையின் முதிராது எதிர்த்து,நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீரத்தனி மரம் காடு ஆவது இல். 286
'முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தோரைப்பின் நலிதும்' என்று இருத்தல் பேதைமையே; பின் சென்று,-காம்பு அன்ன தோளி!-கடிதிற் கடித்து ஓடும்பாம்பின் பல் கொள்வாரோ இல். 287
நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையும்வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,-கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால்,அடி கெட மன்றி விடல். 288
தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும்அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக் கண்ணும்உவர் நிலம் உட்கொதிக்குமாறு. 289
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை,'அகம் புகுதும்!' என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத்தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்ஒக்கலை வேண்டி அழல். 290
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க!போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டான்நோற்ற பெருமை உடையாரும், கூற்றம்புறம் கொம்மை கொட்டினார் இல். 291
பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா,சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்குஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின்,தீ நாய் எடுப்புமாம் எண்கு. 292
இகலின் வலியாரை எள்ளி, எளியார்,இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய்,என் செய்தே ஆயினும் உய்ந் தீக!-சாவாதான்முன்கை வளையும் தொடும். 293
வென்று அடுகிற்பாரை வெப்பித்து, அவர் காய்வதுஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்-குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும்நன்றொடு வந்தது ஒன்று அன்று. 294
'உரைத்தவர் நாவோ பருந்து எறியாது' என்று,சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால்,இழைத்தது இகவாதவரைக் கனற்றி,பலிப் புறத்து உண்பர் உணா. 295
தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றால்விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டு ஒழுகல் வேண்டா;-பழம் பகை நட்பு ஆதல் இல். 296
வெள்ளம் பகை யெனினும், வேறு இடத்தார் செய்வது என்?கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு-புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ,அள் இல்லத்து உண்ட தனிசு. 297
இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,தம்மைப் பிரியார் தமரா அடைந்தாரின்,செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?-மைம்மைப்பின் நன்று, குருடு. 298
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும்,இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,-விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே,அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. 299
வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார்,புன் பாட்டவர் பகை கோடல் பயன் இன்றே;-கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!-வெண் பாட்டம் வெள்ளம் தரும். 300
வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,பொறுவரு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால்,உருவு திரு ஊட்டுமாறு. 301
வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி,மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,-புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!-வலி அலாம் தாக்கு வலிது. 302
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்பன்மையின் பாடு உடையது இல். 303
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம்வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,நாய் பின்னதாகத் தகர். 304
யானும் மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,ஈனம் செயக் கிடந்தது இல் என்று, கூனல்படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே-இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. 305
இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னேஅயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால்கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவேசிறு குரங்கின் கையால் துழா. 306
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால், மற்றவர்க்குஆற்றும் பகையால் அவர்க் களைய வேண்டுமே,வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான்நூற்றுவரைக் கொண்டுவிடும். 307
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்குஉள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,முள்ளினால் முள் களையும் ஆறு. 308
நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்,மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,-பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!-ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. 309
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல்,அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால்நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால்,ஒடி எறியத் தீரா, பகை. 310

29. படைவீரர்
தூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத்தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்யாப்பினுள் அட்டிய நீர். 311
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்றமுரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். 312
ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து,ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள்வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்எழாஅமைச் சாக்காடு எழல். 313
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,'போர் ஏற்றும்' என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. 314
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம்வீரம் சொல்லாமையே வீழ்க!-களிப்பினும்சோரப் பொதியாத வாறு. 315
உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லிநெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. 316
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும்,நிகர் அன்றிமேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றிவில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ,கல்லொடு கை எறியுமாறு. 317
'வரை புரை வேழத்த, வன் பகை' என்று அஞ்சாஉரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!-திரை அவித்து, ஆடார் கடல். 318
காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள்சேப்பிலைக்குக் கூர்த்து விடல். 319
இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும்,அஞ்சி அகப்படுவார், ஆற்றாதார்;-அஞ்சிஇருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள்இருளின் இருந்தும் வெளி. 320
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போல,தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே-கருக்கினால் கூறை கொள்வார். 321
'அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்' என்று,தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே-மகன் மறையாத் தாய் வாழுமாறு. 322
உறுகண் பலவும் உணராமை கந்தா,தறுகண்மை ஆகாதாம் பேதை, 'தறுகண்பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது' என்று எண்ணி,அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. 323
தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாதான்,என்ன குறையன், இளையரால்?-மன்னும்புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,எலி இல்வழிப் பெறா, பால். 324
கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர்உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்படையின், படைத் தகைமை நன்று. 325
இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,'தருக!' என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். 326

30. இல்வாழ்க்கை
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவியஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!-வித்து இன்றிச் சம்பிரதம் இல். 327
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு,பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின்,பாம்பு காண்பாரும் உடைத்து. 328
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்,புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும்படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரைஉண்டி வினவுவார் இல். 329
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்துஇடர் இன்றி ஏமாந்திருந்தாரே, நாளும்கடலுள் துலாம் பண்ணினார். 330
எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச்செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி-மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும்,தான் செய்த பாவை தனக்கு. 331
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்குமக்களுள் பக்கமோ வேறு. 332
தொடித் தோள் மடவார் மருமந்தன் ஆகம்மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில்ஆர்க்கும் எடுப்பல் அரிது. 333
விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்கெழுமிய நாணை மறைக்கும்; தொழுதையுள்,மாலையும் மாலை மறுக்குறுத்தாள்;-அஃதால், சால்பினைச் சால்பு அறுக்குமாறு. 334
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்ஊர் மிகின், இல்லை, கரியோ;-ஒலித்து உடன்நீர் மிகின், இல்லை, சிறை. 335
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ-வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்திருந்துதல் என்றுமோ இல். 336
நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா, ஒல்வதுஇறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவிகுறங்கு அறுப்பச் சோரும் குடர். 337
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்னகொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர்காயக்கு உலோபிக்குமாறு. 338
தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே-நுகத்துப் பகல் ஆணி போன்று. 339
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;'நிலைப் பொருள்' என்று அதனை நீட்டித்தல் வேண்டா;-புலைப் பொருள் தங்கா, வெளி. 340
நன்றே, ஒருவர்த் துணையுடைமை; பாப்பு இடுக்கண்நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும்குன்றகல் நல் நாட!-கூறுங்கால், இல்லையே,ஒன்றுக்கு உதவாத ஒன்று. 341
விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி,கற்று அடியுள் ஆழ்ந்துவிடல். 342
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார்,தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். 343
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்குஎன்றும் உறுதியே சூழ்க!-எறி திரைசென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும்,ஒன்று இரண்டாம் வாணிகம் இல். 344
'தமன்' என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்,'நமன்' என்று, காயினும், தான் காயான், மன்னே,'அவன் இவன்' என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே,நம நெய்யை நக்குபவர்? 345
நாடி, 'நமர்' என்று நன்கு புரந்தாரைக்கேடு பிறரோடு சூழ்தல்,-கிளர் மணிநீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்தகோடு குறைத்து விடல். 346
'பண்டு இன்னார்' என்று தமரையும், தம்மையும்,கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்,விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ,உண்ட இல் தீ இடுமாறு. 347

31. உறவினர்
தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றதுஎமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?-இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!-உமிக் குற்றுக் கை வருந்துமாறு. 348
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப் பட்டவர்தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச்செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். 349
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்குநல்ல கிளைகள் எனப்படுவார், நல்லவினை மரபின், மற்று அதனை நீக்குமதுவேமனை மரம் ஆய மருந்து. 350
மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?-மை ஆர் இருங்கூந்தல் பைந்தொடி!-எக்காலும்செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம்,பெய்யாது எனினும், மழை. 351
முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால்,பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!-துன்னினார் அல்லர், பிறர். 352
உளைய உரைத்து விடினும், உறுதிகிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள்பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!-தாய் மிதித்த ஆகா முடம். 353
தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால்,என்ன படினும், அவர் செய்வ செய்வதே;-இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசிபோம் வழிப் போகும், இழை. 354
கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள்ஒருவழி நீடும் உறைதலோ, துன்பம்;-பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல்திருவொடும் இன்னாது, துச்சு. 355
பாரதத் துள்ளும், பணையம் தம் தாயமா,ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடுஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால்,காதலரொடு ஆடார் கவறு. 356

32. அறம் செய்தல்
சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல்அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே,சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. 357
வைத்தனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்தக்குழி நோக்கி, அறம் செய்யின்-அஃது அன்றோ,எய்ப்பினில் வைப்பு என்பது. 358
மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல்,சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்புமென்றிருந்து, பாகு செயல். 359
ஈனுலகத்துஆயின், இசை பெறு஡உம்; அஃது இறந்து,ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்வேள் வாய் கவட்டை நெறி. 360
மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையைஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,நாய் காணின் கல் காணாவாறு. 361
தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப்பொருள்தொக்க வகையும் முதலும் அது ஆனால்,'மிக்க வகையால் அறம் செய்!' என, வெகுடல்,-அக்காரம் பால் செருக்குமாறு. 362
உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கிக்குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்-மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்அலைத்துப் பால் பெய்துவிடல். 363
அறம் செய்பவர்க்கும், அறவுழி நோக்கி,திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;-புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய,அல்லவை நீங்கி விடும். 364
தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால்,ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி,அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து,துஞ்சு வருமே, துயக்கு! 365
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம்,முட்டு உடைத்தாகி, இடை தவிர்ந்து வீழ்தலின்,நட்டு அறான் ஆதலே நன்று. 366
பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச்சில நாள் சிறந்தவற்றால் செய்க!-கலை தாங்கிநைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம்செய்வது செய்யாது, கேள். 367
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்,நோக்கப் படினும், உணங்கலைப் புள் கவரும்;-போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண் பொருட்கும்காப்பாரின் பார்ப்பார் மிகும். 368
இன்றி அமையா இரு முது மக்களைப்பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்குன்று, வழி அடுப்பது இல். 369
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமைமுற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்றமுதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்-முயல் விட்டுக் காக்கை தினல். 370
இம்மைத் தவமும், அறமும், என இரண்டும்,தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்,இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும்,தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. 371

33. ஈகை
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,பெரிய பொருள் கருது வாரே;-விரி பூவிராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு,வராஅஅல் வாங்குபவர். 372
கரப்புடையார் வைத்த, கடையும் உதவா,துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-சுரத்திடைப் பெய்த பெயல். 373
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்ததுவல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லேவளம் நெடிது கொண்து அறாஅது;-அறுமோ,குளம் நெடிது கொண்டது நீர்? 374
'நினைத்தது இது' என்று, அந் நீர்மையை நோக்கி,மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்தகுடிஞை இரட்டும் குளிர் வரை நாட!-கடிஞையில் கல் இடுவார் இல். 375
கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;-வாய்ப்பத் தான் வாடியக் கண்ணும், பெருங் குதிரை,யாப்புள், வேறு ஆகிவிடும். 376
அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தாரை, கொண்டார்,படுத்து, 'ஏழையாம்!' என்று போகினும் போக!-அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும்கொடுத்து, ஏழை ஆயினார் இல். 377
'இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்' என்று எண்ணி,கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில்துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-இறைத்தோறும் ஊறும் கிணறு. 378
'இரவலர் தம் வரிசை' என்பார், மடவார்கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்சீர வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-நீர் வரையவாம் நீர் மலர். 379
தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர,'அடுத்தர' என்றாற்கு, 'வாழியரோ!' என்றான்;தொடுத்து, 'இன்னர்' என்னலோ வேண்டா;-கொடுப்பவர்தாம் அறிவார், தம் சீர் அளவு. 380
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்,பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள்பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;-ஒன்று உறா முன்றிலோ இல். 381
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடையமாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரைமண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?-பெண் பெற்றான் அஞ்சான், இழவு. 382
பயன் நோக்காது, ஆற்றவும் பார்த்து அறிவு ஒன்று இன்றி,இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல்ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!-கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு. 383
மறாஅ தவனும், பலர் ஒன்று இரந்தால்,பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,இரந்து ஊட்குப் பன்மையோ தீது. 384
தோற்றம் பெரிய நசையினார், அந் நசைஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றுள்கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால்,உயவுநெய்யுள் குளிக்குமாறு. 385
காப்பு இகந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்கோப் பரியான் கொள்ளக், கொடுத்து இராது என் செய்வர்?நீத்த பெரியார்க்கே ஆயினும், மிக்கவைமேவின், பரிகாரம் இல். 386

34. வீட்டு நெறி
எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,மன்னருடைய உடைமையும், மன்னரால்இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்தம்மை உடைமை தலை. 387
அடங்கி, அகப்பட்ட ஐந்தினையும் காத்து,தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே-கொல்லிமேல் கொட்டு வைத்தார். 388
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்பட்டு ஆர் துடியிடை யார்ப் படர்ந்து, ஒட்டித்தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவாஉடம்பினால் என்ன பயன்? 389
இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார்,நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்ஒருதலையாச் சென்று துணியாதவரே-இரு தலையும் காக் கழித்தார். 390
வளமையும், தேசும், வலியும், வனப்பும்,இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா,மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம்குதித்து உய்ந்து அறிவாரோ இல். 391
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம்பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அதுகும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசைஅம்பாய் உள் புக்குவிடும். 392
செல்வத் துணையும், தம் வாழ்நாள் துணையும், தாம்தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,-முள்ளித் தேன் உண்ணுமவர். 393
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவைஎன் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதேபல் கட்டு, அப் பெண்டிர், மகார். 394
சிறந்த தம் மக்களும் செய் பொருளும் நீக்கி,துறந்தார் தொடரப்பாடு எவன் கொல்,-கறங்கு அருவிஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ,யானை போய், வால் போகாவாறு. 395
எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்டவினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும்,கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே,குழிப் புழி ஆற்றா குழிக்கு. 396
திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆகஎரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால்,சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்,நீர் அற, நீர்ச் சார்வு அறும். 397
ஓத நீர் வேலி உலகத்தார், 'அந் நெறிகாதலர்' என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்-கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம்வானகம் ஆகிவிடும். 398
பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார்,நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க!வரம்பு இல் பெருமை தருமே;-பரம்பூரிஎன்றும் பதக்கு ஏழ் வரும். 399

மிகைப்பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை,இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லாஉள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,-வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.(புறத்திரட்டு -146) 1
'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பதுஇமையத்து அனையார்கண் இல்லை;-சிமையநகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட!நகையேதான் ஆற்றுவிடும். (புறத்திரட்டு - 1107) 2
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறியபிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து? (புறத்திரட்டு - 1139) 3

பழமொழி நானூறு முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.