|
||||||||
பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில் |
||||||||
அடுப்பு நூர்ந்து புகைகிறது.
யார் அதற்குள் தண்ணீரைச் சிலாவியது?
அல்லது
காலால் அடித்துக் கோடிக்குள் ஒற்றியது?
வானம் முழுக்கச் சிவப்பு,
இளநீலம்,
பச்சை.
பழுப்பு....
இது
பொன்னந்தி மாலை.
ஒரு கிழவி
பொல்லை ஊன்றிக்கொண்டு திாிவதுபோல்
மேகம் வேடம் தாித்து
மனதை
வாலாயப் படுத்துகின்ற நேரம்.
இங்கே...
இப்போது...
மரங்களெல்லாம்
அரும்பாமல்
பூக்கும்.
வாலறுந்த பட்டம்போல் நுனிவாலில் தொங்கும்
துண்டு
கிழிந்த நிலவைப்
பார்த்து ஆசையினால்
கையுதறும்
காலுதறும்.
சிறுவெள்ளி
வானத்தை
விரலாலே துளைக்கும்.
பகல்
ஆடு கார்ந்த கிறுசலியாச் சிராம்பும்
ஊதாமல்
குழையெடுத்து மந்திாித்து அடிக்காமல்
விஷமிறங்கி
இதுவரை செருகிய கண்திறந்து பார்க்கும்
மீண்டும்
கடியன்
நிலத்திலே ஊரும்.
கொக்குப்போல் வளர்ந்த
நெடிய வேப்பையின் துளிருக்குமட்டும்
மஞ்சள் வெயில்
இளஞ்சூட்டில் கொடுக்கின்ற ஒத்தடத்தைக் கவனித்து
பழந்தின்று
கொட்டையும் போட்ட நரைப்பூனை
தெள்ளுதிர்த்தும்
வைப்பு முடிந்து அடைகிடந்த குறுக்கு
இரு என்றால் படுக்கம்
படுவேசை போல
கப்பை அகட்டி மல்லாக்கப் புரளும்.
பேய்
நெல்லுக் காயவைக்கும்.
அடுப்பு நூர்ந்து புகைகிறது. யார் அதற்குள் தண்ணீரைச் சிலாவியது? அல்லது காலால் அடித்துக் கோடிக்குள் ஒற்றியது?
வானம் முழுக்கச் சிவப்பு, இளநீலம், பச்சை. பழுப்பு....
இது பொன்னந்தி மாலை. ஒரு கிழவி பொல்லை ஊன்றிக்கொண்டு திாிவதுபோல் மேகம் வேடம் தாித்து மனதை வாலாயப் படுத்துகின்ற நேரம்.
இங்கே... இப்போது... மரங்களெல்லாம் அரும்பாமல் பூக்கும். வாலறுந்த பட்டம்போல் நுனிவாலில் தொங்கும் துண்டு கிழிந்த நிலவைப் பார்த்து ஆசையினால் கையுதறும் காலுதறும். சிறுவெள்ளி வானத்தை விரலாலே துளைக்கும்.
பகல் ஆடு கார்ந்த கிறுசலியாச் சிராம்பும் ஊதாமல் குழையெடுத்து மந்திாித்து அடிக்காமல் விஷமிறங்கி இதுவரை செருகிய கண்திறந்து பார்க்கும்
மீண்டும் கடியன் நிலத்திலே ஊரும். கொக்குப்போல் வளர்ந்த நெடிய வேப்பையின் துளிருக்குமட்டும் மஞ்சள் வெயில் இளஞ்சூட்டில் கொடுக்கின்ற ஒத்தடத்தைக் கவனித்து
பழந்தின்று கொட்டையும் போட்ட நரைப்பூனை தெள்ளுதிர்த்தும் வைப்பு முடிந்து அடைகிடந்த குறுக்கு இரு என்றால் படுக்கம் படுவேசை போல கப்பை அகட்டி மல்லாக்கப் புரளும். பேய் நெல்லுக் காயவைக்கும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|