உங்களை பிறர் நேசிக்க, உங்களை எல்லோருக்கும் பிடிக்க, உயர்வாக நினைக்க... சில மனதத்துவ அறிவுரை & யோசனைகள்... *பேச்சு... 1) ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் முதலில் அவர்களின் கண்களை பார்த்து பேசுக... 2) குழந்தைகளிடம் ஆர்வமாக பேசுக... 3) பெரியவர்களுடன் நலன் விசாரித்தப்படியே, கடவுளின் நம்பிக்கையுடனே பேசுங்கள்... 4) பெற்றோர்களிடம் அன்பாகவும், முதலாளிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் நேர்மையாகவும் பொறுமையாகவும் பேசுக... 5) கணவன் / மனைவியிடம் எதையும் மறைக்காமல் அக்கறையுடன் பேசுக... 6) நம்பிக்கையான நண்பரிடம் மட்டுமே தைரியமாக உண்மையை பேசுக... 7) உங்கள் குடும்பத்தினருக்கு அடிக்கடி பரிசு கொடுக்கும் பழக்கம் வைத்திருங்கள்... 😎 அதிகமாக உங்கள் குடும்பத்தினரை பாராட்டி பேசுங்கள், அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்... 9) ஆடை அலங்காரங்களில்தான் நீங்கள் மற்றவர்களால் எளிதில் ஈர்க்கப்படுவீர்... 10) வெள்ளை ஆடைகள் அணிபவர்களுக்கு நம் நாட்டில் தனி மரியாதையே உண்டு... வாரம் ஒருமுறையாவது வெள்ளை உடை அணிவீர்... 11) உங்கள் நிறத்திற்கு ஏற்ற சரியான ஆடையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்... 12) தெரிந்தவர் தோரியாதவர் யாராக இருந்தாலும் கூட அவர்களுக்கு உங்கள் அழகிய புன்னகையை பரிசளியுங்கள்/ பெண்கள் தெரிந்தவர்களிடம் மட்டுமே புன்னகைத்து பேசுவது நலமே... 13) வாக்குகள் ஏதாவது கொடுத்தால் அதை முடிந்த வரை நிறைவேற்ற பாருங்கள்... 14) சுபநிகழ்ச்சிக்கு செல்லும்போது உங்கள் மனைவி மக்கள் மற்றும் உங்களின் குடும்பத்தினரிடமே இருங்கள்... 15) அழகிய உடை சட்டையில் வாசனை கையில் கடிகாரம் என உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளுங்கள்... 16) ஆடை அலங்காரம், பேச்சில் பொறுமையே உங்களை மற்றவர்களால் அதிகம் ஈர்க்கக்கூடும்... 17) பிடித்த உணவை தேர்ந்தெடுத்து அளவோடு சாப்பிடுங்க... 18) வயிறு முட்ட சாப்பிடவே கூடாது, பரபரப்பாக அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்... 19) உங்கள் மனைவியோ, அல்லது அம்மா, சகோதரி சகோதரன் யாராக சமைத்திருந்தாலும் உணவு சமைத்தவரை பாராட்டுங்கள்... 20) உணவில் குறை கூறாதீர்கள், பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்... 21) குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள் அருகில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு வைக்காத உணவு உங்களுக்கு வைக்கப்பட்டால் அதை பரிமாறிக் கொள்ளுங்கள்... 22) சுத்தம் என்றால் முதலில் அதை உங்கள் வீட்டிலிருந்தே கடைபிடியுங்கள்... 23) வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்து விருந்தாலுகள் முகம் மலரும்படி என்றுமே உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்... 24) உடல் சுத்தம், உடுத்தும் உடையில் சுத்தம், இருக்கும் இடம் மற்றும் பேச்சில் சுத்தம், போன்றவற்றே பிறர் உங்களை அதிகமாக நேசிக்க உதவிடும்... 25) சேமிப்பும், உதவிகளும் இந்த காலகட்டத்தில் மிகமிக அவசியம் வருமானத்தை கொண்டு சேமிக்க பாருங்கள், இயலாதவர்கள் உங்களை விட பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களுக்கு அதிகமாக உதவிட பாருங்கள்.
|