LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

பிரபந்தசாரம்

சிறப்புத்தனியன்: எண்சீராசிரியவிருத்தம்
ஆரணநான் கின்பொருளை யாழ்வார்க ளாய்ந்தடைவே
யன்புடனே யம்புவியோ ரனைவருமீ டேறவென்று
நாரணனார் தாள்களிலே நாலாயி ரந்தமிழா
னண்ணியுரை செய்தவற்றை நாடிவகை தொகைசெய்தாய்
பூரணமா ஞானியர்சேர் பொங்குபுகழ்த் தூப்புல்வரும்
புனிதனென்றும் பிள்ளையென்றும் புவியர்புகழ் வேங்கடவா
தாரணியோ ரிங்குகக்கச் சாற்றியநற் ப்ரபந்தசாரந்
தனையுரைத்து வாழுமனந் தந்தருளா யென்றனக்கே.

ஆதிமறை யோதிமகி ழயக்கிரிவர் தம்மருளா
லன்புடனே தூப்புனக ரவதரித்தே யிங்குவந்த
வாதியரை வென்றுவந்து வன்புவிமே லெதிராசர்
வாழ்வுறுனற் றெரிசனத்தை வண்மையுட னேவளர்த்து
நீதினெறி தவறாம னிருத்தியிடும் வேங்கடவா
நேசமுட னாழ்வார்க ணிலைகளையெல் லாமுணர்ந்து
சாதுசனம் வாழவென்று சாற்றியநற் ப்ரபந்தசாரந்
தனையுரைத்து வாழுமனந் தந்தருளா யென்றனக்கே.

ஆசார்யவந்தனம்

18.1:
ஆழ்வார்க ளவதரித்த நாளூர் திங்க
ளடைவுதிரு நாமங்க ளவர்த்தாஞ் செய்த
வாழ்வான திருமொழிக ளவற்றுட் பாட்டின்
வகையான தொகையிலக்க மற்று மெல்லாம்
வீழ்வாக மேதினிமேல் விளங்க நாளும்
விரித்துரைக்குங் கருத்துடனே மிக்கோர் தங்க
ணீள்பாத நிரந்தரமுந் தொழுது வாழ்த்து
நேசமுட னடியேன்றன் னெஞ்சு தானே.

பொய்கையாழ்வார்
18-2
அருண்மிகுத்த தொருவடிவாய்க் கச்சி தன்னி
லைப்பசிமா தத்திருவோ ணத்து நாளிற்
பொருண்மிகுந்த மறைவிளங்கப் புவியோ ருய்யப்
பொய்கைதனில் வந்துதித்த புனிதா முன்னா
ளிருளதனிற் றண்கோவ லிடைக ழிச்சென்றி
ருவருட னிற்கவுமா லிடைநெ ருக்கத்
திருவிளக்கா மெனும்வையந் தகளி நூறுஞ்
செழும்பொருளா வெனக்கருள்செய் திருந்த நீயே.

பூதத்தாழ்வார்
18-3
கடன்மல்லைக் காவலனே பூத வேந்தே
காசினிமே லைப்பசியி லவிட்ட நாள்வந்
திடர்கடியுந் தண்கோவ லிடைக ழிச்சென்
றிணையில்லா மூவருமா யிசைந்தே நிற்க
நடுவிலிவ ரொருவருமென் றறியா வண்ண
நள்ளிருளின் மானெருக்க நந்தா ஞானச்
சுர்விளக்கேற் றியவன்பே தகளி யான
தொடைநுaறு மெனக்கருளசெய் துலங்க நீயே.

பேயாழ்வார்
18-4
மாமயிலைப் பதியதனிற் றுலாமா தத்தில்
வருஞ்சதயத் தவரித்துக் கோவ லூரிற்
றூமுனிவ ரிருவருடன் றுலங்க நின்று
துன்னியபே ரிருணீங்கச் சோதி தோன்றச்
சேமமுட னெடுமாலைக் காணப் புக்குத்
திருக்கண்டே னெனவுரைத்த தேவே யுன்றன்
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்
பழவடியே னுக்கருள்செய் பரம நீயே.

திருமழிசையாழ்வார்
18-5
தைம்மகத்தில் வருமழிசைப் பரனே மற்றைச்
சமயங்கள் பலதெரிந்து மாயோ னல்லாற்
றெய்வம்மற் றில்லையென வுரைத்த வேதச்
செழும்பொருணான் முகன்றெண்ணூற் றாறு பாட்டு
மெய்ம்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல்
விளங்கியநுaற் றிருபதுந்தப் பாமன் மெய்யே
வையகத்து மறவாம லுரைத்து வாழும்
வகையடியே னுக்கருள்செய் மகிழ்ந்து நீயே.

நம்மாழ்வார்
18-6
முன்னுரைத்த திருவிருத்த நூறு பாட்டு
முறையின்வரு மாசிரிய மேழு பாட்டு
மன்னியநற் பொருட்பெரிய திருவந் தாதி
மறவாத படியெண்பத் தேழு பாட்டும்
பின்னுரைத்த தோர்திருவாய் மொழியெப் போதும்
பிறையறவா யிரத்தோருநூற் றிரண்டு பாட்டு
மிந்நிலத்தில் வைகாசி விசாகந் தன்னி
லெழிற்குருகை வருமாறா விரங்கு நீயே.

மதுரகவிகள்

18-7
தேறியமா ஞானமுடன் றிக்கோ ளூரிற்
சத்திரையிற் சத்திரைநாள் வந்து தோன்றி
யாறியநல் லன்புடனே குருகூர் நம்பிக்
கனவரத மந்தரங்க வடிமை செய்து
மாறனையல் லாலென்று மறந்துந் தேவு
மற்றறியேனெனுமதுர கவியே நீமுன்
கூறியகண் ணிநுண்சிறுத்தாம் பதனிற் பாட்டுக்
குலவுபதி னோன்றுமெனக் குதவு நீயே.

குலசேகராழ்வார்
18-8
பொன்புரையும்வேற்குலசே கரனே மாசிப்
புனர்பூசத் தெழில்வஞ்சிக் களத்துத் தோன்றி
யன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயி
லனைத்துலகின் பெருவாழ்வு மடியார் தங்க
ளின்பமிகு பெருங்குழுவுங் காண மண்மே
லிருளிரிய வென்றெடுத்த விசையிற் சொன்ன
நன்பொருள்சேர் திருமொழிநுaற் றைந்து பாட்டு
நன்றாக வெனக்கருள்செய் நல்கி நீயே

பெரியாழ்வார்
18-9
பேரணிந்த வில்லிபுத்தூ ரானி தன்னிற்
பெருஞ்சோதி தனித்றோன்றும் பெருமா னேமுன்
சீரணிந்த பாண்டியன்றன் னெஞ்சு தன்னிற்
றியக்கறமால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி
வாரணமேன் மதுரைவலம் வரவே வானின்
மால்கருட வாகனனாய்த் தோன்ற வாழ்த்து
மேரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்
றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு நீயே.

கோதைப்பிராட்டி
18-10
வேயர்புகழ் வில்லிபுத்தூ ராடிப் பூர
மேன்மேலு மிகவிளங்க விட்டு சித்தன்
றூயதிரு மகளாய்வந் தரங்க னார்க்குத்
துழாய்மாலை முடிசூக் கொடுத்த மாதே
நேயமுடன் றிருப்பாவைப் பாட்டா றைந்து
நீயுரைத்த தையொருதிங் கட்பா மாலை
யாயபுகழ் நுaறுடனாற் பத்து மூன்று
மன்புடனே யடியேனுக் கருள்செய் நீயே.

தொண்டரடிபெடியாழ்வார்
18-11
மன்னுமதிட் டிருமண்டங் குடிதான் வாழ
மார்கழிமா தக்கேட்டை நாளில் வந்து
துன்னுபுகழ்த் தொண்டரடிப் பொடியே நீமுன்
றுழாய்மாலைப் பணியடிமை செய்து நாளுந்
தென்னரங்க மணவாளற் கன்பு மிக்குச்
செப்பியநற் றிருமாலை நாற்பத் தைந்தும்
பன்னியநற் றிருப்பள்ளி யெழுச்சி பத்தும்
பழவடியே னுக்கருள்செய் பரிந்து நீயே.

திருப்பாணாழ்வார்
18-12
உலகரிய மலிபுழ்க்கார்த் திகைமா தத்தி
லுரோகணிநா ளுறந்தைவளம் பதியிற் றோன்றித்
தலமளந்த தென்னரங்கர் பாலு லோக
சாரங்க மாமுனிதோ டனிலே வந்து
பலமறையின் பொருளாற்பாண் பெருமா ளேநீ
பாதாதி கேசமதாய்த் பாடித் தந்த
சொலவமல னாதிபிரான் பத்துப் பாட்டுஞ்
சோராம லெனக்கருள்செய் துலங்க நீயே.

திருமங்கையாழ்வார்
18-13
அறிவுதரும் பெரியதிரு மொழிதப் பாம
லாயிரத்தோ டெண்பத்து நாலு பாட்டுங்
குறியதொரு தாண்டகநா லைந்தா றைந்துங்
குலாநெடுந்தாண் டகமெழுகூற் றிருக்கை யொன்றுஞ்
சிறியமடற் பாட்டுமுப்பத் தெட்டி ரண்டுஞங
சீர்பெரிய மடறனிற்பாட் டெழுபத் தெட்டு
மிறையவனே கார்த்திகையிற் கார்த்தி கைந்நா
ளெழிற்குரையல் வருகலியா விரங்கு நீயே.

ஸ்ரீபாஷ்யகாரர்
18-14
தேசமெலா முகந்திடவே பெரும்பூ தூரிற்
சித்திரையி லாதிரைநாள் வந்து தோன்றிக்
காசினிமேல் வாதியரை வெஇற ரங்கர்
கதியாக வாழ்ந்தருளு மெதிரா சாமுன்
பூசுரர்கோன் றிருவரங்கத் தமுத னாருன்
பொன்னடிமே லந்தாதி யாகப் போற்றிப்
பேசியநற் கலித்துறைநூற் றெட்டுப் பாட்டும்
பிழையரவே யெனக்கருள்செய் பேணி நீயே.

ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களின் எண்-விளக்கம்

18-15
எண்ணின்முத லாழ்வார்கண் மூன்று நூறு
மெழின்மழிசைப் பிரானிருநூற் றொருபத் தாறு
முண்மைமிகு மாறன்மறை யாயி ரத்தோ
டுற்றவிரு நூற்றுத்தொண் ணூறு மாறும்
வண்மையுaட மதுரகவி பத்து மொன்றும்
வஞ்சியர்கோ னூற்றைந்தும் பட்ட நாதன்
பண்ணியனா னூற்றேழு பத்த மூன்றும்
பார்கோதை நூற்றேழு பத்து மூன்றே.

18-16
பத்தரடிப் பொடிபாட லைம்பத் தைந்தும்
பாணர்புகல் பத்துடனே பரகா லன்சொ
லத்தனுயர் வேங்கடமாற் காயி ரத்தோ
டானவிரு நுaற்றோரைம் பத்து மூன்று
முத்திதரு மெதிராசர் பொன்ன டிக்கே
மொழிந்தவமு தர்பாட னூறு மெட்டு
மெத்திசையும் வாழவிவர் பாடி வைத்த
விவைநாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே

ஆழ்வார்களின் கோஷ்டி
18-17
வையகமெண் பொய்கைபூ தம்பே யாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுர கவிகள்
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டு சித்தன்
பூந்கோதை தொண்தரடிப் பொடிபா ணாழ்வா
ரையனருட் கலியனெதி ராசர் தம்மோ
டாறிருவ ரோரொருவ ரவர்தாஞ் செய்த
துய்யதமி ழிருபத்து நான்கிற் பாட்டின்
றொகைநாலா யிரமுமடி யோஹங்கள் வாழ்வே.

பலச்ருதி கூறல்

அந்தமிலா வாரணநா லாகி நின்ற
வதன்கருத்தை யாழ்வார்க ளாய்ந்தெ டுத்துச்
செந்தமிழா லருள்செய்த வகைதொ கையுஞ்
சிந்தாம லுலகங்கள் வாழ வென்று
சந்த மிகு தமிழ்மறையோன் றூப்புற் றோன்றும்
வேதாந்த குருமொழிந்த ப்ரபந்த சாரஞ்
சிந்தையினா லனுதினமுஞ் சிந்திப் போர்க்குச்
சேமமதாந் திருமாறன் கருணை யாலே.

ஆகாரநியமம்
சிறப்புத்தனியன்

சீராரும் வேதாந்த தேசி கர்கோன்
செழுமறையி னுட்பொருளைச் சந்தை செய்தே
யாராய்ந்து வாழ்வுறவிப் புவியோர் தங்கட்
கன்புடனே யாகார நியதி சொன்னா
னேரார மெதிராச ரருளி னாலே
யெதிர்த்தவர்கள் சிங்கமென விங்கு வந்தோன்
சீராரும் வேங்கடவன் றூப்புற் பிள்ளை
செழுந்திருத்தாளிணைமலரென் சென்ன மேலே.

இந்த ப்ரபந்தவரலாறு

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.