LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் உலகப்பார்வையை கொண்டது நமது தமிழ்மொழி.   இதில் பழந்தமிழர் வீரம் போற்றும் புறநானூறு, அக வாழ்க்கையை கொண்டாடும்  அகநானூறு, இலக்கணம் போற்றும் தொல்காப்பியம் , வாழ்வியல் பேசும் திருக்குறள் என்று அனைத்தையும் கொண்டுள்ள ஒரே மொழி  நம் தமிழ் மொழியாகும்.

சங்க இலக்கியப் பாடல்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும், அதே மொழிநடையில் இன்றும் நம்மால் படித்து புரிந்துகொள்ள முடிகிறது என்றால் அது தமிழுக்கு மட்டுமே உள்ள தகுதியும் சிறப்புமாகும்.

உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழ் இனம் தமிழ்ச்சங்கம் அமைத்து , இலக்கியக் குழு, கலைக்குழு , தமிழ்ப்பள்ளிகள் அமைத்து  தங்களின் மொழி,கலை,பண்பாட்டை, வாழ்வியலை பாதுகாப்பதிலும், தழைத்தோங்கச் செய்வதிலும் உறுதியாக இருக்கிறோம்.   எந்த நாட்டிலும் தமிழ்ச்சங்க மேடைகளில் பிறமொழிகள் அனுமதிக்கப்படுவதில்லை . இது பிறமொழி பேசும் அண்டை மாநில மக்களுக்கும் வியப்பைத் தருகிறது.

உலகின் 7102 மொழிகளில் ஏழு மொழிகள் மட்டுமே செம்மொழி மொழிகளாக தகுதி பெற்றுள்ளது. அதில் தமிழ்மொழி மட்டுமே ஒரு செம்மொழிக்காக  வரையறுக்கப்பட்டுள்ள 11 தகுதிகளையும் பெற்றுள்ளது என்று பெருமையோடு குறிப்பிடுவோம்.

தமிழர்களின் உன்னதமான வாழ்வியல் கோட்பாடுகளாக அறம் , பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நிலைகளை அறிந்து செம்மையாக வாழ்ந்துள்ளனர்.

நம் சங்க இலக்கியங்கள் கற்பனைகள் அல்ல, அவை  அந்தந்த காலக்கட்டத்தின் வாழ்வியலை பிரதிபலிப்பவை. .  சங்க இலக்கியங்களைக் கற்போம் . . தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

by Swathi   on 27 Apr 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.