கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம்தான் பீட்சா. இந்த படம் இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு இத்தாலியில் கொடுக்கக்கூடிய கெளரவமான விருதை பெற்றுள்ளது. இதனால் உலக ரசிகர்களின் பார்வையில் 'பீட்சா' இடம்பெற்றுள்ளது.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆமால் இந்தப் படத்திற்கு ஆங்கில டப்பிங் கொடுத்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார். மிகப்பெரிய தொகை இதற்காக தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் மகிழ்ந்து போன தயாரிப்பாளர் ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆனால் இந்த படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கு அந்த படத்தில் வாங்கிய சம்பளத்தொகை அளவுக்கு மீண்டும் சம்பளம் கொடுக்க சம்மதித்துள்ளாராம்.
|