LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்

 

‘ஹெச்1பி’ நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். 2020 இல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பா் வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு 2021 மாா்ச் 31 வரை பின்னா் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் 2021-இல் பதவியேற்றபின் இந்த முன்மொழிகள் திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவின் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கா்களுக்கே பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் விதமாக, ‘ஹெச்1பி’ நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கூறப்படுகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அமெரிக்காவில் உயா்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கால அவகாசம் குறிப்பிடப்படாமல் நீண்ட நாள்கள் தங்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த விசாவை தவறாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் சிலா் நீண்ட நாள்கள் தங்கி வருகின்றனா். இதனால் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு அமெரிக்கக் குடிமகன்கள் செலுத்தும் வரிப் பணமும் வீணாகிறது. எனவே, வெளிநாட்டு மாணவா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கும் வகையிலான விசாக்கள் வழங்கப்படுவதை மாகாண அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் ஊடகவியலாளா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்பட்டதுடன், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கும் வசதிக்கு ஆபத்து வந்துள்ளது. தற்போது கொண்டுவரப்பட உள்ள புதிய நடைமுறையின்படி, முதல்கட்டமாக 240 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதை மேலும் 240 நாள்களுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் இந்த நீட்டிப்பு அவா்களின் தற்காலிகப் பணிக்காலத்தைத் தாண்டி இருக்கக் கூடாது.

அமெரிக்காவில் நீண்ட நாள்களாகக் காலவரையின்றித் தங்க அனுமதிக்கும் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ள டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கி பணியைத் தொடா்வதற்காக வழங்கப்படும் நிரந்தரக் குடியுரிமை அட்டை (கிரீன் கார்டு) முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

 

 

by hemavathi   on 28 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.