LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கூட்டு

வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு

தேவையானவை :


வாழைக்காய் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பச்சைப்பயறு - 1 கப்

பச்சை மிளகாய் - 6

தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி


தாளிக்க தேவையானவை :


எண்ணை - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு



செய்முறை :


1.பச்சைப் பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.


2.குக்கரில் ஊற வைத்த பயிறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக விடவும். வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


3.ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும், தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.

Banana Greengram joint

Ingredients for Banana Greengram Joint:

Green Plantain-1

Turmeric powder-1/4tbsp

Greengram-1cup

Green Chilies-6

Grated Coconut-2tbsp

Cumin seed-1tbsp

Salt-1tbsp

Ingredients for Seasoning:

Oil-1tbsp

Mustard-1/2tbsp

Asafoetida-as needed

Curry leaves-1 bunch


Method for Banana Greengram Joint:


1.Soak green gram in water for 6 or 8 hours. Peel green plantain and cut into thin slices.Grind the grated coconut,green chilies and cumin seed very nicely. 

2.Put green gram into a pressure cooker ,cover with needed water, add salt and tumeric powder. Allow 1 or 2 whistle to cook well.Put the plantain into a bowl, add water to cover them.Add salt,turmeric powder along with them and allow them to cook well.Drain the plantain from water and put into a bowl.

3.Heat oil in a pan and add mustard.When they splutter ,add afafoetida,curry leaves.Add cooked plantain,green gram and grained coconut paste. After few seconds add water and salt .Stir well and remove them from fire.

by Swathi   on 29 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.