|
||||||||
மே 9ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு !! |
||||||||
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. பிளஸ் 2 முடிவுகளை கீழ் கண்ட இணைய தள முகவரிகளில் காணலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ww.dge3.tn.nic.in இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை காண தேர்வெண்ணுடன், பிறந்த தேதியையும் குறிப்பிட வேண்டும். தேர்வு முடிவை, 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மேலும் மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. |
||||||||
by Swathi on 25 Apr 2014 0 Comments | ||||||||
Tags: Plus 2 Result +2 Result Tamilnadu Plus Result + 2 ரிசல்ட் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|