|
||||||||
அ தி மு க அரசியல் வரலாறு |
||||||||
![]() எம்,ஜி,ஆர் அக்டோபர் மாதம் 17, 1972 ம் தேதியன்று தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக்கட்சியைத் தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரைச் சூட்டினார், எம்,ஜி,ஆர். கழகத்தின் கொடி: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது குறித்த அறிவிப்பை முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கம் வெளியிட்டார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார். புதிய இயக்கத்தின் பெயர்: புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த எம்.ஜி.ஆர் , அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தென்னகம் நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.தி.மு.க.வில் இருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது. உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தது: அடுத்த சில நாட்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர். இரட்டை இலைச் சின்னம்: தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்த சின்னங்களின் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது. முதல் முறை ஆட்சி: பகல்,இரவு பாராமல் ,மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மனதில் பதிந்து சாதனை படைத்து வருகிறது. 1974ம் ஆண்டு, புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1974இல் மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார். இரண்டாவது முறையாக வெற்றி: 1977ம் ஆண்டு புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.1980ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.1981ம் ஆண்டு மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.1984இல் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. இறப்பு: 1987ம் ஆண்டு முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதன் பொதுச்செயலாளர் ஆனார். ஜெ. ஜெயலலிதா: அதன் பின்னர் ஜெயலலிதாவே முதல்வர் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.ஜூன் 24, 1991 முதல் மே 11, |
||||||||
by Swathi on 21 Aug 2012 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|