|
||||||||
தி மு க அரசியல் வரலாறு |
||||||||
![]() திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் ஒப்பில்லா அரசியல் கட்சியாகும்.தந்தை பெரியார் என தனது தொண்டர்களால் தொடங்கப்பட்ட திராவிடக் கழகத்திலிருந்து சி. என். அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள். முதல் பொதுச்செயலாளர்: அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அறிஞர் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, தி.மு.க.வின் கொடியாக தேர்வு செய்யப்பட்டது.1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை.“திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. உதயசூரியன்: 1958 மார்ச் 2-ல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். முதல்முறையாக ஆட்சி: 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. 1967-ல் நடைபெற்ற 3-வது பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 பிப்ரவரி 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.அவர் 1969 பிப்ரவரி 3 வரை மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது, தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது, தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா.அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. கலைஞர் மு. கருணாநிதி: 1969-ல் கலைஞர் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.1971-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. கலைஞர், 2-வது முறையாக முதல்வர் பொறுப்போற்றார். மாநில சுயாட்சி: 1972 அக்டோபர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20-ல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.1975 ஜுன் 25-ல் இந்திய அரசு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை யடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1977 ஜூலை 4-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது.1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. அளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது. பெண்களுக்கு சொத்துரிமை: 1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சியை பிடித்தது: 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.2011ல் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க வெற்றி கண்டது. |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|