LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் ..

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடலை அமெரிக்காவில்  வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன்  வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் ..
தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி  துள்ளல் நடனமாடி மகிழ ஒரு பாடல் இல்லை என்ற குறையை போக்கும் வகையில்,  அமெரிக்காவின் நியுஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து ஒரு பாடல் தயாரானது..   இதை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா மேடையில் 20-1-2017, சனிக்கிழமை அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக் கழகத்துடன் பேச்சுவார்ந்தை நடத்த வந்திருந்த  தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்து ஆணையர் மற்றும் முன்னாள் மேரிலாந்து வெளியுறவுத்துறை துணைச்செயலர் டாக்டர் ராஜன் நடராஜன்   ஆகியோர்  வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  
இந்தப் பாடலை  நியுஜெர்சியிலிருந்து  மணிகண்டன் ஆனந்தராஜ் தலைமையில் வாசிங்டன்  பகுதியைச் சார்ந்த  ச.பார்த்தசாரதி, நித்திலச்செல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், ராஜாராம் சீனுவாசன், ஐயப்பன் ராமன் ஆகியோர் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதினர்.  இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தை சார்ந்த 25க்கும் மேற்பட்டோர் நடனமாடி காணொளியாக  சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதை www.youtube.com/watch?v=o_nv_JhQXbk -ல்  காணலாம். இதை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்  #pongalsong, #thaithaipongalu ஆகிய Hashtag -ல் பகிரப்பட்டு வருகிறது . 
இந்த இசை, இளைய தலைமுறையை கவரும் வகையில், நம் பொங்கல் திருவிழா, உழவர்களின் பெருமை, மெரீனா சல்லிக்கட்டு தை எழுச்சி, பொங்கல் விழாவிற்கு அமெரிக்காவின் வெர்சீனியா மாகாண அங்கீகாரம், ஹார்வார்டில் முடியும் தருவாயில் இருக்கும் தமிழ் இருக்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் சொல்லி காலத்திற்கும் பொங்கலுக்காக நடனமாடி மகிழும் வகையில் இந்தப்பாடல் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்படுகிறது ..    
தமிழர் விழாவின் பெருமை போற்றும் வகையில் வெளிவந்துள்ள இந்தப்பாடல் ஆங்கில வார்த்தைகள் இல்லாத வகையில் வெளிவந்துள்ளது .. 
இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து, இதை  ஒருங்கிணைத்த திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிடுகையில்,  வலைத்தமிழ்.காம்  கடந்த ஆண்டு தமிழில் பிறந்தநாள் பாடல் இல்லையே என்ற குறையைப் போக்க,  கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதி, திரு.அரோல் காரொலி இசையமைத்து, திரு. உன்னிகிருஷ்ணன்  மற்றும் செல்வி உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடி ஒரு சிறந்த பாடலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிட்டோம். அது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கிறது .   அதுபோல் பொங்கல் என்றால் ஓரிரு திரைப்படப் பாடல்களை மட்டுமே நாம் பயன்படுத்தும் சூழல் உள்ளது . இந்த ஆண்டு ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமையும் தருவாயில் இருப்பதாலும், அமெரிக்காவின் முதல் மாகாணமாக வெர்சீனியா மாகாணம், ஒவ்வொரு ஆண்டும் சனவரி 14, பொங்கல் தினமாகக் கொண்டாட அரசு அங்கீகாரம் அளித்திருப்பதாலும், வரலாற்று சிறப்புமிக்க  சல்லிக்கட்டு நிகழ்ந்து ஓர் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி அதன் நினைவாகவும் ஒரு பாடல் கொண்டுவரவேண்டும் என்று வசந்த் வசீகரன்  அவர்களுடன் என் விருப்பத்தை தெரிவித்தோம். இதற்காக நேரம் ஒதுக்கி ஒரு நல்ல இசையை கொண்டுவந்தார். இந்த முயற்சியை  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து , வலைத்தமிழ்.காம் ஒருங்கிணைத்து வெளியிடப்படுகிறது.  இந்தப் பாடல் வரலாற்றுச் சிறப்புமிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிடப்பட்டது மிகப்பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.  மேலும் இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ராசாராம் சீனுவாசன் மற்றும் செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்து,   இது உலகின் அனைத்து தமிழர்களும் தங்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறியதை ஆடிப்பாடி பொங்கலை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் ஏற்கனவே பல தமிழ் சங்கங்கள்அவர்களின் செய்திமடலில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் தமிழில் நல்லவற்றிக்கு அனைவரும் கொடுக்கும் ஆதரவு நம்பிக்கையளிப்பதாக தெரிவித்தார். 
தமிழர் திருவிழா மற்ற கலாச்சாரத்திற்கும், நம் அடுத்த தலைமுறைக்கும்  குறிப்பாக இளைஞர்களுக்கும் பரவ இந்தப்பாடலைக் கேட்டு, ஆடிப்பாடி , மற்றவர்களுக்கும் பகிர்ந்து மகிழ்வோம் .. மேலும் விவரங்களுக்கு www.ValaiTamil.Com சென்று பார்க்கவும் .

தமிழர் திருவிழா மற்ற கலாச்சாரத்திற்கும், நம் அடுத்த தலைமுறைக்கும்  குறிப்பாக இளைஞர்களுக்கும் பரவ இந்தப்பாடலைக் கேட்டு, ஆடிப்பாடி , மற்றவர்களுக்கும் பகிர்ந்து மகிழ்வோம் .. மேலும் விவரங்களுக்கு www.ValaiTamil.Com சென்று பார்க்கவும்.

by Swathi   on 21 Jan 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
21-Jan-2018 19:21:33 சிவபாலன் said : Report Abuse
நான் இரசிக்கும் ஒரு தளம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.