LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்...

கல்கியின் கைவண்ணத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் பேரரசன் ராஜராஜ சோழன். இவனுடைய வீரம் செறிந்த காதல் கலந்த இளமைக்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் "பொன்னியின் செல்வன்". இந்த தேனினும் இனிய இந்நாவல் மூலம் இளந்தமிழர்கள் -தமிழச்சிகளின் இதய சிம்மாசனத்தில் குணக்குன்றாம் ராஜராஜனை நிரந்தரமாக அமர வைத்தவர் நூலாசிரியர் பேராசிரியர் கல்கி.

மகத்தான இப்படைப்பை "காமிக்ஸ் "புத்தக (தமிழ், ஆங்கில மொழிகளில்)வடிவில் கொண்டுவர சரவணராஜாவின் நிலா காமிக்ஸ் முடிவு செய்தது. திட்டமிட்டபடி, அண்மையில் சென்னையில் நடைபெற்ற ராஜராஜன் பிறந்த தினவிழாவின்போது முதல் தமிழ் காமிக்ஸ் புத்தகம்(2அத்தியாயங்கள் கொண்டது) வெளியிடப்பட்டது.அடுத்தடுத்த புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.பிறமொழிமக்களும் சுவைக்கும் வகையில்,இந்நாவலின் முதல் ஆங்கில காமிக்ஸ் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் 27.11.17, அன்று மாலை நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர் அவ்வை ந.அருள், முதல் புத்தகத்தை வெளியிட்டார். முனைவர் இறையரசன், சின்சினாட்டி மாகாண தமிழ் சங்கத் தலைவர் சுபத்ரா சுரேஷ், கல்லூரிக் கல்வி முன்னாள் இணைஇயக்குனர் மதிவாணன், மொழிபெயர்ப்புத் துறை முன்னாள் துணை இயக்குனர் ஜி. பாலகிருஷ்ணன், கவிஞர் ஆனைவாரி ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.வரலாற்று அறிஞர் கோ.கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.நிலா காமிக்ஸ் சரவணராஜா நன்றியுரை நவின்றார்.

ஆங்கில "காமிக்ஸ்" க்கு மொழிபெயர்ப்பு செய்தவர் பத்தாம் வகுப்பு மாணவி நிலா என்பது  குறிப்பிடத்தக்கது. சரவணராஜாவின் மகளான இவரை விழாவுக்கு வந்திருந்த அறிஞர்கள் பெரிதும் பாராட்டி வாழ்த்தினர்.

by Swathi   on 29 Nov 2017  4 Comments
Tags: Ponniyin Selvan   Ponniyin Selvan Comics   பொன்னியின் செல்வன்   பொன்னியின் செல்வன் நாவல்   காமிக்ஸ்        
 தொடர்புடையவை-Related Articles
ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்... ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்...
இராசராசன் பிறந்த நாள்விழா & பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !! இராசராசன் பிறந்த நாள்விழா & பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !!
அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ! அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' !
கருத்துகள்
10-Dec-2017 17:19:25 டீ வி நிர்மலா said : Report Abuse
நன்றி. ஆங்கில வடிவில் பொன்னியின் செல்வன் நன்றாக இருந்தது.மேலும் நாணய மற்றம், உலக நேரம், பங்கு வர்த்தகம் மற்றும் காலண்டர் போன்றவையும் உபயோகமாக உள்ளது.இது போன்ற தகவலை எனக்கு ஈமெயில் மூலம் தெரிய படுத்தினால் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்,நன்றி
 
05-Dec-2017 08:03:23 S.isaikummani said : Report Abuse
Irumbuk Kai mayavi padithu mahilnthu irukhom Tamil kaviangalaiyum padikkum voippum ippodthu kidaiththippathu perum mahilchiyaga irukkirathu Thangalin pani paranthu thodara engalathu nal வாழ்த்துக்கள்
 
04-Dec-2017 02:29:53 Srinivasan ramarao said : Report Abuse
Good effort. Keep it up. Expects more works in the comic form to educate the children
 
02-Dec-2017 01:10:52 kalidas said : Report Abuse
இது ஒரு மகத்தான சேவை இது தொடர வேண்டும். இது போல் பல தமிழ் வரலாறுகள் வர வேண்டும் நன்றி நன்றி நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.