LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

பூமரம்

அடுக்குமாடி

கட்டடத்தின் கீழேதான்

அந்த இடம்


அமைதியைத்தரும்

அந்த இடத்தில்

கவிதையைத்தேடித்தான்

தினமும் வருகிறேன்


முதியோர் அமரும்

மூலையிலிருந்து

படித்துவிட்டுத்திரும்புவது

வழக்கம்


உடற்பயிற்சிக்காக

முதியவர்கள் வந்து

பேசாமலிருப்பதும்

பேசிக்கழிப்பதும் வழக்கம்


வீட்டிலே வேலையே

இல்லாமல்

 உடம்பைக்கனக்கவிட்டவர்கள்

கண்டிப்பாக வந்து

அங்கேயிருக்கும்

உடற்பயிற்சிக்கருவிகளோடு

உரையாடுவதும் வழக்கம்


வழக்கத்திற்குமாறாக

மஞ்சள்பூக்களை

உதிர்த்துவிட்டு நின்றது

மரம்


அழகின்வியப்பில்

தேடிக்கொண்டேவந்தேன்

என்னையே தோண்டினேன்


பூக்களைச்

சிரிப்பாக்க்கருதினேன்

உதிர்த்துவிட்டமனிதனை எண்ணினேன்


சிரிப்பை உதிர்த்துவிட்டு

நிற்கிறது வெறும்மரம்


வெறும் மரமா?

வெறும் மனிதனா?


நாளைக்கும் யோசிக்கலாமே

என

விடுதலையடைந்தேன்

 

--பிச்சினிக்காடு இளங்கோ

by Swathi   on 10 Feb 2014  1 Comments
Tags: Maram   Maram Kavithai   Poomaram   Poomaram Kavithai   Maram Tree   பூமரம்   பூமரம் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
அரசமரம்  -இல.பிரகாசம் அரசமரம் -இல.பிரகாசம்
மரத்தின் அருமை! - இல.பிரகாசம் மரத்தின் அருமை! - இல.பிரகாசம்
ட்விட்டர் என்ற ஆலமரம் ட்விட்டர் என்ற ஆலமரம்
திருவக்கரையும் கல்மரப் பூங்காவும் !! திருவக்கரையும் கல்மரப் பூங்காவும் !!
பூமரம் பூமரம்
கருத்துகள்
16-Jul-2017 11:48:34 Mathy said : Report Abuse
Alagiya kavithai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.