LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF

அஞ்சலட்டை ...

ஒரு காலத்தில் கோலோச்சிக்கொண்டு இருந்த விஷயம் ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்தால் அது தமிழ்நாட்டில் லோக்கலாக இருந்தால் மூன்று நாட்கள் ஆகும் வெளியூர் ஆக இருந்தால் நான்கு நாட்கள் ஆகும் முக்கியமாக மாலை ஆறு மணிக்கு லாஸ்ட் கட்டுகளை எடுத்து ரயில் வழியாக தபால் பட்டுவாடா செய்யும் ஆர் எம் எஸ் தபால் அலுவலகத்துக்கு நேரில் போய் கடிதங்கள் விரைவில் கிடைக்க போட்டு விட்டு வருவோம்....
நிறைய நேரம் ஜோல்னா தபால் பையில் தபால்காரர் கடிதங்களை எடுத்து போட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் போய் கொடுத்து இருக்கின்றோம் லேட் பீ எல்லாம் ஒட்டி போட்டு செய்தியை விரைவாக சேர்க்க நாய் படாதபாடு பட்டு இருக்கின்றோம்...ஆனாலும் அதன் பாதிப்பு இப்போது இல்லைவே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும் இன்றைக்கு நினைத்த உடன் பேச முடிகின்றது ஆனால் அதற்கு முன் பர்சனல் செய்திகளை பகிர்ந்து கொள்ள கடிதங்கள் மட்டுமே பொது மக்களுக்கு உறுதுணையாக இருந்தன கடிதங்கள் மட்டுமே,....
முக்கியமாக காதலை வயர்ப்பது என்பது பெரிய பாடு.... கடிதம் எழுதவேண்டும்... வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் படித்த பின்னே சம்பந்த பட்டவரிடம் அந்த கடிதம் போய் சேரும்... ஆனாலும் அதில் சங்கேத மொழியில் காதலை உணர்த்த வேண்டும் அதெல்லாம் பெரிய கொடுமை
ஒரு காலத்தில் தபால்காரர்கள் தெய்வத்துக்கு நிகராகத்தான் மதிக்கப்பட்டார்கள்
படிக்காத கிராமத்து மக்களுக்கு கடிதத்தில் வந்த செய்தியை பொறுமையாக படித்து காட்டி அன்பளிப்பாக மல்லாட்டை , முந்திரி போன்றவற்றை பெற்றுக்கொண்டு செல்வார்கள் இன்னும் சிலர் சுருக்குபையில் இருந்து இரண்டு ரூபாய் பணம் எடுத்துக்கொடுப்பார்கள்.
சின்ன விஷயமாக இருந்தால் தபால் கார்டில் எழுதிப்போடுவார்கள்…. அடுத்த வெள்ளிக்கிழமை ஊருக்கு வருகின்றேன். பெரிய பெண்ணுக்கு வரன் பற்றி பேசி முடிவெடுப்போம்…
என்பதுகளில் நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது தபால்கார்டும் தபால்காரர்களும் எங்களுக்கு வருடா வருடம் தெய்வமானார்கள்...புரொமோட்டேட் டூ தி நெக்ஸ்ட் கிளாஸ் என்ற பாடாவதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்து எச் எம் கையேழுத்து போட்டு வரும் தபால் கார்டுகளை பார்த்து வருட முடிவில் ரிசல்ட் பார்த்து குதித்து தொலைப்போம்.... சில நேரங்களில் ஜாக்கி நீ பாஸ் பண்ணிட்டே என்று தபால்காரர் கார்ட்டை படித்து சொல்லி விட்டு போய் விடுவார். சில நேரங்களில் சஸ்பென்சை தபால்கார்டுகள் கெடுத்து தொலைக்கும்...
பொங்கல் வாழ்த்துக்களின் போது நான் அச்சடித்த வாழ்த்து அட்டைகள் அனுப்புவதிற்கு பதில் 15 பைசா தபால் அட்டைகள் ஒரு 100 வாங்கி அதில் ஸ்கெட்ச் பென்சிலால் என் கையால் வாழ்த்து எழுதி அனுப்புவேன்.....
அதே தபால் கார்டு சீட்டு குலுக்கல் தேதி வரும் 18 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருப்பதால் தவனையை சீக்கிரம் கட்டவும் என்ற கார்டுகளும்.... வட்டி தேதியை குறிப்பிட்டு சேட்டுகள் பண்டல் பண்டலாய் தபால் கார்டுகளை யூஸ் செய்து இருக்கின்றார்கள்....
நேற்று எதேச்சையாக பழைய சூட்கேசை பரணில் இருந்து இறக்கி திறந்து பார்க்க ஏகப்பட்ட கடிதங்கள்.... சென்னையில் இருக்கும் போது நான் எழுதிய கடிதங்கள்... எனக்கு அம்மா எழுதிய கடிதங்கள்.. முக்கியமாக என் அம்மா எனக்கு எழுதிய முதல் கடிதத்தை படித்த போது என் கண்களில் என்னை அறியாமல் நீர்....
அம்மா எழுதிய கடிதங்களையும் , காதலி, மனைவி , சகோதரி எழுதிய கடிதங்களை பத்திரபடுத்தி இருந்தால் எடுத்து வாசித்து பாருங்கள்... அது சொல்லும் அவர்கள் செலுத்திய உண்மையான அன்பை...

- ஜாக்கிசேகர்.

by Swathi   on 06 Mar 2016  0 Comments
Tags: அஞ்சலட்டை   Anjal Attai   Post Card              
 தொடர்புடையவை-Related Articles
அஞ்சலட்டை ... அஞ்சலட்டை ...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.