|
||||||||
உருளைக்கிழங்கு கூட்டு (potato gravy) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு - 250 கிராம் பச்சை மிளகாய் - 3 எலுமிச்சம் பழம் - 1 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயம் - அரை டீஸ்பூன் பயத்தம் பருப்பு - அரை ஆழாக்கு நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.பயத்தம் பருப்பை வெறும் கடாயில் வறுத்து மஞ்சள் தூள் போட்டு வேகவிட வேண்டும். 2.உருளைக்கிழங்கினை தோல் சீவி, துண்டங்களாக நறுக்கி வேகும் பருப்புடன் சேர்க்க வேண்டும். அத்துடன் கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும். 3.கூட்டு நன்கு வெந்து கெட்டியானவுடன், கடாயில் நெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி கூட்டில் சேர்க்க வேண்டும். 4.இறக்குவதற்கு முன்பு ஒரு எலுமிச்சையை பிழிந்து விட்டுக், கிளறி இறக்கவும் |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|