|
||||||||
உருளைக் கிழங்கு பால் கூட்டு (potato milk gravy) |
||||||||
தேவையானவை: தேங்காய் – 1/2 மூடி உருளைக் கிழங்கு – 1/4 கிலோ பச்சை மிளகாய் – 5 இஞ்சி – 1 துண்டு வெங்காயம் – 1 தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – கொஞ்சம் உப்பு – தேவையான அளவு செய்முறை:- 1.தேங்காயைத் துருவி மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். 2.உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மூன்றாவதாக எடுத்த தண்ணீர்ப் பாலில் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும். 4.இப்பொழுது இரண்டாவதாக எடுத்த சற்றே கெட்டியாகவுள்ள தேங்காய்ப் பாலை ஊற்றி, உருளைக் கிழங்குத் துண்டுகளைப் போடவும்.உப்புப் போட்டுக் கொதிக்க வைக்கவும். 5.கொஞ்சம் கொதித்து வரும் போது, கெட்டியான தேங்காய்ப் பாலை அத்துடன் சேர்த்து, உருளைக் கிழங்கு குழையும் பக்குவமாகும் போது, கறிவேப்பிலை போட்டு, தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கி வைக்கவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|