|
||||||||
உருளைகிழங்கு சாதம்(Potato Rice) |
||||||||
தேவையானவை : உருளைக்கிழங்கு - 3 பெரிய சீரகம் - சிறிது உளுத்தம்பருப்பு - சிறிது கடலைப்பருப்பு - சிறிது பாஸ்மதி அரிசி - 1/2 கப் வெங்காயம் - 2 உள்ளி - 4 பல்லு மஞ்சள்தூள் - சிறிது செத்தல் மிளகாய் - 2 கறித்தூள் - 1 டீஸ் ஸ்பூன் கடுகு - சிறிது ரெய்சின் - சிறிது கொத்தமல்லி இலை உப்பு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி,நிலக்கடலை - சிறிது
செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை களைந்து வேகவைத்து எடுக்கவும்.உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.அவித்த உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுள் கறித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, செத்தல் மிளகாயை போட்டு வதக்கவும். 2.வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுள் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் அதனுள் மசித்த கிழங்கை போட்டு கிளறவும்.பின்னர் சோற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்க்கவும்.சுவையான உருளை சாதம் தயார். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|