LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF
- நெல்

பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா

பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது.

 

வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலைபாகங்களில் சென்று சேர்வதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களிலும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றன.

 

சத்துக்களை செடிகளுக்கு பொருத்திக் கொடுப்பதில் பொட்டாஷ் பாக்டீரியாவின் பங்கு மிகவும் இன்றியமையாதது. செடிகள் குறிப்பிட்ட, பொருத்தமான பாக்டீரியாவை இணைக்கும் உயிர் வேதியல் கூறுகள், செடியின் வேர்களில் பாக்டீரியா ஏற்படுத்தும் மாற்றங்கள்,செடிகளிலிருந்து சுரக்கப்படும் வேர் சத்துக்கள்,வளர்ச்சி ஊக்கிகள்,அங்கக அமிலங்கள்,பசை போன்ற மாவுச் சத்துக்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வேர் மண்டலங்களுக்கு ஈர்க்கின்றன. இவை இயற்கையாக காலங்காலமாய் மண்ணில் நடந்து கொண்டு இருக்கின்றன.

.

தானியப்பயிர்களின் தண்டுப் பகுதிகள் உறுதியடைந்து இருக்கவும் உதவுகின்றது. தழைச்சத்து இடுவதினால் செழித்து வளரும் செடிகள், அதிக பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

 

சாம்பல், சிலிக்கா சத்து இடுவதினால் செடிகளின் கட்டமைப்பு சற்று கடினமடைவதுடன், எளிதில் நோய்க்கிருமி, பூச்சித்தாக்குதலிருந்து செடிகள் காப்பாற்றப்படுகின்றன.மேலும் செடிகளில் மாவுச்சத்து உற்பத்தி, அமினோ அமிலங்கள், புரத தயாரிப்பிலும் செயலாற்றுகின்றது.

 

எனவே முழுமையான பயன் அடைய வேண்டுமென்றால் பொட்டாஷ் சத்துகள் அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவில், தகுந்த தருணத்தில் இடுதல் அவசியமாகும். உயிரின இயக்கங்கள் சீரான முறையில் இயங்க சத்துக்களின் சுழற்சி மிக முக்கியமானது.

 

இச்சுழற்சியை நிலைப்படுத்தி இயக்க நுண்ணுயிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. 
இயற்கையில் மக்குதல் என்பதே சிதைவுறல் என்பதாகும். இதனால் தழை, மணி, கரிம, சாம்பல், சலிக்கா, கந்தகம், துத்தநாகம்,  இரும்பு போன்ற சத்துக்களின் சுழற்சி சீராக நடைபெறுகின்றது..

 

இவ்வாறு பாக்டீரியா, வேர் பாகங்களில் இனப்பெருக்கம் செய்து, அதனை பெருக்கிக் கொள்கின்றது. இவை கூட்டாக காற்றில் இருக்கும் தழைச்சத்து மற்றும் மண்ணில் இருக்கும் இதர சத்துக்களான மணி, சாம்பல், சிலிக்கா, இரும்பு போன்றவற்றை ஈர்த்து செடிகளுக்கு கொடுக்கின்றன.

 

சாம்பல், சிலிக்கா சத்து இடுவதினால் செடிகளின் கட்டமைப்பு சற்று கடினமடைவதுடன், எளிதில் நோய்க்கிருமி, பூச்சித்தாக்குதலிருந்து செடிகள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் செடிகளில் மாவுச்சத்து உற்பத்தி, அமினோ அமிலங்கள், புரத தயாரிப்பிலும் செயலாற்றுகின்றது.

 

முழுமையான பயன் அடைய வேண்டுமென்றால் சாம்பல் சத்து இடுதல் அவசியமாகும். பொட்டாசியத்தைக் கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் சிலிக்கா எனப்படுகின்றன.அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்துக் காணப்படும் சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயனிகளின் கூட்டுக்கலவைகளிலிருந்து சிலிக்காவைக் கரைத்து பொட்டாசியத்தைக் களிமண்ணிலிருந்து விடுவிக்கின்றது. 

 

அவ்வாறு விடுவிக்கப்படும் பொட்டாசியம் நீரில் கரைந்து செடிகளினால் எளிதில் உட்கொள்ளும் நிலையில் மாற்றப்படுகின்றது. பொட்டாஷ் உரத்தின் அதிக விலையை மனதில் கொண்டு இயற்கையாக நம் மண்ணில் உள்ள சாம்பல் சத்தினையே கிடைக்கப் பெறச் செய்ய இவ்வகை பாக்டீரியாக்களை உபயோகப்படுத்தலாம். பொட்டாஷ் உரம் சீராகவும் மிக நேர்த்தியான முறையிலும் சாம்பல்சத்தினை செடிகளுக்கு ஈர்த்து செடிகளுக்கு கொடுக்கின்றன.

 

பொட்டாஷ் உரம் இடுவதால் அதிக விளைச்சல், பயிர்களின் தரம் அதிகரித்து காணப்படும்.  பொட்டாஷ் உரம் சாம்பல் சத்து மட்டுமல்லாது மணிச்சத்து, சிலிக்கா போன்ற சத்துக்களையும் கரைக்கக் கூடியதாகும். மேலும் இவை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றுடன் கூட்டாக இடும் போது, அதன் திறன் மேலும் சிறந்து விளங்குகின்றது. இத்தகைய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பயன்படுத்துவதால் நாம் பொட்டாஷ் உரத்தேவையை 25 முதல் 50 சதம் வரை குறைத்து இடலாம்.

 

இவ்வகை நுண்ணுயிர்கள் இடுவதினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கையாக சத்துக்களின் சுழற்சி மற்றும் மண்ணின் விளையும் திறன் மேம்படும்.

 

தொடர்புக்கு 
0451-2555745
9629224700

ஆதாரம் : வளரும் வேளாண்மை

by Swathi   on 09 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று!!!  இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.. இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன் இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.