LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

போட்டி வைத்தால் இப்படியிருக்கும்

இப்போ என்ன பண்றது? அந்த பிஸ்கட் கம்பனியோட தலைவர் யோசித்தார்.

 

கடைகளில் இதுவரைக்கும் அவரோட பிஸ்கட் நல்லா விற்றிருந்தது. இப்போ விற்பனை ரொம்ப ரொம்ப குறைவாகி கொண்டே வருகிறது. காரணம் புதுசா ஒரு பிஸ்கட் வந்திருக்கு. அதுவும் வட்ட வடிவமா, அதில் ஒரு முந்திரிப்பருப்பு வைத்த டிசைன் எல்லாம் போட்டு அழகாக இருக்கு.

 

நம்ம கம்பனி முதலாளியும் அந்த கம்பனி பிஸ்கட்டை வாங்கினார். எப்படி இருக்குண்ணு தெரிஞ்சுக்கத்தான் அதை வாங்கினார். விளையும் கொஞ்சம்

குறைவாகத்தான் இருந்தது.

 

பிஸ்கட்டு பொட்டலத்தைப் பிரிச்சார். நல்ல மணம் மூக்கில் ஏறியது. சாப்பிட்டுப் பாத்தார். நல்லாத்தான் இருந்தது. நாம் புதுசா எதாவது செய்யாமலிருந்தா கம்பனியை இழுத்து மூடிட வேண்டியதுதான். அவருக்கு ஒரே கவலையாப்போனது.

 

அடுத்த நாள் அவர் தன்னோட கம்பனியில் பிஸ்கட் தயார் செய்பவரை எல்லாம் கூப்பிட்டார்.

 

"இங்க பாருங்க, நம்ம பிஸ்கட்டோட விற்பனை ரொம்ப குறைவாகிவிட்டது. நம்ம எதாவது செய்யணும். புதிய சுவையில், புதிய பிஸ்கட் தயரிக்கனும். ஒரு வாரத்திற்குள்ள எனக்கு புதிய சுவையில் புதிய வடிவத்தில் பிஸ்கட் உண்டாக்கித் தரணும். இல்லேண்ணா உங்களோட சேர்ந்து நானும் வீட்டிலில் போய் சும்மா இருக்க வேண்டியதுதான்.'' என்றார்.

 

வேலைக்காரங்களும் "கண்டிப்பா முயற்சி செய்கிறோம்'' என்றார்கள்.  புதிய பிஸ்கட்டுகளை செய்வதைப் பற்றி யோசிச்சாங்க. ஒரு வாரம் ஓடி விட்டது. கம்பனி முதலாளி ரொம்ம எதிர்பார்ப்போட கம்பனிக்கு வந்தார்.

 

வேலைக்காரங்க நாலைந்து புதிய பிஸ்கட்டுகளை கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா முதலாளிக்கு அந்தப் பிஸ்கட்களை பார்க்கவே பிடிக்க வில்லை. நிறம் மங்கலா இருந்தது.

 

வடிவமும் சரியா அமைய வில்லை. அப்புறம் பிஸ்கட்டத் திண்ணு பார்த்தார். புதிய சுவையாக அவருக்குத் தோன்ற வில்லை. அவர் ரொம்ப எதிர்பார்த்து வந்தார் ஆனா ஏமார்ந்து விட்டார்.

 

இனி என்ன செய்யலாம் என்று தீவிரமா யோசித்தார். பிஸ்கட் தயார் செய்பவர்களுக்கு திறமை இருக்கு. ஆனா அதை நல்லா பயன்படுத்தத் தெரிய வில்லை.

நாலைந்து நாட்களாக யோசித்தார். இருக்கிறவங்களை மாற்றி வேறு புது ஆட்களை வைத்தால் எப்படியிருக்கும்  என்று யோசித்தார். புது ஆட்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது.

 

அவரகளை முழு நம்பவும் முடியாது. கடைசியில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கும் என்று நினைத்து அந்த யோசனையை கைவிட்டார்.

 

அப்புறம் நாலைந்து நாட்களாக யோசித்தார். பிஸ்கட்டு தயார் செய்பவர் உள்ளே ஒரு போட்டி வைத்தால் எப்படி இருக்கும். யாரு நல்லசுவையாக  சூப்பரா பிஸ்கட் தயார் செய்கிறார்களோ அவங்களுக்கு இரண்டு லட்சம் ரூபா பரிசு கொடுக்கலாம்.

 

என்று நினைத்தார்.

 

அடுத்த நாள் அதை பிஸ்கட் தயார் செய்பவர்களிடம் சொல்லவும் செய்தார்.

 

அங்கிருந்து தான் பிரச்சனையே ஆரம்பமானது. அதுவரைக்கும் எல்லாரும் புது பிஸ்கட் உண்டாக்கிற முறையை, அவங்க நினைகிரதை அடுத்தவங்ககிட்ட சொல்லி ஆலோசனை கேட்டுச் செய்தாங்க. அதனால் பிஸ்கட் நல்லாயில்லேண்ணா எல்லோருக்கும் தானே பொறுப்பு.  என்று நினைத்து கொண்டு அதிக அக்கறையெடுக்காமல் இருந்தாங்க.

 

போட்டி வந்தபோது வேறு பிரச்சனை வந்தது. ரொம்ப தீவிரமா யோசிச்சாங்க.  ஆனா ஒருத்தர் யோசிக்கிற திட்டத்தை அடுத்தவங்க கிட்ட சொல்லாமல் மறைத்தாங்க. மட்டுமல்ல, மத்தவங்க ஜெயிக்கக் கூடாது. பரிசு எனக்கே கிடைக்கணும் என்கிற மாதிரியான கெட்ட எண்ணங்களும் தோன்றியது.

 

அந்தக் கம்பனியில் ரமேஷ்ங்கிறவர் எல்லாருக்கும் புடிக்கும். உண்மையில் அவர் தான் தலைமைச் சமையல்காரர் மாதிரி. ஒவ்வொரு முறையும் மாவு கலக்கிறது, சக்கரை போட்டது, மணத்துக்கான கலவையைக்கலந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறவரர் அவரர் தான். அதனால் இந்தப் பரிசுத்தொகை அவருக்குக் தான் கிடைக்க  அதிக வாய்ப்பு இருக்கும் என்று எல்லாரும் நினைத்தாங்க.

 

இருந்தாலும் ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தெரிந்த மாதிரி பிஸ்கட் உண்டாக்கி போட்டியில் கலந்துக்கலாம் என்று முடிவு செய்தாங்க. ஆனா சந்திர மூர்த்தி மட்டும் அந்தத்தொகை தனக்கே கிடைக்கனும்  என்று நினைத்தார். அதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தார். மனசில் ஒரு திட்டம் உதித்தது. அந்தத் திட்டப்படி எல்லாம் நடக்கிறதாகவும் இரண்டு லட்சம் ரூபாத் தனக்குக் கிடைக்கிறதாகவும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

 

அவர் பிஸ்கட் உண்டாக்கிற நாள்ளில் ரமேஷுக்குப் பக்கத்து மேசையைத் தேர்ந்தெடுத்தார் .ரமேஷ் எந்தளவுக்கு மாவு எடுக்கிறார் , என்னென்ன

பொருளையெல்லாம் மாவில் கலக்கிறார், என்று பார்த்து விட்டு அதே மாதிரி அவரும் செய்தார். ரமேஷ் அதைக்கவனிக்கவே இல்லை. இப்படிக் கலக்கியதை ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கணும் அப்போத்தான் மாவில் எல்லாம் நல்லா பிடிக்கும். அதனால் கலக்கின மாவை அப்படியே வச்சிட்டு எல்லாரும் வேற வேற வேலைகளப் பார்க்கப்போயிட்டாங்க. அந்த நேரம் பார்த்து சுந்தர மூர்த்தி ஒரு கை உப்பை அள்ளி ரமேஷ் கலக்கி வைத்த மாவில் யாருக்கும் தெரியாமல் தூவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி வேலை செய்துகொண்டிருந்தார்.

 

அடுத்த நாள் அவர்கள் கலக்கி வைத்த மாவில் பிஸ்கட் பண்ணினாங்க. கம்பனி முதலாளி வந்தார். பிஸ்கட்ட சாப்பிட்டுப் பாத்தார். ரமேஷோட பிஸ்கட்டைச் சாப்பிட்டாரு. "ஆகா... அருமையாக இருக்கு. இதுவரைக்கும் யாரும் இப்படியொரு பிஸ்கட்டை உண்டாக்கவே இல்லை. இனிப்புக்கு இனிப்பு, உப்புக்கு உப்பு. பாதிக்குப் பாதி. "ரமேஷ் உங்களுக்குத்தான் அந்த இரண்டு லச்சம். மட்டுமல்ல அடுத்த மாசத்திலிருந்து சம்பளமும் கூட்டித்தர்றேன்'' என்றார்.

 

சுந்தர மூர்த்திக்கு அப்படியே உடைந்து போய் உக்காந்திட்டார். அவரும் ஒரு பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டுப் பாத்தார். அட ஆமா நல்லாத்தான் இருக்கு. ஒரு பிடி உப்பைப் போட்டாலும் போட்டேன். என்னோட மாவிலயே போட்டிருக்கலாம்.

 

ரமேஷ்க்குக் கிடைக்கக் கூடாதுண்ணு நினைத்து போட்டேன். ஆனா பரிசும் கிடைத்தது, அதிக சம்பளமும் கிடைக்குது.

 

தன்னோட தலையில் தானே மண்ணை வாரி போட்டது மாதிரியாகிவிட்டதே என்று நினைத்தார் சுந்தரமூர்த்தி.

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
24-Apr-2018 06:11:46 ஷீபா said : Report Abuse
தன வினை தன்னை சுடும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.