|
|||||
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் |
|||||
கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் 3வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி பெற்றனர். கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர். இதன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் பிரக்ஞானந்தா 45வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் குகேஷ், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சி மோதினர். இதில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய குகேஷ், போட்டியை 'டிரா' செய்தார். மூன்று சுற்றுகளின் முடிவில் தலா 2.0 புள்ளிகளுடன் குகேஷ், ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் பேபியானோ காருணா 'டாப்-3' வரிசையில் உள்ளனர். அடுத்த இரு இடங்களில் தலா 1.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் உள்ளனர். வைஷாலி வெற்றி பெண்களுக்கான 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் 3வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, பல்கேரியாவின் நுார்கியுல் சலிமோவா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய தமிழகத்தின் வைஷால், 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை கொனேறு ஹம்பி, சீனாவின் டான் ஜோங்கிக்கு எதிரான போட்டியை 'டிரா' செய்தார். மூன்று சுற்றுகளின் முடிவில் வைஷாலி, ஹம்பி, ரஷ்யாவின் கேடரினா லாக்னோ தலா 1.5 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். |
|||||
by Kumar on 13 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|