LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த பெண்ணை மீட்ட 7 தமிழர்களுக்கு அதிபர்,விருந்து

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களைப் பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் கட்டோங் சாலையின் ஒரு பகுதி கடந்த ஜூலை 26-ம் தேதி திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு வாகனம் அந்தப் பள்ளத்துக்குள் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் அந்தப் பள்ளத்தில் எட்டிப் பார்த்துள்ளனர்.
சகதியாக இருந்த அந்தப் பள்ளத்தில் ஒரு பெண் வாகனத்திலிருந்து வெளியில் வந்துள்ளார்.

இதையடுத்​து, அவரை மீட்​கும் முயற்​சி​யில் அவர்​கள் ஈடு​பட்​டனர். இதன் ஒரு பகு​தி​யாக, ஒரு கயிற்றை விட்டு அந்​தப் பெண்ணை பத்​திர​மாக மீட்​டனர்.

இந்​நிலை​யில், அந்​தப் பெண்ணை மீட்ட தமிழர்​களுக்கு பாராட்டு குவிந்து வரு​கிறது. இதனிடையே, அந்த 7 பேருக்​கும் பாராட்டு தெரி​வித்​துள்ள அந்​நாட்டு அதிபர் தர்​மன் சண்​முகரத்​தினம், வரும் 3-ம் தேதி தன்னை நேரில் வந்து சந்​திக்​கு​மாறு அழைப்பு விடுத்​துள்​ளார். அப்​போது 7 பேருடன் அதிபர் உரை​யாடுவதுடன் அவர்​களுக்கு விருந்து அளிக்கவும் திட்​ட​மிட்​டுள்​ளார்.

பிச்சை உடையப்பன் சுப்பையா , வேல்முருகன் முத்துசாமி, பூமாலை சரவணன், கணேசன் வீர சேகர், போஸ் அஜித் குமார்), நாராயணசாமி மாயகிருஷ்ணன் மற்றும் சாத்த பிள்ளை ராஜேந்திரன்  ஆகியோர்தான் அந்தப் பெண்ணை மீட்டவர்கள்.

இதனிடையே, அந்த 7 பேருக்​கும் 1,639 பேர் 72,241 சிங்​கப்​பூர் டாலரை பரி​சாக வழங்கி உள்​ளனர் என அங்​குள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்​கான தொண்டு நிறு​வனத்​தின் முகநூல் பக்​கத்​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.


by hemavathi   on 04 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.