LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சிய'த்தை மின் தளத்தில் வெளியிட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டிடத்தில் உள்ள நாடக மையத்தில்  நடைபெற்ற விழாவில், காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான  'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின் தளத்தில் வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் எனச் சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பற்பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்​டு​வந்த சமூகச் சீர்​திருத்​தங்​கள் குறித்த தகவல்​களைத் தனது உரை​யில் அதிபர் மேற்​கோள் காட்​டி​னார்.
இவ்​விழா​வில் அதிபர் தர்​மன் சண்​முகரத்​னம் பேசும்​போது, ‘‘பண்​பாட்டை பேணும் உறை​விட​மாக சிங்​கப்​பூர் தொடர்ந்து திகழ வேண்​டும். எந்த வகையி​லான பாகு​பாட்​டை​யும் பொறுத்​துக்​கொள்​ளாத சமூக முன்​னேற்​றம் தொடர்ந்து நிலவ வேண்​டியது மிக​வும் அவசி​யம்.

பல துணை இனக் கலாச்​சா​ரங்​கள் உட்படப் பண்​பாடு​களைப் பாது​காக்​கக்​கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்​டும். இதுவே உலகளா​விய இந்​திய சமூகத்​துக்கு மத்​தி​யில் சிங்​கப்​பூர் தமிழர்​களை​யும் சிங்​கப்​பூர் இந்​தி​யர்​களை​யும் தனித்​து​வ​மிக்​கவர்​களாகத் திகழச் செய்​யும்’’ என்​றார்.

சிங்கப்பூர் தமிழ்ப் பண்​பாட்டு மைய​மும் தேசிய நூலக வாரிய​மும் இணைந்து உரு​வாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம்’ மின் நூல், நாட்​டில் தமிழிலும் ஆங்​கிலத்​தி​லும் உரு​வான முதல் கலைக்​களஞ்​சி​யம் என்ற சிறப்​பைப் பெற்​றுள்​ளது.

இதன் அங்​க​மாக, தமிழ்ச் சமூகத்​தின் கதைகள், வரலாற்​றைத் தலை​முறை கடந்​தும் கடத்​தும் நோக்​கில் ஏறத்​தாழ 375 பகு​தி​களில் பல்​வேறு தகவல்​களை விவரிக்​கும் துல்​லிய​மான பதிவு​கள் தகுந்த ஆதா​ரத்​துட​னும் புகைப்​படங்​களு​ட​னும் தேசிய நூலக வாரி​யத்​தின் மின்​தளத்​தில் இடம்​பெற்​றுள்​ளன.

கலைக்​களஞ்​சி​யத்தை இணை​ய​வெளி​யில் படிப்​ப​தற்​கான வழி​முறை, இரு​மொழிகளி​லும் ஒருசேரப் படிக்க உதவும் தொழில்​நுட்​பம், வாழும் கலைக்​களஞ்​சி​யத்​தில் புதிய தலைப்​பு​களை இணைக்க என்ன செய்ய வேண்​டும் என்​பது பற்​றி, சிங்​கப்​பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம் தொகுப்​பின் துணை ஆசிரியர்​கள் அழகிய பாண்​டியன், சிவானந்​தம் நீல​கண்​டன் ஆகிய இரு​வரும் விளக்​கினர்.

விழா​வில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்​பாட்டு மையத்​தின் தலைமை நிர்​வாகி​யும் தொகுப்​பின் ஆசிரியரு​மான அருண் மகிழ்​நன் பேசும்​போது, ‘‘இந்த மின் நூல் மக்​களைப் பற்றி மக்​களால் உரு​வாக்​கப்​பட்ட தேர். இந்த அருஞ்​செல்​வம் உருப்​பெற உதவி புரிந்​தோருக்கு நன்​றி. இதனை வாழும் களஞ்​சி​ய​மாக நிலைக்​கச் செய்ய, சமூகத்​தைத் தொடர்ந்து ஈடு​படுத்​தும் முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்’’ என்​றார்.

தேசிய நூலக வாரிய தமிழ்​மொழிச் சேவை​கள் பிரி​வின் துணை இயக்​குநரு​மான அழகிய பாண்​டியன் மேலும் கூறும்​போது, ‘‘இந்​தக் கலைக்​களஞ்​சி​யத்தை உரு​வாக்​கு​வதற்​கான மூன்று ஆண்​டுப் பயணம் சுவாரசி​ய​மானது. எதிர்​காலச் சந்​த​தி​யினருக்​கான ஒரு கரு​வூலத்தை உரு​வாக்​கு​வ​தில் பங்​காற்ற கிடைத்த வாய்ப்​பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். தேசிய நூலக வாரி​யம் இருக்​கும் வரை சிங்கப்பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம் வாழும்’’ என்​றார்.

 

by hemavathi   on 04 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம் 82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.