LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வாஷிங்டன் காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் காவல்துறை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், குற்றங்கள் அதிகரித்ததாகக் கூறி அத்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் தலைநகராகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட பகுதி வாஷிங்டன். இந்த நகரின் காவல்துறை மாநகரத்தந்தை முரியல் போவ்சர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

கடந்த வாரம் அரசு முன்னாள் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அதிபர் டிரம்ப், நகரில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், தலைநகரின் காவல்துறை தன் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'வீடு இல்லாதவர்கள் நகரை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்குத் தங்கும் இடம் வழங்கப்படும். ஆனால் நகரை விட்டுத் தொலைவில் இருக்கும். குற்றவாளிகள் வெளியேற வேண்டியதில்லை. உங்களைச் சிறையில் அடைக்கப் போகிறேன்' என்றார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று குற்ற அவசர நிலையை அறிவித்து, காவல்துறைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். இது குறித்து அவர் கையெழுத்திட்ட உத்தரவில் "வாஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ளன. கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப் பயணியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் காவல்துறைஎன் அதிகாரத்தின் கீழ் பயன்படுத்தத் தீர்மானிக்கிறேன். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

 

 

by hemavathi   on 13 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.